2019 ஆம் ஆண்டு 12வது உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறுகிறது. 1975, 1979, 1983 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு ஐந்தாவது முறையாக உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடைப்பெறுகிறது. இந்த ஆண்டு பத்து அணிகள் மோதுகின்றன.
இந்த உலகக் கோப்பை கடந்த மே 30 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 7 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இன்று நடைபெற உள்ள 8வது போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்தியா அணியும் மற்றும் டூபிளஸ்சிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியும் மோதவுள்ளது. இந்தியா அணி உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தனது முதல் ஆட்டத்தை இன்று தொடங்குகிறது. தனது முதல் போட்டியில் வெற்றி பெறுவதற்காக இந்திய அணி தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.
தென்னாப்பிரிக்கா அணி விளையாடிய இரண்டு போடீடிகளிலும் தோல்வி அடைந்ததால் தனது மூன்றாவது போட்டியான இன்று வெற்றி பெற வேண்டும் என்று கட்டாயத்துடன் இருக்கிறது. இன்று இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மோதவுள்ளதால் போட்டி விவரங்கள், ஆடும் 11, மற்றும் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள அணி பற்றிய தகவல்களை இந்த கட்டுரையில் காண்போம்.
போட்டி விவரங்கள் : IND vs SA
தேதி : 5, ஜுன் 2019, புதன்கிழமை
நேரம் : இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் தொடங்கும்.
எங்கே : சவுத்தாம்டன், ரோஸ் பவுல் மைதானம்
லைவ் டெலிகாஸ்ட் : ஸ்டார் நெட்வொர்க் ( star sports )
ஆன்லைன் ஸ்ட்ரீமிங் : ஹாட் ஸ்டார் ( hotstar )
அணி விவரங்கள் :
#1.இந்தியா
இந்திய அணிக்கு கே.எல் ராகுல் 4-வது ஆட்டக்காரராக களமிறங்வது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இளம் வீரரான விஜய் சங்கர் இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடு ஓவரில் பந்து வீசும் குல்தீப் யாதவ் மற்றும் யூசுவெந்திர சஹால் இன்றைய போட்டியில் சிறப்பாக பந்து வீசி சிறந்து விழங்குவார்கள்.
இந்திய அணி வீரர்கள் :
விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா, ஷிகார் தவான், லோகேஷ் ராகுல், விஜய் சங்கர், டோனி (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), யூசுவெந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ரா, ஹர்திக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா , முகம்மது ஷமி.
முக்கிய வீரர்கள் :
1.ரோகித் சர்மா
2.விராட் கோலி
3.பும்ரா
4.ஹர்திக் பாண்டியா
5.தோனி
ஆடும் 11 :
கே.எல். ராகுல், கேதர் ஜாதவ், விஜய் ஷங்கர், எம்.எஸ். தோனி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யூசுவெந்திர சாஹால், எம்.டி. ஷாமி, பும்ரா, ரோஹித் ஷர்மா, ஷிகார் தவான், விராத் கோலி,
#2.தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்கா அணி பங்களாதேஷ் அணியுடன் மோதும்போது லுங்கி நெகிடி தசைப்பிடிப்பால் ஆட்டத்தை விட்டு வெளியேறினார். இதனால் இந்த போட்டியில் அவருக்குப் பதிலாக யாரை சேர்க்கலாம் என்ற பெரிய குழப்பத்தில் உள்ளது தென் ஆப்ரிக்கா அணி. மேலும் வேகப் பந்துவீச்சாளர் ஸ்டெயின் காயம் காரணமாக உலக கோப்பையிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார். ஹசிம் அம்லா இன்று அணியில் இடம் பெறுவார். அதனால் மூன்றாம் இடத்தில் எய்டன் மார்கிராம் பேட்டிங் செய்ய தள்ளப்படுவார்.
தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் :
ஃபாஃப் டூ பிளெசிஸ், ஹாஷிம் அம்லா, குவின்டன் டி காக் , ஐடென் மார்கரம், ரஸ்ஸி வான் டெர் டஸன், ஜே.பி. டுமினி, டேவிட் மில்லர், ஆண்டில் பெஹல்குவேவ், ககிஸோ ரபாடா, லுங்கி நேடி, தாபிரைஸ் ஷம்ஸி, ட்வாய்ன் பிரட்டோரியஸ், கிறிஸ் மோரிஸ், இம்ரான் தாஹிர்.
முக்கிய வீரர்கள் :
1.குவின்டன் டி காக்
2.ஃபாஃப் டூ பிளெசிஸ்
3.ரபாடா
4.இம்ரான் தாஹிர்.
ஆடும் 11 :
ஃபஃப் டூ பிளெசிஸ், டுமினி, டேவிட் மில்லர், ஆண்டில் பெஹில்குவே, கிறிஸ் மோரிஸ், ககிஸோ ரபாடா, ஹெண்டிரிக்ஸ், இம்ரான் தாஹிர், ஹாலிம் அம்லா, குவின்டன் டி காக், ஐடென் மார்கரம் / ரஸ்ஸி வான் டெர் துஸ்ஸன்