#1 நியூசிலாந்தின் அணியின் நம்பிக்கை மற்றும் உறுதிப்பாடு
நியூசிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கு முன்னர் கடைசியாக விளையாடிய 3 தகுதிச் சுற்று போட்டியிலும் தொடர் தோல்விகளை சந்தித்திருந்தது. இவ்வுலக கோப்பை தொடரின் ஆரம்பத்தில் அதிரடி ஆட்டத்தை நியூசிலாந்து வெளிப்படுத்தி தொடர் வெற்றிகளை குவித்திருந்தது. 2015 உலகக்கோப்பை தொடரின் ரன்னர்களான நியூசிலாந்து நெட் ரன் ரேட் அடிப்படை 2019 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்தியாவிற்கு எதிரான அரையிறுதிப் போட்டியின் மூலம் நியூசிலாந்து வெல்ல மிகக்குறைந்த வாய்ப்புகள் இருப்பதாக அனைவரும் நினைத்திருந்தனர்.
ஆனால் கானே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து சிறிது கூட நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிகொணர்ந்து, 2019 உலகக்கோப்பை தொடரை கைப்பற்றும் என அனைவரும் நினைத்திருந்த இந்தியாவை வீழ்த்தியது. நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் குவித்த 239 ரன்களை பார்க்கும் போது ஒரு சுமாரான ரன்களாகவே அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் நியூசிலாந்து பௌலிங்கில் சிறப்பாக அசத்தி இந்திய வலிமையான பேட்டிங் வரிசையை கட்டுபடுத்தியது.
நியூசிலாந்தின் சில சிறப்பான ஃபீல்டிங் மற்றும் அதிரடி பௌலிங் இந்திய அணியை 2019 உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேற்ற காரணமாக இருந்தது. ரவீந்திர ஜடேஜா மற்றும் மகேந்திர சிங் தோனியின் அதிரடி பார்டனர் ஷீப்பை கண்டு சிறிதும் மனம் தளராத நியூசிலாந்து அணி எதிர்பாரத வகையில் வெற்றி பெற்றது. நெருக்கடியை சிறப்பாக சமாளித்து இறுதி வரை நம்பிக்கை இழக்காமல் விளையாடியது நியூசிலாந்து அணி.