மிகவும் வலிமை வாய்ந்த இரு கிரிக்கெட் அணிகளான இந்தியா மற்றும் இங்கிலாந்து 2019 உலகக்கோப்பை தொடரில் ஜீன் 30 அன்று பிர்மிங்காமில் மோதின. இரு அணிகளிடமிருந்து ஒரு சிறப்பான ஆட்டம் வெளிபட்டன.
இங்கிலாந்து டாஸ் வென்று பேட் செய்து இந்திய பந்துவீச்சை தடுமாறச் செய்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்களை குவித்தது. இந்திய அணி சிறப்பான சேஸிங்கை வெளிபடுத்திய போதிலும், கடைசி சில ஓவர்களில் ஏற்பட்ட தவறின் காரணமாக 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் மட்டுமே எடுத்தது.
2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் தோல்வியாகும் இது. இந்திய அணி உலகக் கோப்பை தொடருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் விளையாடிய 6 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்துடனான ஒரேயொரு போட்டி மட்டும் மழையினால் பாதிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது.
இங்கிலாந்து அணி இந்தியாவை எதிர்கொள்ளும் முன்பு இரு தொடர் தோல்விகளை சந்தித்திருந்தது. இங்கிலாந்து இப்போட்டியை ஒரு சவாலாக ஏற்று வெற்றி பெற்றது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் முன்னதாக, ஏற்பட்டுள்ள இந்த தோல்வியால் சில கவலைகள் அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது.
#3 பௌலிங்கில் ஏற்பட்டுள்ள ஆச்சரியமூட்டும் திருப்பம்
இங்கிலாந்து 300+ ரன்களை குவித்தது ஆச்சரியமளிக்கும் வகையில் இல்லை, ஏனெனில் இந்த அணி வலிமையான பேட்டிங் வரிசையை கொண்டு திகழ்கிறது. இந்திய அணியின் வலிமையான பௌலிங் மூலம் ரன்கள் செல்ல விடாமல் கட்டுப்படுத்தி விடுவார்கள் என அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் கணித்து வைத்திருந்தனர். ஆனால் அதற்கு எதிர்மாறாக நடந்தது.
இங்கிலாந்திற்கு எதிராக இலங்கை வெற்றி பெற்றது, அதற்கு காரணம் அந்த அணியின் வலிமையான பௌலிங். இந்திய அணியும் கிட்டத்தட்ட இலங்கை போன்றுதான் இருந்தது. ஆடுகள தன்மை போட்டியின் முடிவை தீர்மாணித்தது. ஆடுகளத்தன்மை பௌலர்களுக்கு சாதகமாக இருந்திருந்தால் தனது அண்டை நாடு செய்த நிகழ்வை இந்தியாவும் இங்கிலாந்திற்கு எதிராக செய்திருக்க வாய்ப்புண்டு.
இந்தியா போன்ற ஒரு வலிமையான கிரிக்கெட் அணியின் பௌலிங் எதிரணி வீரர்களுக்கு சவால் அளிக்கும் வகையில் இருக்கவில்லை. இப்போட்டியில் இந்திய அணியின் பலவீணம் நன்றாக வெளிபட்டது குறிப்பிடத்தக்கது. குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால் என இருவருமே அதிக ரன்களை தங்களது பௌலிங்கில் அளித்தனர். இதே சூழ்நிலை அரையிறுதியிலும் நிகழ வாய்ப்புள்ளது. ஒரு அணியில் பௌலர்களின் பங்களிப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அவர்கள் சிறிது தடுமாறினால் கூட ஆட்டம் மாற அதிக வாய்ப்புகள் உள்ளது.
இனிவரும் அனைத்து போட்டிகளுமே இந்தியாவிற்கு மிக முக்கியமான போட்டிகளாகும். எனவே இந்தியா தனது சூழ்ச்சியை மேன்மேலும் மேம்படுத்த வேண்டும். இந்திய அணியில் உலகின் சில சிறந்த பௌலர்கள் இடம்பெற்றிருந்தாலும், ஒரு நெருக்கடியான சமயங்களில் பௌலர்கள் இவ்வாறு சொதப்பினால் கண்டிப்பாக இந்திய அணிக்கு தவறாக அமைய அதிக வாய்ப்புகள் உள்ளது.
#2 அணியின் சற்று தடுமாறிய கட்டமைப்பு
இந்திய அணி சற்று அதிக இலக்கை சேஸிங் செய்ய களமிறங்கிய போது லோகேஷ் ராகுல் ரன் ஏதும் அடிக்காமல் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி 138 ரன்கள் பார்டனர் ஷீப் அமைத்து சிறந்த அடித்தளமிட்டனர். ஒரு பெரிய இலக்கங்களில் இந்திய அணியை தோல்வி அடைய விடாமல் மீட்டு கொண்டு வந்தவர்கள் இவர்கள் இருவர் மட்டுமே.
