#2 ஷெல்டன் காட்ரேல்
ஷெல்டன் காட்ரேல் 2019 உலகக்கோப்பை தொடரில் ஒரு தனித்தன்மையுடன் அடையாளம் காணப்பட்ட வீரர். இவரது சிறப்பான பௌலிங்கிற்கு மட்டுமல்லாமல், விக்கெட் வீழ்த்திய பின் அந்த மகிழ்ச்சியை வெளிபடுத்தும் நிகழ்வு அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் மிகவும் கவர்ந்துள்ளது. 6 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை தன்வசம் வைத்துள்ளார். அத்துடன் சிறப்பான கேட்ச் மற்றும் ரன் அவுட்-களை அதிரடியாக வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஃபீல்டிங்கை திடப்படுத்தி அணியின் X-காரணியாக திகழ்கிறார். இவ்வருட உலகக்கோப்பை தொடரில் காட்ரேல் பெரும்பாலும் டாப் ஆர்டர் விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே வீழ்த்தியுள்ளார்.
காட்ரேல் ஒரு இடதுகை வேகப்பந்து வீச்சாளர். இந்திய பேட்ஸ்மேன்கள் கடந்த காலங்களில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது இன்-ஸ்விங் பந்துவீச்சு வலதுகை பேட்ஸ்மேன்களால் சரியாக எதிர்கொள்வது சிரமமான நிகழ்வாகும். இந்திய அணியில் இருந்த ஒரே இடதுகை பேட்ஸ்மேன் ஷீகார் தவான். ஆனால் அவரும் காயம் காரணமாக விலகி விட்ட காரணத்தால் அந்த அணியில் அனைவருமே வலதுகை பேட்ஸ்மேன்களாகவே உள்ளனர். ரிஷப் பண்ட் 15 பேர் கொண்ட அணியில் இடதுகை பேட்ஸ்மேனாக இடம்பெற்றிருந்தாலும் அவர் அணியில் இடம்பெறுவாரா என்பது சந்தேகம்தான்.
எனவே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இவருக்கு எதிராக சற்று நிலைத்து விளையாடா விட்டால் கண்டிப்பாக இந்திய அணி நெருக்கடியை சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை.