நீங்கள் இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகராக இருந்தால் தற்போது மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆகாயத்தில் பறந்து கொண்டிருப்பீர்கள். இந்திய அணி மட்டுமே இதுவரை 2019 உலகக்கோப்பை தொடரில் ஒரு தோல்வியை கூட தழுவாமல் வலம் வந்து கொண்டுள்ளது. விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி. நியூசிலாந்துடனான ஒரு போட்டி மட்டும் மழையினால் கைவிடப்பட்டது.
இருப்பினும் சற்று உற்று நோக்கினால் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் பல குறைகள் உள்ளதை நாம் காண முடியும். இது போட்டியின் முடிவை எந்நேரத்திலும் மாற்றியமைக்க வாய்ப்புண்டு. உலகக்கோப்பை தொடர் தொடங்கும் முன்பு வரை இந்திய அணியில் இருந்த மிகப்பெரிய கவலை நம்பர் 4 பேட்டிங் வரிசை தான். லோகேஷ் ராகுல் பயிற்சி ஆட்டத்தில் இக்கலவையை போக்கும் வகையில் சிறந்த ஆட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் ஷீகார் தவானின் காயம் காரணமாக கே.எல்.ராகுல் தொடக்க பேட்ஸ்மேனாக களம் கண்டார்.
அதிகம் மதிப்பிடப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் இந்த இடத்திற்கு சரியாக இருப்பார் என்று வாய்ப்பளித்த போது அதனை அவர் பயன்படுத்தி கொள்ளாமல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 3 போட்டிகளில் 29 சராசரியுடன் 58 ரன்களை மட்டுமே குவித்து மோசமான இந்திய பேட்ஸ்மேனாக உள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 77, தேர்வுக் குழுவை கவரும் வகையில் இல்லை.
விஜய் சங்கருக்கு மாற்று வீரராக ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக் களமிறக்கப் படலாம் என பல்வேறு பேச்சுக்கள் எழுந்து வந்தன. இம்முடிவை மேற்கொண்டால் இந்திய அணி பகுதி நேர பௌளர்கள் இல்லாமல் தடுமாற்றத்தை சந்திக்கும். எனவே ரவீந்திர ஜடேஜாவை, விஜய் சங்கருக்கு மாற்றாக தேர்வு செய்து இந்திய அணியின் பேட்டிங், பௌலிங்கை மேலும் வலிமையாக்கலாம்.
மேற்குறிப்பிட்ட மூன்று வீரர்களுக்கும் 2019 உலகக்கோப்பை தொடர் சிறப்பானதாக இல்லை. இருப்பினும் ஒருநாள்/டி20 கிரிக்கெட்டில் தற்போது வரை தங்களது ஆதிக்கங்களை சிறப்பாக செலுத்து வருவதை நாம் மறந்திடக் கூடாது. இந்திய அணி மிடில் ஆர்டரை கூடிய விரைவில் சரிபடுத்த வேண்டும் என்பது அவசியம்.
நாம் இங்கு இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் வரிசை பேட்ஸ்மேன்களை காண்போம்.
நம்பர் 4 - மகேந்திர சிங் தோனி
நம்பர் 4 பேட்டிங்கிற்கு ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இடம்பெற விரும்புகின்றனர். ஆனால் சிறந்த அனுபவ விக்கெட் கீப்பர் முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனியை நம்பர் 4 பேட்டிங் வரிசையில் முயற்சி செய்து இந்திய அணியின் கவலையை போக்கலாம் என்பதனை ஏன் யாரும் விரும்பவில்லை?
பெரும்பாலான கிரிக்கெட் வள்ளுநர்கள் தோனியின் மெதுவான ஸ்ட்ரைக் ரேட்டை குறை கூறி வந்தனர். ஆனால் தற்போது அந்த குறையை போக்கி தனது சிறப்பான ஆட்டத்தை அதிகமாகவே மேம்படுத்தியுள்ளார். அணியின் இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாக பேட்டிங்கில் வழிநடத்தியுள்ளார் தோனி. இவர் கடைநிலையில் சற்று தாமதமாக களமிறக்கப்படுவதால் தான் தனது அதிரடி பேட்டிங்கை வெளிபடுத்த சற்று நேரம் எடுத்துக் கொள்கிறார்.
37 வயதான இவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சராசரியை தன்வசம் வைத்துள்ளார். இவர் ஒரு சிறந்த நம்பர் 4 பேட்ஸ்மேன் என்பதை நாம் மறந்திடக் கூடாது. உலகக்கோப்பையை வென்ற கேப்டன் & பேட்ஸ்மேன் நம்பர் 4 வரிசையில் 56 சராசரியை தன்வசம் வைத்துள்ளார்.
இந்திய அணியில் 4வதாக வரும் பேட்ஸ்மேன் ஆட்டத்தின பொறுப்பை ஏற்று விளையாடக்கூடிய பேட்ஸ்மேனாக இருக்க வேண்டும் என விரும்புகிறது. இந்த பேட்ஸ்மேன் சரியான பார்டனர் ஷீப் அமைத்து, அதற்கு மேல் விக்கெட்டை விட்டு கொடுக்காமல் ஒரு பெரிய இன்னிங்ஸை அமைத்து விளையாட வேண்டும். தோனி சற்று அதிக பந்துகளை தன்னை செட் செய்து கொள்ள எடுத்துக் கொண்டாலும் தனது பங்களிப்பை அணிக்கு வழங்குவதை மட்டும் நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.