2019 உலகக் கோப்பை தற்போது இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கோலாகளமாக நடைப்பெற்று வருகிறது. இதுவரை 27 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மதியம் 3 மணி அளவில் மோதவுள்ளது. இதைத்தொடர்ந்து மாலை ஆறு மணி அளவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசீலாந்து அணிகள் மோதவுள்ளது.
இன்றைய இரண்டாவது போட்டியில் மோதும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசீலாந்து அணிகள் உலகக்கோப்பை வரலாற்றில் மொத்தம் 7 போட்டிளில் மோதியுள்ளது. இதில் 4 போட்டிகளில் நியூசீலாந்து வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. எனவே, தற்போது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசீலாந்து அணிகள் மோதும் போட்டி விவரங்கள், விளையாடும் 11 வீரர்கள், முக்கிய வீரர்கள் பற்றிய தகவல்களை காண்போம்.
போட்டி விவரங்கள் - வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசீலாந்து
தேதி: சனி, 22 ஜூன் 2019
நேரம்: 6:00 PM IST
இடம்: ஓலட், டிராஃபோர்ட், மான்செஸ்டர்
லீக்: 29வது லீக் போட்டி, ஐசிசி உலகக் கோப்பை 2019
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் நெட்வொர்க்
ஆன்லைன் ஸ்ட்ரீமிங்: ஹாட்ஸ்டார்
மைதான புள்ளிவிவரங்கள்
முதல் இன்னிங்ஸ் சராசரி: 217
இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி: 192
அதிகபட்ச மொத்தம்: 397/6 (50 ov) ENG vs PAK
குறைந்தபட்ச மொத்தம்: 45/10 (40.3 ov) CAN vs ENG
அதிகபட்ச இலக்கை அடைதல் : 286/4 (53.4 Ov) by ENG vs NZ
குறைந்தபட்ச இலக்கை அடைதல் : 221/8 (60 Ov) by ENG vs Nz
உலகக் கோப்பையில் மோதிக்கொண்ட எண்ணிக்கை
மொத்தம்: 7
நியூசீலாந்து: 4
வெஸ்ட் இண்டீஸ்: 3
முடிவு இல்லை: 0
அணி விவரங்கள்
நியூசிலாந்து அணி
- நியூசீலாந்து அணி டிம் சவுதி தேர்வு செய்து பந்துவீச்சில் சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இவர் மாட் ஹென்றிக்கு பதிலாக இடம் பெற வாய்ப்புகள் உண்டு.
- நியூசீலாந்து அணி புள்ளிபட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி
- ஆண்ட்ரே ரசல் கடந்த இரண்டு போட்டிகளில் ஒற்றை காலுடன் விளையாடியதால் இன்றைய போட்டி விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஜேசன் ஹொல்டரும் இப்போட்டியில் என்று முன்பே அறிவிக்கப்பட்டது.
- இவருகளுக்கு பதிலாக கெமர் ரோச் மற்றும் ஆஷ்லே நர்ஸ் இடம் பெறுவார்கள்.
முக்கிய வீரர்கள
நியூசீலாந்து அணி
- கேன் வில்லியம்சன்
- ரோஸ் டெய்லர்
- ட்ரெண்ட போல்ட
வெஸ்ட் இண்டீஸ் அணி
- எவின் லீவிஸ்
- ஷாய் ஹோப்
- ஜேசன் ஹோல்டர்
விளையாடும் XI
நியூசீலாந்து அணி - கொலின் முன்ரோ, மார்ட்டின் குப்தில், கேன் வில்லியம்சன், ரோஸ் டெய்லர், டாம் லாதம், ஜிம்மி நீஷாம், கொலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்டர், லாக்கி பெர்குசன், மாட் ஹென்றி / டிம் சவுதி, ட்ரெண்ட் போல்ட்
வெஸ்ட் இண்டீஸ் அணி - கிறிஸ் கெய்ல், எவின் லீவிஸ், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன், சிம்ரான் ஹெட்மேயர், ஜேசன் ஹோல்டர், கார்லோஸ் பிராத்வைட், ஆஷ்லே நர்ஸ், ஷெல்டன் கோட்ரெல், கெமர் ரோச், ஷானன் கேப்ரியல்