2019 உலகக் கோப்பை தொடரின் கிட்டத்தட்ட மத்தியில் நாம் தற்போது உள்ளோம். ஓவ்வொரு அணியும் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்க தங்களது சிறப்பான ஆட்டத்தை ஒவ்வொரு போட்டியிலும் வெளிபடுத்த தவறுவதில்லை. சில அணிகள் கடைநிலையிலிருந்து புள்ளி பட்டியலில் முன்னேற முயற்சித்து வருவதையும் நாம் காண முடிந்தது.
உலகக்கோப்பை தொடரில் இடம்பெற்றுள்ள அனைத்து அணிகளும் தங்களது பாதி போட்டிகளை விளையாடி சிறப்பான ஆட்டத்திறனை வெளிபடுத்தி உள்ளன. எனினும் சில அதிர்ச்சியளிக்கும் ஆட்டத்திறனும் வெளிபட்டுள்ளது. சில அனுபவ கிரிக்கெட் வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தி தங்களது அணிகளுக்கு பங்களிப்பை அளிக்க தவறுகின்றனர்.
இவர்களின் மோசமான ஆட்டத்தால் அவர்களது அணி பெரும் நெருக்கடியை சந்திக்க நேரிடுகிறது. நாம் இங்கு மோசமான ஆட்டத்தால் தாங்கள் விளையாடும் அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ள 4 அனுபவ வீரர்களை பற்றி காண்போம்.
#1 ஷான் மார்ஷ் (ஆஸ்திரேலியா)
உலகக்கோப்பை தொடரின் ஆரம்பத்தில் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் உஸ்மான் கவாஜாவா அல்லது ஷான் மார்ஷா என்ற விவாதம் எழும்பி வந்தது. கேப்டன் ஆரோன் ஃபின்ச், உஸ்மான் கவாஜாவை தேர்வு செய்து விளையாட வைத்தார். ஆனால் அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளாமல் 5 போட்டிகளில் பங்கேற்று 19.60 சராசரியுடன் 98 ரன்களை மட்டுமே அடித்துள்ளார் க்வாஜா.
ஷான் மார்ஷ் அதிர்ஷ்டவசமாக மார்கஸ் ஸ்டாய்னிஸ் காயம் காரணமாக இரு போட்டிகளில் விளையாடத காரணத்தால் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளாமல் 2 போட்டிகளில் பங்கேற்று 26 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.
மார்கஸ் ஸ்டாய்னிஸ் உத்தேசமாக உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவின் அடுத்த போட்டியான வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் களம் காண்பார் என தெரிகிறது. இதனால் ஷான் மார்ஸ் ஆடும் XIலிருந்து நீக்கப்படுவார். தற்போது கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறார் கவாஜா. இவர் இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு எதிராக இவ்வாண்டு தொடக்கத்தில் நடந்த ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றார். ஆஸ்திரேலிய துனை பயிற்சியாளர் பிராட் ஹாடினின் துனையால் ஆஸ்திரேலியாவில் அவரது இடம் காப்பாற்றப்பட்டு வருகிறது.
#2 ஆன்ஜீலோ மேத்யுஸ் (இலங்கை)
இலங்கை அணியின் அனுபவ பேட்ஸ்மேன் ஆன்ஜீலோ மேத்யுஸிற்கு 2019 உலகக்கோப்பை தொடர் மோசமாக அமைந்துள்ளது. இவர் இந்த தொடரில் 3 போட்டிகளில் பங்கேற்று 3.00 சராசரியுடன் 9 ரன்களை அடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
பேட்டிங் ஆல்-ரவுட்டரான இவர் பேட்டிங்கில் மோசமாக சொதப்புவதால் இலங்கை அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினாலும், நீண்ட நேரம் வெளிப்படுத்த இயலவில்லை. மிடில் ஆர்டரில் மேத்யுஸின் பொறுப்பில்லா ஆட்டம் ஆட்டத்தை முழுவதுமாக மாற்றுகிறது. அத்துடன் கடைநிலை பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை சரியாக முடித்து வைப்பதில்லை.
2019 உலகக்கோப்பையில் இலங்கை அணியில் ஆன்ஜீலோ மேத்யுஸின் மோசமான ஆட்டத்தை கருத்தில் கொண்டு அந்நாட்டு நிர்வாகம் அவரை ஆடும் XIலிருந்து வெளியேற்ற அதிக வாய்ப்புகள் உள்ளது.
#3 சோயிப் மாலிக் (பாகிஸ்தான்)
தாமதமாக, சோயிப் மாலிக் பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்களால் அதிகபடியான நகைப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். 2019 உலகக்கோப்பையில் பார்க்கும் போது சோயிப் மாலிக் பாகிஸ்தானின் அனுபவ ஆட்டக்காரர் மற்றும் மிடில் ஆர்டரில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவார் என இவர் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனால் இந்த எதிர்பார்ப்பை களத்தில் அவர் பூர்த்தி செய்யவில்லை.
மாலிக் தனது பங்களிப்பை பாகிஸ்தான் அணிக்கு சராயாக அளிக்கவில்லை. அனுபவம ஆட்டக்காரர் சோயிப் மாலிக் 3 போட்டிகளில் பங்கேற்று 2.67 சராசரியுடன் 8 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அத்துடன் பௌலிங்கிலும் சிறப்பான பங்களிப்பு இல்லை.
உலகக்கோப்பையில் பாகிஸ்தானின் சிறந்த அனுபவ பேட்ஸ்மேனின் மோசமான ஆட்டத்திறனை கருத்தில் கொண்டு எதிர்வரும் போட்டிகளின் ஆடும் XIலிருந்து நீக்கப்பட வாய்ப்புண்டு.
#4 லஹீரு திரிமன்னே (இலங்கை)
உலகக்கோப்பையில் தடுமாறி வரும் மற்றொரு இலங்கை வீரர் லஹீரு திரிமன்னே. அதிரிடி ஆட்டக்காரரான இவர் 2019 உலகக்கோப்பை தொடரில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது ஆட்டத்திறனின் நம்பிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
இவர் இந்த தொடரில் 3 போட்டிகளில் பங்கேற்று 15 என்ற மோசமான சராசரியுடன் 45 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இடதுகை பேட்ஸ்மேனான இவர் டாப் ஆர்டரில் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தாத காரணத்தால் இலங்கை அணி உலகக்கோப்பை தொடரில் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
சற்று வேகமாக வீசப்பட்ட பந்துவீச்சை எதர்கொள்ள கடுமையாக தடுமாறி வரும் இவர் எதிர்கால சந்ததியினருக்கு வழிவிடும் வகையில் எந்நேரத்திலும் தனது ஓய்வை அறிவிக்க வாய்ப்புண்டு. இவ்வுலகக்கோப்பை தொடரில் திரிமன்னேவின் மோசமான ஆட்டத்தை கருத்தில் கொண்டு ஆடும் XIலிருந்து நீக்கப்படலாம்.