2019 உலகக்கோப்பை தொடரில் ஜீன் 29 அன்று நடந்த 37வது தகுதிச் சுற்றுல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் லார்ட்ஸ் மைதானத்தில் மோதிய போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. முன்னாள் சேம்பியன் ஆஸ்திரேலியா 86 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்து 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் முடிவில் 243 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை துரத்திய நியூசிலாந்து 43.4 ஓவர்கள் எதிர்கொண்டு 157 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.
விரிவான ரன்கள்: ஆஸ்திரேலியா 243/9 (50), ( உஸ்மான் கவாஜா 88, அலெக்ஸ் கேரே 71; டிரென்ட் போல்ட் 4/51).
நியூசிலாந்து 157/10 (43.5), ( கானே வில்லியம்ஸன் 40, ரோஸ் டெய்லர் 30; மிட்செல் ஸ்டார்க் 5/26)
முடிவு: ஆஸ்திரேலியா 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
இப்போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைப் புள்ளி விவரங்களைப் பற்றி காண்போம்:
அணியின் புள்ளி விவரங்கள்
நியூசிலாந்து
நியூசிலாந்து இரண்டாம் இன்னிங்ஸில் 43.4 ஓவர்களில் 157க்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நியூசிலாந்தின் மூன்றாவது குறைவான ரன்கள் இதுவாகும்.
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா இப்போட்டியில் 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் நியூசிலாந்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவின் 3வது மிக அதிக ரன்கள் வித்தியாச வெற்றியாகும்.
வீரர்களின் புள்ளி விவரங்கள்
நியூசிலாந்து
1) இடதுகை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் இப்போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதன் மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் நியூசிலாந்து சார்பில் முதல் முறையாக ஹாட்ரிக் எடுத்த வீரர் என்ற பெருமையையும், ஒட்டுமொத்தமாக 11வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த ஹாட்ரிக் நியூசிலாந்து வீரர்களின் 4வது ஆகும். அத்துடன் ஒருநாள் போட்டிகளில் டிரென்ட் போல்டின் 2வது ஹாட்ரிக் இதுவாகும். வாஸீம் அக்ரம் (பாகிஸ்தான்), ஷாகுலைன் முஷ்டாக் (பாகிஸ்தான்), ஷமீந்தா வாஷ் (இலங்கை), லாசித் மலிங்கா (இலங்கை) இவர்களின் வரிசையில் ஒருநாள் கிரிக்கெட்டில் 2 ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய 5 வது கிரிக்கெட் வீரராக டிரென்ட் போல்ட் இனைந்துள்ளார். இப்பட்டியலில் உள்ளவர்களுள் லாசித் மலிங்கா மட்டுமே ஒருநாள் கிரிக்கெட்டில் 3 ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மற்றவர்கள் தலா இரு ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.
2) அதிவேக 6000 ஓடிஐ ரன்களை குவித்தோர் பட்டியலில் கானே வில்லியம்சன் மூன்றாவது வீரராக இனைந்துள்ளார். இவர் 139 ஓடிஐ இன்னிங்ஸில் 6008 ரன்களை குவித்துள்ளார். ஹாசிம் அம்லா மற்றும் விராட் கோலி இச்சாதனையில் முதல் இரு இடங்களில் உள்ளனர். அம்லா 126 ஓடிஐ இன்னிங்ஸிலும், விராட் கோலி 136 இன்னிங்ஸிலும் 6,000 ரன்களை கடந்துள்ளனர்.
3) ரோஸ் டெய்லர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 1003 ரன்களை குவித்துள்ளார். ஸ்டிபன் ஃபிளமிங் (1122 ரன்கள்), பிரென்டன் மெக்கல்லம்(1122 ரன்கள்), ஜான் ரைட் (1109 ரன்கள்), மார்டின் குரோவி (1096 ரன்கள்) இவர்களது வரிசையில் ரோஸ் டெய்லர் 5வது நியூசிலாந்து வீரராக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 1000+ ரன்களை விளாசியுள்ளார்.