விக்கெட் கீப்பிங் ஆட்டத்திறன்
31டிஸ்மிஸ்கள் - வங்கதேசத்திற்கு எதிராக மகேந்திர சிங் தோனியின் விக்கெட் கீப்பிங் திறனாகும். இதுவே இரு அணிகளும் மோதிய போட்டிகளில் விக்கெட் கீப்பர் ஒருவரால் வீழ்த்தப்பட்ட அதிகபட்ச விக்கெட்டுகளாகும்.
5 டிஸ்மிஸ்கள் - 2004ல் வங்கதேசத்திற்கு எதிராக மகேந்திர சிங் தோனியால் வீழ்த்தப்பட்ட விக்கெட்டுகளின் எண்ணிக்கை. அத்துடன் 2015ல் முஷிஃபிகுர் ரஹீம் இந்தியாவிற்கு ஒதிராக வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கையாகும். இதுவே இரு அணிகளும் மோதிய போட்டியில் விக்கெட் கீப்பர் ஒருவரால் ஒரு இன்னிங்ஸில் வீழ்த்தப்பட்ட விக்கெட்டுகளின் எண்ணிக்கையாகும்.
ஃபீல்டிங் ஆட்டத்திறன்
7 கேட்சுகள் - இந்தியாவிற்கு எதிராக நஸீர் ஹசைனின் கேட்சுகளின் எண்ணிக்கையாகும். இதுவே இரு அணிகளும் மோதிய போட்டிகளில் ஒரு வீரர் பிடித்த அதிகபட்ச கேட்சுகளாகும்.
4 கேட்சுகள் - 2018ல் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஷீகார் தவான் பிடித்த கேட்சுகளின் எண்ணிக்கையாகும். இதுவே இரு அணிகளும் மோதிய போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் பிடிக்கப்பட்ட அதிகப்படியான கேட்சுகளின் எண்ணிக்கையாகும்.
பிர்மிங்காமில் இரு அணிகளும் விளையாடிய போட்டிகளின் நிலை:
வங்கதேசம் 3 போட்டிகளில் இம்மைதானத்தில் விளையாடி 3லுமே தோல்வியை தழுவியுள்ளது.
இந்திய அணி இம்மைதானத்தில் 11 போட்டிகளில் பங்கேற்று 7ல் வெற்றியும் 4ல் தோல்வியும் அடைந்துள்ளது.
இரு அணிகளும் இம்மைதானத்தில் ஏற்கனவே ஒரு போட்டியில் விளையாடியுள்ளது. அதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளும் மோதிய கடைசி 10 போட்டிகளின் நிலை:
இந்தியா 7; வங்கதேசம் 3; முடிவில்லை 1