தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு மற்றொரு உலகக்கோப்பை தொடர் ஏமாற்றம் தரும் விதமாக அமைந்துள்ளது. தென்னாப்பிரிக்க அணி உலக கிரிக்கெட்டில் ஒரு அதிர்ஷ்ட வசமில்லா அணியாக பல வருடங்கள் வலம் வந்து கொண்டுள்ளது.
உலகக்கோப்பை வரலாற்றில் பெரும்பாலான முறை கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ள அணியாக தென்னாப்பிரிக்கா களமிறங்கும். ஆனால் அனைத்து முறையும் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தி தன்னை தானே வெளியேற்றிக் கொள்ளும் வழக்கத்தை தென்னாப்பிரிக்கா வழக்கமாக கொண்டுள்ளது. இதனால் உலகக் கிரிக்கெட்டில் இந்த அணிக்கு "ஷோக்கர்ஸ்" என்ற புனைபெயர் உண்டு.
1999 உலகக்கோப்பை தொடரில் லேன்ஸ்-க்ளுஸ்னர் தனி ஒருவராக உலகக்கோப்பையை கைப்பற்றும் நோக்கில் விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தடுமாறி வெளியேறியது. இதனை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். 2003 உலகக்கோப்பை தொடரில் டக் வொர்த் லிவிஸ் விதிப்படி அதிர்ஷ்டமின்றி சொந்த மண்ணிலேயே வெளியேற்றத்தை சந்தித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற இயலாமல் வெளியேறியது.
1996 உலகக்கோப்பை தொடரின் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான காலிறுதியில் தென்னாப்பிரிக்கா வெளியேறியது, 1992ல் மழை விதிப்படி வெளியேறியது போன்றன பேரதிர்ச்சியை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது. இதுவே தென்னாப்பிரிக்காவிற்கு "ஷோக்கர்ஸ்" என்ற பட்டத்தை தற்போது வரை நிலைத்திருக்க காரணமாக இருந்தது. தென்னாப்பிரிக்கா அணியின் மனநிலை மிகப்பெரிய கிரிக்கெட் தொடர்களில் மோசமாக உள்ளது. ஆனால் மற்ற சுற்றுப்பயணத் தொடர்களில் பெரும் ஆதிக்கத்தை வெளிபடுத்தும்.
அடுத்தடுத்த இரு உலகக்கோப்பை தொடர்களில் நியூசிலாந்து அணியிடம் நாக் அவுட் சுற்றில் தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது தென்னாப்பிரிக்கா.
இருப்பினும் 2019 உலகக்கோப்பை தொடர்களில் கடந்த கால நிகழ்வை மறந்துவிட்டு ஐசிசி தரவரிசையில் ஒரு சிறந்த இடத்தில் திகழ்ந்து வந்தது தென்னாப்பிரிக்கா. நெருக்கடியை சமாளித்து சிறந்த ஆட்டத்தை தென்னாப்பிரிக்கா இவ்வருட உலகக்கோப்பையில் பங்கேற்று ஒரு பெரிய இடத்திற்கு செல்லும் என ரசிகர்கள் நம்பினர்.
ஆனால் இது தவறு என தற்போதுதான் ரசிகர்களுக்கு புரிந்துள்ளது. அனைத்து முன்னணி அணிகளுக்கு எதிராகவும் தோல்வியை தழுவி முதல் அணியாக உலகக்கோப்பையிலிருந்து வெளியேறிய காரணத்தால் ரசிகர்களுக்கு அந்த அணியின் மீதுள்ள வெறுப்பு அதிகமாகியுள்ளது.
தென்னாப்பிரிக்கா தற்போது வரை அணி நிர்வாக குழுவையும், தனது அணி வீரர்களை மட்டுமே குறை கூறி வருகிறது. ஆனால் அவர்கள் களத்தில் செய்த தவறை பார்க்க தவறுகிறார்கள். நாம் இங்கு தென்னாப்பிரிக்கா உலகக்கோப்பையிலிருந்து வெளியேற தகுதியானதே என்பதற்கான 3 காரணங்களை காண்போம்.
#1 சொதப்பலான ஃபீல்டிங்
தென்னாப்பிரிக்க அணி 2019 உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பு வரை ஃபீல்டிங்கில் தலைசிறந்து விளங்கியது. தற்கால ஃபீல்டிங் நுணுக்கங்கள் மற்றும் சிறப்பான செயல்திறனை கொண்ட ஒரே மனிதர் ஜான்டி ரோட்ஸ். தற்போது வரை உலகின் தலைசிறந்த ஃபீல்டராக இவர் வலம் வருகிறார்.
1999 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ஹேர்செல் கிப்ஸ், ஸ்டிவ் வாக்ஸின் கேட்சை தவறவிட்டு பெரும் சோதனைக்கு உள்ளாக்கி தோல்வியை தழுவி கோப்பையை நழுவவிட்டது தென்னாப்பிரிக்கா. இதே நிகழ்வைத்தான் 2019 உலகக்கோப்பையில் நியூசிலாந்திற்கு எதிராகவும் செய்து தொடர் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரண கேட்சுகள், சற்று கடினமாக கேட்சுகள், ரன் அவுட் என பலவற்றை தவறவிட்டு டேவிட் மில்லர் ஒரு பெரிய வில்லனாக இந்த போட்டியில் இருந்துள்ளார். இந்தியாவிற்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவின் கேட்சை டேவிட் மில்லர் தவறவிட்டதன் காரணமாக அதே அந்த அணிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. ரோகித் சர்மா இதனை பயன்படுத்தி கொண்டு சதம் விளாசி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
கேப்டன் ஃபேப் டுயுபிளஸ்ஸியும் ரோகித் சர்மா கேட்சை 1 ரன்னில் தவறவிட்டார். தென்னாப்பிரிக்கா தனது ஆட்டத்தை பெரும் கிரிக்கெட் தொடர்களில் சொதப்புவதை வழக்கமாக கொண்டுள்ளது.