இந்திய அணி நிர்வாகம் 2019 உலகக்கோப்பையில் அறிமுகப்படுத்திய லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஆட்டத்தின் தன்மைக்கேற்ப தங்களை அற்பணித்துக் கொள்வார்கள் என்ற விளக்கங்களை கூறியே அவர்களை இந்திய அணியில் தேர்வு செய்தது. இவர்கள் மூவருமே ஐபிஎல் தொடரில் தாங்கள் விளையாடும் அணிக்காக அதிக ரன்குவிப்பில் ஈடுபட்டு அதிக இலக்கினை தாங்கள் விளையாடும் அணிக்காக நிர்ணயித்திருந்தனர்.
லோகேஷ் ராகுல் பல முறை ஏமாற்றி விட்டார். ஆனால் ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டங்களை வெளிகொணர்ந்தனர். இருப்பினும் இந்த ஆட்டத்திறன் இந்திய அணிக்கு போதும் வகையில் இல்லை. ஹர்திக் பாண்டியா அதிரடி தொடக்கத்தை இந்திய அணிக்கு அளிக்கிறார். ஆல்ரவுண்டரான இவர் ஆட்டத்தின் இறுதி வரை நின்று விளையாட வேண்டும்.
அதிக நெருக்கடியை தாங்கிய உலகக்கோப்பையில் அனுபவமில்லாத வீரர்களுக்கு சில சமயங்களில் நடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் இந்தியா போன்ற அதிக அனுபவ வீரர்களை கொண்ட அணியில் அவ்வாறு ஏற்பட வாய்ப்பில்லை.
இந்த மூன்று சிறப்பான கிரிக்கெட் வீரர்களிடம் அதிகபடியான கிரிக்கெட் நுணுக்கங்கள் உள்ளன. இவர்கள் எதிரணிக்கு கடும் நெருக்கடியை அளிக்கும் திறமை கொண்டவர்கள். அணி நிர்வாகத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள மிகப்பெரிய கவலை வீரர்களின் மனநிலையில் ஏதாவது மாற்றும் ஏற்பட்டிருக்குமோ என்பதுதான். இதனால் இனிவரும் போட்டிகளில் தவறான மனநிலை இந்திய அணியில் விளையாட வாய்ப்புள்ளது.
#1 அனைத்து போட்டிகளிலும் ஒரே உத்தியை கையாளுதல்.
உலகக்கோப்பை இந்திய அணியில் மகேந்திர சிங் தோனி அதிக அனுபவ வீரராக உள்ளார். இவரது முடிவுகள், பல இடங்களில் சரியாக அமைந்துள்ளன. பௌலர்களின் பந்துவீச்சை கணித்து ஆட்டத்தை முடித்து வைப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. ஆனால் அந்த அற்புதமான திறமையை தோனி தன்வசம் வைத்திருந்தார்.
300+ ரன்களை சேஸிங் செய்யும் போது தோனி ஆரம்ப பந்து முதலே அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தியிருத்தல் அவசியமாகும். இந்திய அணியின் இக்கட்டான சூழ்நிலையில் தோனி மிகவும் அதிரடி ஆட்டத்தினை சரியாக வெளிபடுத்தி இந்திய அணியின் வெற்றி வாய்ப்பினை உறுதி செய்திருத்தல் வேண்டும்.
ஆனால் லெஜன்ட்ரி பேட்ஸ்மேன் தோனி தனது முடிவை இப்போட்டியில் கையாள முற்பட்டார். ஆனால் அது பலிக்கவில்லை. இவர் அதிரடியை வெளிபடுத்த ஆரம்பத்தில் சிறிது நேரம் எடுத்துக் கொள்வார். ஒரு சிறப்பான அதிரடியை தோனி வெளிபடுத்தி தனது விக்கெட்டை இழந்திருந்தாலும் ஒரு பலன் உண்டு. ஆனால் அவர் இக்கட்டான சூழ்நிலையிலும் மிகவும் மெதுவான ஆட்டத்தை வெளிபடுத்தி ரசிகர்களின் நகைப்பிற்கு உள்ளாகியுள்ளார்.
முன்னாள் இந்திய கேப்டனான தோனி இந்தியாவின் சிறந்த ஃபினிஷர், ஆனால் தற்போது மோசமான பேட்டிங்கால் ரசிகர்களால் அதிகம் நகைப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். ஒரு மோசமான இன்னிங்ஸ் அவரது ஆன்மாவை பாதித்திருக்காது. ஆனால் தற்போது உலகக் கோப்பை தொடர் கிரிக்கெட் என்பதால் இனிவரும் காலங்களிலும் தோனியின் இந்த மிதவேக பேட்டிங் வெளிபடுமேயாயின் இந்திய அணிக்கு பெரும் கவவையாக அமைய அதிக வாய்ப்புள்ளது.