#2 பேட்டிங் வரிசையில் ஏற்பட்ட குழப்பங்கள்
இந்திய அணி 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கும் விதமாக இருந்தது. அந்த சமயத்தில் இந்திய அணிக்கு ஆரம்ப ஸ்விங் பந்துவீச்சிற்கு எதிராக நிலைத்து விளையாட விராட் கோலிக்கு பேட்ஸ்மேன்கள் தேவைப்பட்டனர். இச்சமயத்தில் அனுபவம் நிறைந்த மகேந்திர சிங் தோனியை களமிறக்காமல் அவருக்கு முன்னதாக தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியாவை அணி நிர்வாகம் களமிறக்கியது. இதுவே இந்திய அணிக்கு விபரீதமாக அமைந்தது.
தோனி சற்று முன்னதாக களமிறக்கப்பட்டிருந்தால் ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக்கை சிறப்பாக வழிநடத்தி ஒரு சரியான அடித்தளமிட்டு ஆட்டத்தை முடித்து கொடுத்திருப்பார். தோனி களமிறங்கும் போது இந்தியா 51 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த காரணத்தால் போதுமான அளவு பேட்டிங் இல்லாமல் இருந்தது.
ஜடேஜா மற்றும் தோனியின் 100+ ரன்கள் பார்டனர் ஷீப் இந்திய அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தாலும், அதன் பின்னர் பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லாத காரணத்தால் அவர்கள் இருவரால் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்ல இயலவில்லை. தோனி விக்கெட் வீழ்ச்சி பற்றி சிறிதும் கவலைப்படாமல் நிலைத்து விளையாடினார். இதனால் தேவையான ரன் ரேட் அதிகமாகியது. இக்கட்டான சூழ்நிலையில் யாராக இருந்தாலும் அவ்வாறுதான் செய்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இறுதி சமயத்தில் இந்திய அணியால் ரன் இலக்கை அடைய முடியாமல் தோல்வியை தழுவியது.