#3 ஒருநாள் கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியாவின் 50 விக்கெட்டுகள்
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவால் பேட்டிச்கில் ஜொலிக்க முடியவில்லை, ஆனால் பௌலிங்கில் ஜொலித்து அதனை ஈடுகட்டியுள்ளார்.
சற்று இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டு இந்திய ரன் ரேட்டை உயர்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டபோது முஷ்டபிசுர் ரகுமான் வேகத்தில் டக் அவுட் ஆனார்.
இருப்பினும் 16வது ஓவரில் ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் சௌம்யா சர்கார் வீழ்த்தப்பட்டார். இதன்மூலம் இவர் ஒருநாள் தொடரில் 50 விக்கெட்டுகளை நிறைவு செய்தார். மேலும் வங்கதேசத்தின் சிறப்பான பேட்ஸ்மேன் லிட்டன்ஸதாஸ் மற்றும் அதிரடி ஆட்டக்காரர் ஷகிப் அல் ஹாசனின் விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேசத்தின் வெற்றி வாய்ப்பை பறித்தார்.
கேப்டன் விராட் கோலி இவரை சரியான முறையில் பயன்படுத்தி சிறு கால இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரது ஷார்ட் பால் மற்றும் பவுண்ஸர் மூலம் எதிரணியின் விக்கெட்டுகளை ஹர்திக் வீழ்துவதில் வல்லவர். இவர் 52 போட்டிகளில் 52 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
#4 2019ல் விராட் கோலி மற்றும் ரோஹீத் சர்மாவின் 1000 சர்வதேச ஓடிஐ ரன்கள்
2019ல் விராத் கோலி மற்றும் ரோஹித் சர்மா தங்களது 1000 ரன்களை நிறைவு செய்துள்ளனர். இந்திய கேப்டன் விராட் கோலி 2019ல் 18 ஒருநாள் போட்டிகளில் 56.61 சராசரியுடன் 1019 ரன்களை குவித்துள்ளார். இதில் 3 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் அடங்கும். இவ்வருடத்தில் கோலியின் அதிகபட்ச ரன்கள் 123 ஆகும்.
இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா 20 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 57.89 சராசரியுடன் 1100 ரன்களை குவித்துள்ளார். இதில் 5 அரைசதங்கள் மற்றும் 5 சதங்கள் அடங்கும். இவ்வருடத்தில் இவரது அதிகபட்ச ரன்கள் 140 ஆகும்.
உலகக்கோப்பை தொடரில் இந்த இரு பேட்ஸ்மேன்களும் இந்திய அணிக்காக பெரும் பங்களிப்பை அளித்து வருகின்றனர். மிடில் ஆர்டர் மற்றும் கடைநிலையில் சிறப்பான பேட்டிங் இல்லாத காரணத்தால் அந்த பொறுப்பையும் ஏற்று ரோஹீத் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடி வருகின்றனர். மிடில் ஓவரில் இவரது அதிரடி பேட்டிங் இந்திய அணிக்கு பெரும் பக்கபலமாக உள்ளது. இவர்களது விக்கெட்டுகளுக்குப் பிறகு இந்திய அணியின் ரன் ரேட் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். இவர்கள் இருவரும் இவ்வுலகக் கோப்பை தொடரின் முடிவில் பெரும் ரன்களை குவிப்பார்கள் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துள்ளனர்.