உலக கிரிக்கெட்டின் "அடுத்த தோனி" பட்லர் - ஜஸ்டின் லாங்கர்

Justin Langer - Jos Buttler
Justin Langer - Jos Buttler

கதை என்ன?

இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் உலக கிரிக்கெட்டின் "புதிய எம்.எஸ் தோனி" என்று ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் நம்புகிறார். இந்த செவ்வாயன்று பரம எதிரியான இங்கிலாந்தை தனது ஆஸ்திரேலியா அணி எதிர்கொள்வதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார் ஐல்டின் லாங்கர்.

உங்களுக்கு தெரியுமா….

இந்திய அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மன் மற்றும் சிறந்த கேப்டனும் ஆவார் எம்.எஸ். தோனி. இந்திய அணியின் வரப்பிரசாதம் என்றே தோனியை கூறலாம். ஏனென்றால் தோனி ஆட்டத்தின் இறுதி ஓவரில் சிறப்பாக விளையாடி போட்டியை வெற்றி பெறவைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வெற்றிகள் நிறைய கடைசி ஓவரில் வந்துள்ளன, இது அவரை சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் போட்டியை சிறந்த முறையில் முடித்தவர்களில் ஒருவராகக் குறிக்கிறது. அதுமட்டுமின்றி இவரின் கீப்பிங் ஸ்டைல் அற்புதமாக இருக்கும்.

கதைக்கரு

ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் இங்கிலாந்து அணி மற்றும் ஜோஸ் பட்லரை பாராட்டியுள்ளார். இவர் ஜோஸ் பட்லரை "அடுத்த எம்.எஸ். தோனி" என்றும் புகழ்ந்துள்ளார். செய்வாய் கிழமை நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து வீரரான ஜோஸ் பட்லர் தனது முழுமையான திறமையை வெளிப்படுத்துவார் என்று ஜஸ்டின் லாங்கர் அறிவித்துள்ளார்.

ஜோஸ் நம்பமுடியாத வீரர். அவர் பேட் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் உலக கிரிக்கெட்டின் புதிய தோனி. இந்த விளையாட்டில் அவர் டக் ஆவார் என்று நம்புகிறேன், ஆனால் நான் அவரை சோமர்செட்டில் பார்த்தேன், அவர் நம்பமுடியாத விளையாட்டு வீரர் மற்றும் ஆட்டத்தை சிறப்பாக முடித்து வைக்ககூடியவர் என்றார் ஜஸ்டின் லாங்கர்.

ஒருநாள் தரவரிசையில் இங்கிலாந்து முதலிடத்தில் இருக்கத் தகுதியானது என்றும் இலங்கைக்கு எதிரான இழப்பு உண்மையில் இங்கிலாந்து அணியை பாதிக்காது என்றும் ஜஸ்டின் லாங்கர் கருதுகிறார்.

இங்கிலாந்து கிர்கெட் அணி உலகின் சிறந்த அணியாக இருக்கிறது. அவர்களின் அணியைப் பாருங்கள், ஒரு வாரத்தில் எதுவும் மாறவில்லை. நான் செவ்வாய்க்கிழமை வரை காத்திருக்க முடியாது - இங்கிலாந்து லார்ட்ஸில் ந்டைபெறும் உலகக் கோப்பையில். இந்த இரு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று பலம் வாய்ந்த அணியாக தான் திகழ்கிறது. எனவே இன்றைய போட்டியில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடக்கும் என்றார் ஜஸ்டின் லாங்கர்.

தற்போது இங்கிலாந்தின் அணியில் பட்லர் மிகப்பெரிய போட்டி வெற்றியாளராக உள்ளார். அவர் பவுண்டரியை எளிதில் அடிக்கக்கூடிய திறனைக் கொண்டுள்ளார், அதே போல் லோயர் ஆர்டருடன் பேட் செய்கிறார். இது இன்னிங்ஸின் இறுதிப் பகுதியில் அவரை நம்பமுடியாத அளவிற்கு ஆபத்தானதாக ஆக்குகிறது. ஷாஹித் அப்ரிதிக்கு பிறகு 50 பந்துகளுக்கு குறைவான ஒருநாள் சதங்களை வீழ்த்திய கிரிக்கெட் வீரர்களில் ஜோஸ் பட்லரும் ஒருவர்.

அடுத்தது என்ன ?

லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா இந்த செவ்வாய்க்கிழமை இங்கிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளது. ஒரு வெற்றி ஆஸ்திரேலியாவின் அரையிறுதிக்கு வருவதற்கான வாய்ப்புகளை மேலும் உறுதிப்படுத்தும் அதே வேளையில், இலங்கைக்கு எதிரான போட்டியின் இரண்டாவது தோல்வியை சந்தித்த பின்னர் இந்த போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அழுத்தம் கொடுக்கும்.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now