நம்பர் 7 - ரவீந்திர ஜடேஜா

இந்திய அணியின் கடைசி 4 பேட்ஸ்மேன்கள் சிறந்த ஆட்டத்திறனுடன் திகழ்ந்து வருகின்றனர். எனவே 7வது பேட்டிங் வரிசைக்கு மட்டுமே தற்போது ஒரு வீரர் தேவைப்படுகிறது. அனுபவ வீரர் ரவீந்திர ஜடேஜா மட்டுமே இந்த இடத்திற்கு சரியான வீரராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. 30 வயதான இவரது பேட்டிங் சராசரி 30ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 80ஆகவும் உள்ளது.
ரவீந்திர ஜடேஜா ஒரு சிறப்பான பந்துவீச்சாளர் ஆவார். இவர் 151 ஒருநாள் போட்டிகளில் 174 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஜடேஜாவின் எகானமி ரேட் 5 என்பது குறிப்பிடத்தக்கது.
ஜடேஜாவின் நுணுக்கமான பௌலிங் எதிரணி பேட்ஸ்மேன்களின் பார்டனர் ஷீப்பை முறியடிக்கும் வகையிலும், பௌலிங்கில் ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாக இருக்கும். சௌராஷ்டிராவைச் சேர்ந்த இவர் ஒரு சிறந்த ஃபீல்டர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
இதையனைத்தையும் விட இங்கிலாந்துக்கு எதிராக இரு இலக்கங்களில் பேட்டிங் சராசரியை ஜடேஜா வைத்துள்ளார். அத்துடன் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் பலவீனத்தைப் நன்கு அறிந்து வைத்திருப்பவர் ஜடேஜா. இங்கிலாந்திற்கு எதிராக 22 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 37 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக சில சிறப்பான சாதனையை தன் வசம் ஜடேஜா வைத்திருப்பதால் கண்டிப்பாக இவர் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் இடம் பிடிப்பார்.