#1 ஒரு போட்டியில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள்
சமீபத்தில் முடிந்த வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியா மோதிய போட்டிகளில் இரு அணிகளும் சேர்ந்து ஒரு போட்டியில் அதிக ரன்களை குவித்தன. 2019 உலகக்கோப்பை தொடரின் 26வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஒவர் முடிவில் 381 என்ற அதிகபட்ச இலக்கை நிர்ணயித்தது. டேவிட் வார்னர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 166 ரன்களை எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு ஓரளவிற்கு இருந்தது.
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சை சற்று கணித்து மிகவும் மெதுவான தொடக்கத்தை அளித்தது வங்கதேசம். வங்கதேசத்தின் நட்சத்திர வீரர் ஷகிப் அல் ஹாசன் 42 ரன்களுடன் நடையைக் கட்டியது அந்த அணிக்கு சற்று பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இருப்பினும் வங்கதேச விக்கெட் கீப்பர் முஷ்ட்ஃபிசுர் ரஹீம் நிலைத்து விளையாடி 102 ரன்களை குவித்து ஆஸ்திரேலிய இலக்கை அடையும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தார்.
இவர் 5வது விக்கெட்டிற்கு மெக்மதுல்லா-வுடன் சேர்ந்து 127 ரன்களை பார்டனர் ஷீப் செய்து விளையாடத் தொடங்கினார். ஆனால் வங்கதேசம் 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இந்த போட்டியில் 718 ரன்கள் மொத்தமாக குவிக்கப்பட்டது. உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் குவிக்கப்பட்ட அதிகபட்ச மொத்த ரன்கள் இதுவாகும். இதற்கு முன் 2015 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியில் குவிக்கப்பட்ட 688 ரன்களே அதிகபட்சமாக இருந்தது.