இந்திய அணி வங்கதேசத்தை 2019 உலகக்கோப்பையின் ஒரு முக்கியமான தகுதிச் சுற்றில் நாளை எதிர்கொள்ள உள்ளது. இந்திய அணி இங்கிலாந்திற்கு எதிரான கடந்த போட்டியில் தோல்வியை தழுவியுள்ள நிலையில், மீண்டும் வெற்றிபாதைக்கு திரும்பும் நோக்கில் உள்ளது. வங்கதேச அணி இப்போட்டியில் வென்றால் மட்டுமே தனது அரையிறுதி வாய்ப்பை நீட்டிக்க முடியும் என்ற நிலையில் உள்ளது.
இதுவரை இரு அணிகளும் 35 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளன. இதில் இந்திய அணி 29 போட்டிகளிலும், வங்கதேசம் 5 போட்டிகளிலும் வென்றுள்ளன. ஒரு போட்டி முடிவில்லாமல் போனது. உலகக்கோப்பை தொடர்களில் இதுவரை இரு அணிகளும் மூன்று முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 2 முறையும், வங்கதேசம் 1 முறையும் வென்றுள்ளன. 2007 உலகக்கோப்பை தொடரில் வங்கதேசம் இந்திய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த தோல்வியின் மூலம் இந்தியா குழு சுற்றுடன் அவ்வருட உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.
நாம் இங்கு இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய ஒருநாள் போட்டிகளில் நிகழ்த்தப்பட்ட சில புள்ளிவிவரங்களைப் பற்றி காண்போம்.
பேட்டிங் ஆட்டத்திறன்:
370/4 - 2011 உலகக்கோப்பை தொடரில் இரு அணிகளும் மோதிய போட்டியில் குவிக்கப்பட்ட ரன்னாகும். இதுவே இரு அணிகள் மோதிய போட்டிகளில் விளாசப்பட்ட அதிகபட்ச ரன்களாகும்.
58/10 - 2014ல் இந்தியாவிற்கு எதிராக வங்கதேசத்தின் ரன்களாகும். இதுவே இரு அணிகளும் மோதிய போட்டிகளில் அடிக்கப்பட்ட குறைவான ரன்னாகும்.
654 - வங்கதேசத்திற்கு எதிராக விராட் கோலியின் ஒருநாள் தொடர் ரன்களாகும். இதுவே இரு அணிகளில் உள்ள வீரர்களில் ஒருவரது அதிகபட்ச ரன்களாகும்.
175 - 2011 உலகக்கோப்பையில் விரேந்தர் சேவாக்கின் ரன்கள். இதுவே இரு அணிகள் மோதிய போட்டியில் தனிநபர் ஒருவரது அதிகபட்ச ரன்களாகும்.
17 - இரு அணிகளும் மோதிய போட்டிகளில் குவிக்கப்பட்ட சதங்களின் எண்ணிக்கை
3 - வங்கதேசத்திற்கு எதிராக விராட் கோலியின் சதங்களின் எண்ணிக்கை. இதுவே இரு அணிகளுக்கு எதிரான போட்டியில் ஒரு வீரரின் அதிகபட்ச சதங்களாகும்.
7 - இந்தியாவிற்கு எதிராக ஷகிப் அல் ஹாசன் மற்றும் தமீம் இக்பால் அகியோரது அரைசதங்களின் எண்ணிக்கை. இரு அணிகளுக்கிடையேயான போட்டியில் ஒருவரது அதிகபட்ச அரைசதங்களின் எண்ணிக்கை இதுவாகும்.
16 - வங்கதேசத்திற்கு எதிராக சவ்ரவ் கங்குலியின் சிக்ஸர்களின் எண்ணிக்கையாகும். இதுவே இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் ஒருவரது அதிகபட்ச சிக்ஸர்கள் ஆகும்.
பௌலிங் திறன்
23 விக்கெட்டுகள் - இந்தியாவிற்கு எதிராக மஸ்ரஃப் மொர்டாஷாவின் விக்கெட்டுகளின் எண்ணிக்கையாகும். இதுவே இரு அணிகளும் மோதிய போட்டியில் வீழ்த்தப்பட்ட அதிகபட்ச விக்கெட்டுகளாகும்.
6/4 - வங்கதேசத்திற்கு எதிராக 2014ல் ஸ்டுவர்ட் பின்னியின் பௌலிங் திறனாகும். இதுவே இரு அணிகளுக்கிடையேயான போட்டியில் தனிநபர் ஒருவரது சிறப்பான பௌலிங் திறனாகும்.
5 - இரு அணிகளும் மோதிய போட்டிகளில் மொத்தமாக 5 முறை ஒரு வீரர் ஐந்து விக்கெட்கள் வீழ்த்தியுள்ளனர்.
2 - முஷ்டபிசுர் ரகுமான் இரு முறை தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுவே இரு அணிகளும் மோதிய போட்டிகளில் ஒருவரது அதிகபட்ச ஐந்து விக்கெட்கள் ஆகும்.