நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை தொடர் இந்தாண்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மே 30 ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸிஸ் சீரும் சிறப்புமாக நடைப்பெற்று வருகிறது. இந்தாண்டு பத்து அணிகள் மட்டும் தகுதி பெற்று உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இவங்கை, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், நியூசீலாந்து, பங்களாதேஷ், தென்னாப்பிரிக்கா ஆகிய பத்து அணிகள் தகுதி பெற்று சிறப்பாக விளையாடி வருகின்றனர். மொத்தம் 45 லீக் போட்டிகள் நடக்க உள்ள நிலையில் தற்போது வரை 18லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது.
இதில் சில அணிகள் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டு வருகின்றனர். குறிப்பாக பேட்ஸ்மன்கள் தனது திறமையை பயன்படுத்தி சதம் அரைசதம் என பல சாதனைகளை தொடர்ச்சியாக சாதித்து வருகின்றனர். தற்போது வரை ரோகித் சர்மா, ஷிகர் தவான், ஜேசன் ராய், டேவிட் வார்னர், ஜோ ரூட் ஆகியோர் சதம் அடித்துள்னர். எனவே இவர்கள் இந்த ஆண்டு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் பெற்று சாதனை படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த மூன்று வீரர்கள் கண்டிப்பாக இடம் பெறுவர்கள் என்று அதிகம் எதிர்பார்க்கலாம்.
#3. விராட் கோலி - இந்திய அணி கேப்டன்

விராட் கோலி தற்போதைய இந்திய அணியின் கேப்டன் மற்றும் சிறந்த பேடஸ்மன் ஆவார். இவர் ஓடிஐ டெஸ்ட் என அனைத்து பிரிவிலும் தனது சிறப்பான பேட்டிங் திறமையால் குறைவான போட்டிகளில் அதிக ரன் அடித்தவர் எனும் பட்டம் பெற்றார். இவர் மொத்தம் 228 ஓடிஐ தொடரில் விளையாடி 10,943 ரன்களை அடித்துள்ளார். இதில் 41 சதங்களையும் 50 அரை சதங்களையும் விளாசியுள்ளார். இந்திய கேப்டன் விராட் கோலிக்கு உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என்று குறிக்கொள் கொண்டுள்ளார்.
துரதிருஷ்டவசமாக, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் எடுத்த நிலையில் கோலி தனது விக்கெட்டை இழந்து சுமாரான தொடக்கத்துடன் இந்த உலகக் கோப்பை போட்டியை ஆரம்பித்தார். இதன் பிறகு விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தனது ஆட்டத்தை வெளிப்படுத்து ஆர்மபித்தார். இவர் 77 பந்துகளில் 82 ரன்களை அடித்தார் இந்திய அணி 352 ரன்கள் எடுக்க காரணமாக இருந்தார்.
இந்த போட்டியில் அதிக ரன்கள் அடித்த பட்டியலில் கோலி மிகவும் குறைவாக இருந்தாலும், இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இரு சதங்கள் அடித்து நிலைமையை உயர்த்தினால் ஆச்சிரியமில்லை. எனவே, இந்த உலகக் கோப்பையிலும் இவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல ரன்கள் அடித்து சிறந்த பேட்ஸ்மனாக இருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
#2.ஜோ ரூட் - இங்கிலாந்து வீரர்

இவர் இங்கிலாந்து அணி நடுவரிசை ஆட்டக்காரர் ஆவார். இவரின் பேட்டிங் ஸ்டைல் மிக அழகாக இருக்கும். இவரின் முன்னாள் ஓடிஐ பேட்டிங் தற்போது இங்கிலாந்து அணிக்காக சிறப்பாக பயன்படுத்தி அதிக ரன்கள் அடித்து அணிக்கு பலம் சேர்க்கின்றார். இவர் ஓடிஐ மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை அடித்துள்ளார். இவர் 134 ஒருநாள் சர்வதேச போட்டியில் 5,458 ரன்கள் பெற்றுள்ளார். இதில் 15 சதங்களை விளாசியுள்ளார்.
இந்த உலகக் கோப்பையில் ஜேட் சிறப்பாக தொடங்கியுள்ளார். இவர் கடந்த மூன்று போட்டிகளில் 179 ரன்களை அடித்துள்ளார். அதில் ஒரு சதம் மட்டும் ஒரு அரைசதம் அடித்துள்ளார். 2019 உலக கோப்பை தொடரில் மிகுந்த வெற்றியைப் பெற ரூட் ஒரு வலுவான போட்டியாளராக மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#1. ரோகித் சர்மா - ஹிட் மேன்

கடந்த 4-5 ஆண்டுகளாக பேட்டிங்கில் சிறந்த வீரராக திகழ்கிறார் ஹிட் மேன் ரோகித் சர்மா. இவர் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் மற்றும் இந்திய அணிக்காக சில சவால்களைச் சமாளித்துள்ளார்.
இந்த உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஹிட் மேன் ரோகித் சர்மா 122 ரன்கள் அடித்துள்ளார். இதன் பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஷிகர் தவானுடன் ஜோடி சேரந்து 127 ரன்களை பெற்றுள்ளனர். இதில் ரோகித் 57 ரன்கள் அடித்துள்ளார். முதல் இரண்டு போட்டியிலே சதம் மற்றும் அரைசதம் அடித்து தற்போது சிறந்த நிலையில் இருக்கிறார். இவரின் பேட்டிங் திறமையால் இவர் இந்த உலகக் கோப்பையில் பல சாதனைகளை படைப்பார் என்று எதிர்பார்க்கலாம்.