2019 உலகக்கோப்பை தொடர் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் புள்ளி பட்டியலில் டாப் 4 இடங்களுக்கு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆஸ்திரேலியா ஏற்கனவே அரையிறுதிக்கான தனது இடத்தை உறுதி செய்து விட்ட நிலையில் 6 அணிகள் மீதமுள்ள 3 இடங்களுக்கு கடும் போட்டி போட்டு கொண்டு விளையாடி வருகின்றன. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மட்டுமே தற்போது வரை உலகக்கோப்பையில் தோல்வியை தழுவாத அணியாக வலம் வருகிறது. தற்போது புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய அணி கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டது.
இந்திய அணி நாளை எட்ஜ்பாஸ்டோன் மைதானத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. இந்திய அணி தனது கடைசி இரு லீக் போட்டிகளில் இலங்கை மற்றும் வங்கதேசத்தை எதிர்கொள்ள உள்ளது. இந்திய அணி மீதமுள்ள ஒரு போட்டியில் வென்றாலே அரையிறுதியை உறுதி செய்து விடும். இங்கிலாந்து - இந்தியா மோதும் போட்டி மிக்க ஆரவாரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இரு அணிகளுமே போட்டியை வெல்லும் நோக்கில் உள்ளது. இங்கிலாந்து இப்போட்டியில் வெல்வதைப் பொறுத்தே அதன் அரையிறுதி வாய்ப்பு உள்ளது.
மான்செஸ்டரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்திறனை வெளிபடுத்தியது. இருப்பினும் பேட்டிங்கில் சில தடுமாற்றங்கள் இருந்து கொண்டுதான் உள்ளது. ஆனால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் அது பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில் இந்திய அணி ஆடும் XIல் மாற்றம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. நாம் இங்கு இந்திய அணி இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் மேற்கொள்ள வாய்ப்புள்ள இரு மாற்றங்களை பற்றி காண்போம்.
#1 விஜய் சங்கருக்கு பதிலாக ரிஷப் ஃபண்ட்
ஒரு நிலையான ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் இந்திய அணியின் மிடில் ஆர்டரை சரி செய்து விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் தனக்களித்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளாமல் மோசமாக பேட்டிங்கில் சொதப்பினார். ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் நம்பர்-4 பேட்டிங் வரிசையில் நன்றாக வாய்ப்பு கிடைத்தும் அதனை பயன்படுத்தாமல் மிகக்குறைந்த ரன்களில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
அதேபோல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான அடுத்த போட்டியில் கேமார் ரோச்சிடமிருந்து சிறப்பான பந்து வெளிபட்டு வந்தது. அப்போட்டியிலும் விஜய் சங்கருக்கு நம்பர்-4 வரிசையில் பேட்டிங் வாய்ப்பு கிடைத்தும் அதனை பயன்படுத்தாமல் சிறப்பாக ஆரம்பித்து மோசமான முறையில் விக்கெட்டை இழந்தார்.
இந்திய அணி தொடர்ந்து இரு போட்டிகளிலும் மிடில் ஆர்டரில் சொதப்பி உள்ளனர். எனவே இந்திய அணி விஜய் சங்கருக்கு பதிலாக ரிஷப் பண்டை நம்பர் 4 பேட்டிங் வரிசையில் களமிறக்க முயற்சிக்கும். ரிஷப் பண்ட் ஆட்டத்தின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு தனது பேட்டிங்கை வெளிபடுத்தும் திறமை கொண்டவர். எனவே இனிவரும் போட்டிகளில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரிஷப் பண்ட் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.
இந்திய அணியின் X-காரணியாக திகழும் இவர் கண்டிப்பாக மிடில் ஓவரில் இயல்பான ஆட்டத்தை வெளிபடுத்தும் திறமை கொண்டவர். உலகக்கோப்பையின் இறுதி கட்டத்தில் தமக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை ரிஷப் பண்ட் கண்டிப்பாக சரியாக பயன்படுத்தி கொள்வார். கேப்டனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், மிகப்பெரிய இலக்கை இந்தியா சேஸ் செய்யும்போது அதிக பந்துகளை எதிர்கொண்டு அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தாமல் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் வல்லவர் ரிஷப் பண்ட்.