ஆஷஸ் 2019: ஸ்டீவ் ஸ்மித்தின் 'மிகப்பெரிய சவால்' ஆக ஜோஃப்ரா ஆர்ச்சரை ஆதரிக்கும் ஷேன் வார்ன் !

War : Jofra Archer vs Steve Smith
War : Jofra Archer vs Steve Smith

145 கி.மீ வேகத்தில் பந்து வீச்சும் ஜோஃப்ரா ஆர்ச்சரை யாரும் எதிர்கொள்ள விரும்புவதில்லை" என்றும் ஸ்டீவ் ஸ்மித்தின் ஆஷஸ் ரன் குவிப்பை தடுக்கும் நபராக ஜோஃப்ரா ஆர்ச்சர் இருக்க முடியும் என்றும் ஆஸ்திரேலியாவின் சிறந்த பந்துவீச்சாளரான ஷேன் வார்ன் நம்புகிறார். உலகக் கோப்பை வென்ற ஆர்ச்சர் ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டிக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்ட பின்னர் அடுத்த வாரம் லார்ட்ஸில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாக உள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் பந்து சேதப்படுத்தும் ஊழலில் பங்கு வகித்ததற்காக 12 மாத தடையைத் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பிய ஆஸ்திரேலியாவின் பேட்டிங் நட்சத்திரம் ஸ்மித் எட்ஜ் பாஸ்டனில் நடந்த ஆட்டத்தில் இரண்டு இன்னிஸ்சிலும் சதம் விளாசியுள்ளார். இவர் 144 மற்றும் 142 ரன்கள் என மொத்தம் 286 ரன்கள் குவித்துள்ளார்.

ஜோஃப்ரா ஆர்ச்சர் முதல் ஆட்டத்தை காயம் காரணமாக தவறவிட்டார், ஆனால் இங்கிலாந்தின் அனைத்து நேர முன்னனி விக்கெட் வீழ்த்திய வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சனை லார்ட்ஸில் மாற்றுவதற்காக வரிசையில் உள்ளார். ஆர்ச்சரின் கூடுதல் வேகமும், ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஸ்மித்துடன் விளையாடுவதன் மூலம் பெறப்பட்ட அறிவும், அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவருக்கு நல்ல நிலையில் இருக்கும் என்று ஷேன் வார்ன் நம்புகிறார்

Jofra Archer - in England and Rajasthan royal team
Jofra Archer - in England and Rajasthan royal team

ஸ்டீவ் ஸ்மித் இதுவரை இந்த நிகழ்ச்சியின் நட்சத்திரமாக இருந்தார், ஆனால் இப்போது ஜோஃப்ரா தனது ராஜஸ்தான் ராயல் மற்றும் இங்கிலாந்து அணியின் தோழர்களான பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோருடன் இணைந்துள்ளார். லார்ட்ஸிற்கான இங்கிலாந்தின் 12 பேர் கொண்ட அணியில் ஆர்ச்சர் இணைக்கபட்டுள்ளார். டெஸ்ட்

வரலாற்றில் 708 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது மிக வெற்றிகரமான பந்து வீச்சாளரான முன்னாள் லெக் ஸ்பின்னர் ஷேன் வார்ன் "ஸ்டீவ் தொடர்ந்து சென்று ஆஷஸின் மற்ற ஒவ்வொரு இன்னிங்ஸிலும் ஒரு சதம் அடித்ததை நான் காண விரும்புகிறேன், ஆனால் ஜோஃப்ரா வருவதால் அவர் இன்னும் தனது மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ளத் தயாராக இருப்பார் என்று நான் நினைக்கிறேன், இது வரவிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் வித்தியாசத்தை ஏற்படுத்தும்'' என்று கூறியுள்ளார்.

49 வயதான ஷேன் வார்ன் ''ஆண்டர்சனின் இழப்பு இங்கிலாந்துக்கு பேரிழப்பாக இருந்தாலும் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது சிறந்த முடிவாக இருக்கிறது. ஜோஃப்ரா ஆர்ச்சரிடம் அனைத்து பண்புகளும் இருப்பதாக நான் நினைக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

England fast bowler Jofra Archer
England fast bowler Jofra Archer

வேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சர் கடந்த மே மாதத்தில் சர்வதேச அளவில் அறிமுகமானார், ஆனால் அவர் உலகக் கோப்பையின் போது இங்கிலாந்தின் முன்னனி பந்து வீச்சாளராக இருந்தார். இவர் குறுகிய காலத்திலேயே 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால் இங்கிலாந்து இரண்டு முறை ஆஸ்திரேலியாவுடன் விளையாடிய போதிலும் ஸ்மித்தின் விக்கெட்டை ஆர்ச்சரின் விக்கெட் பட்டியலில் சேர்க்கவில்லை. அதன்பிறகு அரை இறுதி வெற்றியை தங்கள் பரம எதிரிகளுக்கு எதிராக வென்றனர்

Edited by Fambeat Tamil