#2 கேதார் ஜாதவிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்

கேதார் ஜாதவ் இவ்வுலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியை தவீர மற்ற போட்டிகளில் சரியான பங்களிப்பை அளிக்கத் தவறியுள்ளார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக அவருக்கு அளித்த சில வாய்ப்புகளையும் கேதார் ஜாதவ் பயன்படுத்தி கொள்ளவில்லை. ஆப்கானிஸ்தானிற்கு எதிரான மெதுவான மற்றும் பொறுப்பான இன்னிங்ஸை தவிர மற்ற போட்டிகளில் கடைநிலையில் ஆரம்ப பந்திலிருந்து ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த தவறிவிட்டனர்.
தற்போது உள்ள நிலையில் கேதார் ஜாதவின் பேட்டிங் கடைநிலையில் அவ்வளவு ஏதுவாக இருக்க வாய்ப்பில்லை. தடுமாறி வரும் கேதார் ஜாதவிற்கு தினேஷ் கார்த்திக் ஒரு சரியான மாற்று வீரராக இருப்பார். அத்துடன் ஒவ்வொரு அணிக்கும் கடைநிலையில் ஒரு ஹிட்டர் பேட்ஸ்மேன் கண்டிப்பாக தேவைப்படுகிறது. ஏற்கனவே ஹர்திக் பாண்டியா அந்த இடத்தில் இருந்து வருகிறார். இருப்பினும் அவருக்கு ஆதரவாக நிலைத்து நிற்க ஒரு பேட்ஸ்மேன் தேவைப்படும் நிலையில் தினேஷ் கார்த்திக் அந்த இடத்திற்கு சரியான வீரராக இருப்பார்.
தனது சிறப்பான அனுபவத்தின் மூலம் இந்திய உலகக்கோப்பை அணியில் இடம்பெற்ற தினேஷ் கார்த்திக் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் சிறந்த ஃபினிஷராக இருந்துள்ளார். இவர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டத்திறனுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது. நம்பர் 6 பேட்டிங் வரிசையில் தான் எதிர்கொள்ளும் ஆரம்ப பந்து முதலே அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தும் திறமை கொண்டவர். சுழற்பந்து மற்றும் வேகப்பந்து வீச்சு என இரண்டையும் சம அளவில் எதிர்கொள்ளும் திறமை கொண்டவராக தினேஷ் கார்த்திக் உள்ளதால் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் களம் காண வாய்ப்புள்ளது.