இந்திய அணி 2019 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர் கொண்டது. இப்போட்டி மழையின் காரணமாக இரு நாட்கள் நடந்தது. நியூசிலாந்தின் சிறப்பான நம்பிக்கை மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதனால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெளியேற்றப்பட்டது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மேகமூட்டத்துடன் வானிலை காட்சியளித்த காரணத்தால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களால் சிறப்பான தொடக்கத்தை அளிக்க இயலவில்லை. இந்திய பந்துவீச்சாளர்கள் தங்களது ஆட்டத்திறனை சரியாக வெளிபடுத்தி நியூசிலாந்து டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளித்தனர்.
ஜாஸ்பிரிட் பூம்ரா ஆட்டத்தின் ஆர்ம்பத்திலேயே மார்டின் கப்திலை வீழ்த்தினார். ஆனால் கானே வில்லியம்சன், ராஸ் டெய்லருடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை மேற்கொள்ள ஆரம்பித்தார். யுஜ்வேந்திர சகால் கானே வில்லியம்சனின் விக்கெட்டை வீழ்த்தும் முன்பு வரை டெய்லர் மற்றும் வில்லியம்சன் 64 ரன்கள் பார்ட்னர் ஷீப் செய்து விளையாடினர். மழை குறுக்கிடும் முன் நியூசிலாந்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்த தவறியதால் 46.1 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்தது.
ரிசர்வ் நாளில் 3.5 ஓவர்களுக்காக களமிறங்கிய நியூசிலாந்து மிகவும் கட்டுக்கோப்பாக விளையாடி 28 ரன்களை குவித்தது. இதன் மூலம் இந்தியா 240 ரன்களை இந்தியாவிற்கு இலக்காக நியூசிலாந்து நிர்ணயித்தது. இந்திய அணி ஆரம்பத்திலேயே மிகவும் தடுமாற்றத்தை வெளிபடுத்தி மோசமான தொடக்கத்தை அளித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 5 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து கடுமையாக தடுமாறியது இந்தியா. சற்று சுமாரன இலக்கை இந்தியா எட்டி விடும் என்று நினைத்த போது தொடர்ந்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டதன் காரணமாக கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.
ரவீந்திர ஜடேஜா 59 பந்துகளில் 77 ரன்களை குவித்து அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தியதே இரண்டு உலகக்கோப்பை சேம்பியனான இந்திய அணிக்கு பெரும் நம்பிக்கை ஊட்டியதாக இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக நியூசிலாந்தின் அதிரடி பௌலிங்கிற்கு முன்னால் ரன் குவிப்பது கடும் சவாலாக இருந்ததால் 221 ரன்களில் இந்தியா சுருட்டப்பட்டது. மேட் ஹன்றி 10 ஓவர்களை வீசி 37 ரன்களை மட்டுமே அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நாம் இங்கு இந்திய அணி அரையிறுதியில் தோல்வியை தழுவியதற்கான காரணங்களை காண்போம்.
#3 டாப் ஆர்டரின் மோசமான தொடக்கம்
இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், இவ்வுலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து சீரான அதிரடி ரன்களை குவித்தவர்களாக வலம் வந்தனர். 240 என்ற இலக்கு ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி ஆகியோர் சிறப்பாக சேஸ் செய்து முடித்து வைத்து விடுவார்கள் என அனைவரும் நம்பினர். 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அதன் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களையே அதிகம் நம்பியிருந்தது. ஆனால் இப்போட்டியில் டாப் ஆர்டர் சொதப்பிய காரணத்தால் மிடில் ஆர்டர் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் இந்த சவாலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் போல்ட், மேட் ஹன்றி ஆகியோர் இந்திய பேட்டிங்கிலிருந்து ரன்கள் கசியாமல் ஆரம்பத்தில் கட்டுப்படுத்தினர். இந்தியா 5 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ஆட்டத்தின் பொறுப்பு மிடில் ஆர்டர் வசம் வந்தது. ஆனால் இந்திய அணியால் அதன் பிறகு மீள முடியாத காரணத்தால் இந்தியாவை சுருட்டியது நியூசிலாந்து.
மேட் ஹன்றி 10 ஓவர்களில் 37 ரன்களை அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதினை வென்றார். டிரென்ட் போல்ட் மற்றும் மிட்செல் சான்ட்னர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.