2019 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் ஏலம் இன்று ஜெய்ப்பூரில் நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 351 வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றனர். அதில் மொத்தம் 20 வெளி நாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 60 வீரர்கள் ஏலத்தில் எடுக்கபட்டுள்ளனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்களின் விவரத்தை இங்கு காண்போம்.
ஐ.பி.எல் வரலாற்றில் இன்னும் ஒரு முறை கூட கோப்பை ஜெயிக்காத அணிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஒன்று, கடந்த சீசனில் அக்சர் படேலை தவிர அனைத்து வீரர்களையும் மாற்றியும் கூட ப்ளே ஆப் கூட தேர்வாகாமல் வெளியேறினர். இம்முறையும் ஆரோன் பிஞ்ச் , அக்சர் படேல், யுவராஜ் சிங் போன்ற நட்சத்திர வீரர்கள் உட்பட 11 பேரை அணியிலிருந்து நீக்கினர். 2019 ஆம் ஆண்டுக்கான ஏலத்தில் மொத்தம் 36.20 கோடியுடன் ஏலத்தில் ஈடுபட்டனர்.
வருண் சக்கரவர்த்தி
இந்த ஏலத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக தமிழகத்தை சேர்ந்த
வருண் சக்கரவர்த்தி 8.40 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியினால் எடுக்கபட்டுள்ளார்.சுழற்பந்து வீச்சாளரான இவர் டி.என்.பி.எல் மற்றும் உள்ளுர் தொடர்களில் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை குவித்துள்ளார்.
இவரது அடிப்படை தொகை வெறும் 20 லட்சமே உள்ள நிலையில்
அதை விட பல மடங்கு தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது பஞ்சாப் அணி. இந்த அணியின் கேப்டன் ரவிசந்திரன் அஸ்வின் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது. இது பற்றி வருண் சக்கரவர்த்தியை கேட்ட போது, "ஐ.பி.எல் தொடர் மிகவும் சவால் நிறைந்த தொடராக இருக்கும். அஸ்வின் அணியில் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவரிடம் நிறைய கற்றுக்கொள்ள இது சிறந்த தருணம்" எனவும் கூறியுள்ளார்.
ப்ரப்சிம்ரன் சிங்
இவருக்கு அடுத்தபடியாக இளம் வீரர் ப்ரப்சிம்ரன் சிங்கை 4.8 கோடிக்கு எடுத்துள்ளனர். இந்தியாவுக்காக 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் விளையாடும் இவர் சமீபத்தில் ஆசியக்கோப்பையையும் வென்றார். பஞ்சாப்பை சேர்ந்த இவர் வலது கை அதிரடி ஆட்டகாரர், தற்போதைய U-19 இந்திய அணியின் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
சாம் கரண்
இவர்கள் மட்டும் இல்லாமல் இங்கிலாந்தை சேர்ந்த்த ஆல்ரவுண்டர் சாம் கரணையும் 7.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளனர். இந்த சீசனில் பஞ்சாப் அணியின் முக்கியவீரராக கரண் திகழ்வார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கபடுகிறது.
முகமது சமி
அடுத்தபடியாக இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது சமியை சி.எஸ்.கே நிர்வாகத்துடன் கடும் போட்டி போட்டு 4.2 கோடி ரூபாய்க்கும்
ஆர்.சி.பி அணியில் இருந்து கழட்டிவிடபட்ட சர்பராஸ் கானை அடிப்படை தொகையான 25 லட்சத்துக்கும் வாங்கியுள்ளனர்.
நிக்கோலஸ் பூரான்
அடுத்ததாக கவனிக்க படவேண்டிய வீரர் நிக்கோலஸ் பூரான் , வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த விக்கெட் கீப்பிங் இடது கை ஆட்டகாரர். 23 வயதே ஆன இவர் பஞ்சாப் அணியின் மிடில் ஆர்டரை மேலும் வலு சேர்ப்பார்.
கடந்த சீசனில் பெரும் நட்சத்திர வீரர்களை கொண்டு களத்தில் இறங்கினாலும் தன்னுடைய கடைசி எட்டு ஆட்டத்தில் ஏழு முறை தோல்வியை தழுவியது. எனவே அணி நிர்வாகம் இம்முறை யுவராஜ் சிங், ஆரோன் பின்ச், மோகித் சர்மா உட்பட 11 வீரர்களை அணியில் இருந்து நீக்கியது.
நீக்கப்பட்ட வீரர்கள்
ஆரோன் பின்ச், அக்சர் படேல்,மோகித் சர்மா, யுவராஜ் சிங்,பாரிண்டர் ஸ்ரான், பென் வார்சியஸ், மனோஜ் திவாரி, அக்ஸ்தீப் நாத், பர்தீப் சாகு, மாயன்க் டகார், மன்சூர் டார்.
புதியதாக சேர்க்கபட்ட வீரர்கள்
ஹென்றிக்கூஸ் - 1 கோடி
நிக்கோலஸ் பூரான் – 4.2 கோடி
வருன் சக்கரவர்த்தி - 8.4 கோடி
சாம் கரன். – 7.2 கோடி
முகமது சமி -4.2 கோடி
சர்பராஸ் கான் – 25 லட்சம்
ஹார்டஸ் வில்ஜோன் – 75 லட்சம்
அர்ஸ்தீப் சிங் - 20 லட்சம்
தர்சன் நலகண்டே – 30 லட்சம்
ப்ரப்சிம்ரன் சிங். – 4.8 கோடி
அகினிவேஷ் – 20 லட்சம்
ஹர்ப்ரீட் ப்ரார் – 20 லட்சம்
முருகன் அஸ்வின் – 20 லட்சம்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர்கள்.
KL ராகுல், கிறிஸ் கெய்ல், ஆண்ட்ரூ டை, மயங்க் அகர்வால், அன்கிட் ராஜ்பூட், முஜீப் உர் ரஹ்மான்,கருண் நாயர், டேவிட் மில்லர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின், மொய்சஸ் ஹென்றிகுஸ், நிக்கோலஸ் பூரன், வருண் சக்ரவர்தி, சாம் கரன், முகமது ஷமி, சர்ஃபராஸ் கான், ஹார்டஸ் விலோஜென், அர்ஷ்ட் ஸ்பீட் சிங், தர்ஷன் நல்கான்டே, பிரப்சிம்ரன் சிங், அக்னிவ்ஷ் அய்ச்சி, ஹர்பிரட் பிரார், முருகன் அஸ்வின்