நம்பர் 6 - ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை உலகக்கோப்பை தொடரில் வெளிபடுத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து தன்னை பிரிக்க இயலாதவாறு இடம் பிடித்துள்ளார். அத்துடன் ஆடும் XIல் தன்னுடைய இடத்தை நிரந்தரமாக்கிக் கொண்டார். இவர் இவ்வுலகக் கோப்பை தொடரில் கடைநிலையில் களமிறங்கி 35 சராசரியை வைத்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 142 என்று மிகவும் பிரம்மிப்பூட்டும் வகையில் உள்ளது. இவ்வருட இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் வெளிபடுத்திய அதே அதிரடி ஆட்டத்தை 2019 உலகக்கோப்பை தொடரிலும் தொடர்ந்து வெளிபடுத்தி வருகிறார் ஹர்திக் பாண்டியா.
மகேந்திர சிங் தோனி மற்றும் கேதார் ஜாதவிற்கு பிறகு நம்பர் 6 பேட்டிங் வரிசையில் களமிறங்க மிகவும் சரியான வீரர் ஹர்திக் பாண்டியா.
ஓவர்கள் மிகவும் குறைவாக இருந்தால் ஹர்திக் பாண்டியாவை நம்பர் 5 பேட்டிங் வரிசையிலே களமிறக்கலாம். இதன் மூலம் இவர் அதிக ரன் குவிக்க வாய்ப்புள்ளது. இவரது அதிரடி பேட்டிங் வரிசையை மாற்றினாலும் சிறப்பாக வெளிபடும் என்பதில் சந்தேகமில்லை.
டாப் 5 பேட்ஸ்மேன்கள் சிறந்த அடித்தளமிட்டு அணியின் ரன்களை உயர்த்தினால் 6வது பேட்ஸ்மேனாக ஹர்திக் பாண்டியா ஆட்டத்தை சிறப்பாக முடித்து வைப்பார். 25 வயதான இவர் 120 ஸ்ட்ரைக் ரேட்டுடன் இந்திய அணியின் சிறந்த ஃபினிஷராக வலம் வந்து கொண்டுள்ளார்.