நம்பர் 5 - கேதார் ஜாதவ்

விஜய் சங்கரை போலவே கேதார் ஜாதவும் ஒரு சுமாரான பேட்ஸ்மேன் தான். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் இவ்வுலகக் கோப்பை தொடரில் 68 ரன்களை மட்டுமே அடித்து 34 என்ற சுமாரன சராசரியை மட்டுமே தன்வசம் வைத்துள்ளார்.
இந்திய அணியிலிருந்து இவர் கழட்டிவிடப்பட வாய்ப்புள்ளது என சில கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இருப்பினும் இந்த முடிவு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மேற்கொண்டால் அதுவே ஒரு எதிர் திருப்பு முனையாக இந்திய அணிக்கு மாற வாய்ப்புள்ளது. கேதார் ஜாதவிற்கு முன்வரிசையில் பேட்டிங் வாய்ப்பு அளிக்கப்பட்டது இல்லை. இவர் பேட்டிங் வரிசையில் சற்று கீழ்நிலையில் தான் களமிறக்கப்படுகிறார்.
உலகக்கோப்பை தொடரில் 6வது அல்லது 7வது பேட்ஸ்மேனாகவே களமிறக்கப்பட்டு வருகிறார். எனவே இவரை பேட்டிங்கில் சற்று முன்வரிசையில் களமிறக்குவது என்பது ஒரு சரியான முடிவாக இருக்கும். அவ்வாறு களமிறக்கப்பட்டால் கண்டிப்பாக இவர் நிலைத்து விளையாட ஏதுவாக இருக்கும். இவர் ஆரம்பத்தில் சற்று நிலைத்து விளையாடி விட்டால் அதன் பிறகு சில ஓவர்களில் மிகவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை கொண்டவர் என்பதை யாரும் மறக்க கூடாது. கடைநிலை ஓவர்களில் கேதார் ஜாதவ் - ஹர்திக் பாண்டியா இருவரும் ஒரு பெரும் அதிரடியை வெளிபடுத்தி ரன் குவிப்பதில் வல்லவர்கள்.