#2 திணறிய மனநிலை
தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்ய களமிறங்கும் போது போதிய நம்பிக்கை இல்லாமல் களமிறங்குகிறார்கள். குவின்டன் டிகாக் மற்றும் டேவிட் மில்லர் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் தட்டுத் தடுமாறி பெரும் இக்கட்டான சுழ்நிலைக்கு தள்ளப்பட்டு தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறுகின்றனர். கேப்டன் டுயுபிளஸ்ஸி சுமாரண பங்களிப்பை அணிக்கு அளித்து வந்தாலும் மற்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தங்களது ஆட்டத்தை வெளிபடுத்த தவறுகின்றனர்.
நியூசிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் ஹாசிம் அம்லா சிறப்பாக டாப் ஆர்டரில் பங்களிப்பை அளித்திருந்தாலும் மற்ற பேட்ஸ்மேன்கள் ஒரு சரியான மனநிலையின்றி சொதப்பினர். வென் டேர் துஸன் மிடில் ஆர்டரில் நிலைத்து விளையாடினார். ஆனால் மற்ற வீரர்கள் அவருக்கு ஆதரவளித்து விளையாட தவறினர். ரன் அடிக்கும் நேரத்தில் சொதப்பி தங்களது விக்கெட்டை இழந்து வெளியேறினர். குறைவான ரன் ரேட் மற்றும் குறைவான இலக்கை மட்டுமே தென்னாப்பிரிக்காவால் நிர்ணயிக்க முடிந்தது.
தென்னாப்பிரிக்க டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வென் டேர் துஸன் மற்றும் கிறிஸ் மோரிஸிடம் எவ்வாறு சுதந்திரமாக விளையாட வேண்டும் என கற்க வேண்டும். இவர்கள் இருவரும் நியூசிலாந்திற்கு எதிரான கடந்த போட்டியில் நிலையான ஆட்டத்தை விளையாடியது குறிப்பிடத்தக்கது.
#3 ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் தவறான முடிவுகள்
நீங்கள் தலைப்பை படிக்கும் போதே புரிந்திருப்பீர்கள். கடந்த கால உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஏபி டிவில்லியர்ஸை இவ்வருட உலகக்கோப்பை தொடரில் விளையாடததே தென்னாப்பிரிக்க அணி வெளியேற முக்கிய காரணமாக அமைந்தது.
ஏபி டிவில்லியர்ஸ் தற்கால கிரிக்கெட்டின் லெஜன்டாக வலம் வருகிறார். ஆனால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் மோசமான முடிவு அவர்களுக்கு எமனாக அமைந்துள்ளது. கடைசியாக ஒரு உலகக்கோப்பையை ஏபி டிவில்லியர்ஸ் பங்கேற்க வேண்டும் என்ற அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் விருப்பத்திற்கு மாறாக 2018ன் மத்தியில் தனது ஓய்வை அறிவித்து அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பின்னர் 2019 உலகக்கோப்பையில் தான் பங்கேற்க விரும்புவதாக தெரிவித்த ஏபிடிவில்லியர்ஸின் கோரிக்கையை நிராகரித்தது அந்நாட்டு தேர்வுக் குழு.
இக்கட்டான சூழ்நிலையில் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் அணிக்கு எதிராக செயல்பட்டதற்கு அந்நாட்டு நிர்வாகம் எடுத்த முடிவு சரியானதுதான் என பல கிரிக்கெட் நிபுணர்கள் நம்பினர். இருப்பினும் சிலர் ஏபி டிவில்லியர்ஸின் உலகக்கோப்பையில் விளையாடும் முடிவை தென்னாப்பிரிக்கா நிராகரித்திருக்க கூடாது என்று தங்களது விருப்பத்தை தெரிவித்தனர்.
அத்துடன் சில தென்னாப்பிரிக்க வீரர்கள் காயம் காரணமாக வெளியேறினர். இது அந்த அணிக்கு பேரிழப்பை ஏற்படுத்தியது. பல விவாதங்கள் தென்னாப்பிரிக்க அணியில் நிலவியதன் காரணமாக பல தவறான எண்ணங்கள் ஏற்பட்டு வீரர்களின் மனநிலையை குலைத்தது.
தென்னாப்பிரிக்க நிர்வாகம் ஏபி டிவில்லியர்ஸை அணியில் சேர்க்காததற்கு மற்றொரு காரணமாக அந்த அணி ஏற்கனவே தயார் செய்திருந்த இளம் வீரர்களை கொண்ட உலகக்கோப்பை அணியும் ஒரு காரணம்.
டுயுபிளஸ்ஸி, ரபாடா மற்றும் தாஹீரை வைத்து சமாளித்து வருகிறார். ஃபீல்டர்கள் மோசமாக ஃபீல்டிங் செய்து கேட்சுகளை தவறவிடுகின்றனர். மற்றும் பேட்ஸ்மேன்களின் தவறான ஷாட் தேர்வு. டீகாக் ஒரு சரியான மனநிலையுடன் இல்லை. நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் கானே வில்லியசன் பேட்டில் பட்ட பந்தை கேட்ச் பிடித்தார் டிகாக். ஆனால் அதனை சரியாக கவனிக்காத டிகாக் மூன்றாவது அம்பையரிடம் முறையிடவில்லை. களநடுவரும் இதனை கண்டு கொள்ளவில்லை. இதனால் கானே வில்லியம்சனின் சதம் மூலம் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
மேற்கண்ட முடிவுகளினால் தென்னாப்பிரிக்கா தற்போது மோசமான நிலையில் உள்ளது. இதனால் கிட்டத்தட்ட தென்னாப்பிரிக்கா 2019 உலகக்கோப்பையிலிருந்து வெளியேறியுள்ளது.