12வது உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கோலாகளமாக நடைப்பெற்று வருகிறது. இதில் மொத்தம் 45 லீக் போட்டிகள் 3 நாக் அவுட் போட்டிகள் என மொத்தம் 48 போட்டிகள் நடைபெறும். இந்நிலையில் இந்திய தனது இரண்டு ஆட்டத்திலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.
இந்திய அணி தனது மூன்றாவது போட்டியை நீயூசீலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த இரு அணிகளும் பலம் வாய்ந்த அணியாக தற்போது திகழ்கின்றது. இந்த போட்டி வருகின்ற ஜூன் 13 ஆம் தேதி இங்கிலாந்தில் இருக்கும் நாடிங்காம்மில் ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த இரு அணிகளும் இந்த உலகக் கோப்பையில் அனைத்து போட்டிகளிலும் வெற்றியை மட்டும் பெற்றுள்ளனர். நியூசீலாந்து அணி புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்திய அணி நீயூசீலாந்திற்கு எதிரான பயிற்சி போட்டியில் தோல்வியை பெற்றது. நீயூசீலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தற்போது இந்த கட்டுரையில் தனது அணிக்காக சிறப்பாக விளையாடும் இரு வீரர்களை பற்றி பார்ப்போம் :
#1.புவனேஷ்வர் குமார் - இந்திய அணி
இந்த உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடும் XI வீரர்களில் புவனேஷ்வர் குமார் இடம்பெற்றிருந்தார். ஆனால் இந்திய அணியின் மற்றொரு வீரரான முகமது ஷமி கடந்த ஆறு மாதங்களாக தனது சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக முகமது ஷமி தேர்வு செய்ய வளியுறுத்தினர்.
ஆனால் இந்திய அணி நிர்வாகம் ஷாமிக்கு முன்னால் புவனேஷ்வர் குமாருக்கு முன்னுரிமை கொடுத்து இந்திய அணியில் விளையாடும் XI ல் சேர்த்துக் கொண்டது. இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி விளையாடிய இரண்டு ஆட்டங்களில் அவை நிரூபிக்கப்பட்டுள்ளன.
புவனேஷ்வர் குமார் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நன்கு விளையாடினார். இவர் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான பும்ராவுடன் ஜோடி சேர்ந்து பந்து வீச்சை சிறந்த முறையில் வீசினார். இவர்களின் சிறந்த பந்துவீச்சு எதிரணியை தடுமாற வைத்து விக்கெட்கள் பெற வைத்தது. இவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர், ஸ்மித் மற்றும் ஆரோன் பிஞ்ச் ஆகியோரின் விக்கெட்களை பெற்றார். கடந்த இரு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்துள்ளார். எனவே, நியூசீலாந்திற்கு எதிரான போட்டியில் இவர் மீண்டும் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#2. கேன் வில்லியம்சன் - நியூசீலாந்து அணி
கேன் வில்லியம்சன், ஒரு நியூசிலாந்து சர்வதேச கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் தற்போது நியூசிலாந்து அணியின் கேப்டனாக உள்ளார். அவர் ஒரு வலது கை பேட்ஸ்மன் மற்றும் ஸ்பின் பந்து வீச்சாளர் ஆவார். உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
இந்த உலக கோப்பையில் நியூசிலாந்து அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதாரான போட்டியில் தொடக்க வீரர்கள் யாரும் தனது கடமையை சிறப்பாக செய்யாமல் தனது விக்கெட்களை இழந்தனர். இதன் பின் களமிறங்கிய கேன் வில்லியம்சன் ரோஸ் டெய்லருடன் ஜோடி சேர்ந்து ரன்களை குவிக்க தொடங்கினர்.
இந்திய பந்துவீச்சாளர்கள் இவரை ஆரம்பத்திலே விக்கெட் எடுக்க பல வழிமுறைகளை பயன்படுத்தினர். குறிப்பாக கேதர் ஜாதவ் லோவர் ஆர்ம் பந்துகளை வீசி கேன் வில்லியம்சனுக்கு கடினமான சூல்நிலையை ஏற்படுத்தி கொடுப்பார். இருப்பினும் அவரை விக்கெட் எடுக்க முடியாமல் அனைத்து பந்துவீச்சாளர்களும் கஷ்டப்படுவார்கள்.
பிரெண்டன் மெக்கலத்திற்கு பிறகு அணியை சிறப்பாக வழிநடத்தி செல்கிறார் கேன் வில்லியம்சன். எனவெ, இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இவர் தனது அணியை வெற்றி பெற வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.