#1 கிறிஸ் கெய்ல்
கிறிஸ் கெய்ல் தனது இறுதி உலகக்கோப்பை தொடரில் விளையாடி வருகிறார். 2019 உலகக்கோப்பையில் அதிக வயதில் விளையாடி வரும் வீரர்களுள் இவரும் ஒருவர். இவரது வயது 39. இவரது ஆட்டத்திறன் இத்தொடரில் பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் விதத்தில் உள்ளது. அதிரடியாக தொடங்கி பெரிய இலக்கை நோக்கி தனது ஆட்டத்தை செலுத்த தவறுகிறார். இவ்வுலகக் கோப்பை தொடரில் இதுவரை விளையாடிய உலகக்கோப்பை போட்டிகளில் கிறிஸ் கெய்ல் 38.8 சராசரியுடன் 194 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். இவரது சிறப்பான பேட்டிங் வலிமையான பௌலிங்கை கொண்ட நியூசிலாந்து அணிக்கு எதிராக வந்தது. இப்போட்டியில் கெய்ல் 84 பந்துகளுக்கு 87 ரன்களை குவித்தார்.
கிறிஸ் கெய்ல் இந்தியாவின் மிகப்பெரிய பௌலிங்கிற்கு எதிராக பல முறை விளையாடியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எதிராக 1000க்கும் மேலான ரன்களை விளாசியுள்ளார். இதில் 4 சதங்கள் மற்றும் 5 அரைசதங்கள் அடங்கும்.
தற்காலத்தில் எதிரணிக்கு பெரும் எதிர்ப்பை பேட்டிங்கில் அளிக்கவல்ல ஒரே வீரர் கிறிஸ் கெய்ல். பவர் பிளே ஓவரில் மட்டும் இவர் நிலைத்து விட்டால் அதன் பின் கெய்லை கட்டுப்படுத்த எதிரணி பௌலர்கள் மிகவும் சிரமப்படுவர். சுழற் பந்துவீச்சை துவம்சம் செய்வதில் கை தேர்ந்தவர், அதிலும் குறிப்பாக இந்திய சுழற்பந்து வீச்சை ஏற்கனவே அடித்து துவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்பார விதமாக இப்போட்டி கெய்லிற்கு இந்தியாவிற்கு எதிராக கடைசி ஒருநாள் போட்டியாக கூட இருக்க வாய்ப்புள்ளது. எனவே ஒரு பெரிய சதத்தினை விளாச கெய்ல் முயற்சி செய்ய அதிக வாய்ப்புள்ளது. இந்தியாவிற்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஒரு முன்னணி வீரராக இவர் கவனிக்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.