ஆஸ்திரேலியா
1) 13,000 சர்வதேச ரன்களை குவித்த 9வது ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர். இவர் மொத்தமாக 13,014 ரன்களை சர்வதேச கிரிக்கெட்டில் குவித்துள்ளார்.
2) இப்போட்டியில் அலெக்ஸ் கேரே மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் 107 என்ற சவாலான பார்டனர் ஷீப்பை 6வது விக்கெட்டிற்கு குவித்தனர். இதுவே ஆஸ்திரேலிய உலகக்கோப்பை வரலாற்றில் 6வது விக்கெட் அல்லது அதற்கு குறைவான விக்கெட்டுகளின் அதிகபட்ச ரன்கள் பார்டனர் ஷீப்பாகும். இவ்வுலககக்கோப்பை தொடரில் நாட்டிங்காமில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் 7வது விக்கெட்டிற்கு நேதன் குல்டர் நில் மற்றும் ஸ்டிவன் ஸ்மித் ஆகிய இருவரும் இனைந்து 102 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாக இருந்தது.
3) உஸ்மான் கவாஜா இப்போட்டியில் 88 ரன்கள் குவித்தார். உலகக்கோப்பை வரலாற்றில் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா சார்பில் தனிநபர் ஒருவரது அதிக பட்ச ரன்களை குவித்தவர் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார் இடதுகை பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா. 2007 உலகக்கோப்பை தொடரில் ஸ்டே.ஜார்ஜ் மைதானத்தில் நியூசிலாந்திற்கு எதிராக மேதீவ் ஹேய்டன் 103 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாக இருந்தது.
4) இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்கின் பௌலிங் 9.4-1-26-5. இதுவே உலகக்கோப்பை வரலாற்றில் நியூசிலாந்திற்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது சிறந்த பௌலிங்காகும். முதலாவது சிறப்பான பௌலிங்கும் மிட்செல் ஸ்டார்க் தான். 2015 உலகக்கோப்பையில் அக்லாந்தில் நடந்த போட்டியில் நியூசிலாந்திற்கு எதிராக மிட்செல் ஸ்டார்க் 9-0-28-6 என்ற சிறப்பான பௌலிங்கை வெளிபடுத்தியுள்ளார்.
5) உலகக்கோப்பை வரலாற்றில் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை மிட்செல் ஸ்டார்க் 3வது முறையாக வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் 3முறை ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
6) 2019 உலகக்கோப்பையில் 24 விக்கெட்டுகளை மிட்செல் ஸ்டார்க் வீழ்த்தியுள்ளார். ஒரு உலகக்கோப்பை தொடரில் இது இரண்டாவது அதிக விக்கெட்டுகள் ஆகும். 2007 உலகக்கோப்பை தொடரில் க்ளென் மெக்ராத் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.