#1 முதுகெலும்பில்லா பேட்டிங்
ஏபி டிவில்லியர்ஸ் அணியில் இல்லாதது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் பேட்டிங் வரிசை ஒரு முதுகெலும்பில்லாததைப் போன்றும் சவாலளிக்கும் வகையில் பேட்ஸ்மேன்களின் ஆட்டத்திறன் வெளிபடாததும் அந்த அணிக்கு பேரிழப்பாக இருந்தது. இந்த அணியில் புதிதாக இடம்பெற்ற ராசி வென் டேர் துஸன் மட்டுமே இந்த அணிக்கு பேட்டிங்கில் பக்கபலமாக இருந்தார். இளம் வீரர் ஏய்டன் மர்க்கரமின் பேட்டிங் முழுவதும் பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் விதத்தில் இருந்தது.
அதிக அனுபவம் கொண்ட குவின்டன் டிகாக் மற்றும் ஹாசிம் அம்லா போன்றோரும் மோசமான தொடக்கத்தை அந்த அணிக்கு அளித்தனர். அம்லா தொடர்ந்து சொதப்பியும், டிகாக் தனது அதிரிடி ஆட்டத்தை தொடரவும் தவறுகின்றனர். 2019 உலகக்கோப்பையில் அம்லாவின் பேட்டிங் சராசரி 25ற்கு குறைவாகவும், டிகாக்கின் பேட்டிங் 39ஆகவும் உள்ளது.
ஃபேப் டுயுபிளஸ்ஸி சில சிறப்பான பங்களிப்பை அளித்தாலும் மற்ற பேட்ஸ்மேன்கள் அவருக்கு ஆதரவளித்து விளையாட தவறுகின்றனர். டிகாக் மற்றும் கேப்டன் டுயுபிளஸ்ஸி சில சிறப்பான பங்களிப்பை டாப் ஆர்டரில் அளிக்கின்றனர்.
டேவிட் மில்லர் விளையாடிய 4 போட்டிகளிலும் 40 ரன்களை தாண்டவில்லை. 3 போட்டிகளில் ஜேபி டுமினியின் சராசரி 18ஆக இருந்த காரணத்தால் அணியிலிருந்து நீக்கப்பட்டார். டிகாக் ஆப்கானிஸ்தானிற்கு எதிராக 68 ரன்கள் குவித்ததே 2019 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன் ஒருவரின் அதிகபட்ச ரன்களாகும். மொத்தமாக அந்த அணியிடமிருந்து 7 அரைசதங்கள் வந்துள்ளன. மற்ற அணிகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவே ஆகும்.
ஒட்டுமொத்த மோசமான பேட்டிங் அந்த அணிக்கு பெரும் பேரிழப்பாக அமைந்தது.
தென்னாப்பிரிக்கா அணியின் ஆட்டத்திறன் உலகக்கோப்பையினால் தொடர் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. கடந்த காலங்களில் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும் மீண்டும் சிறப்பான வருகையை சர்வதேச கிரிக்கெட்டில் அளித்துள்ளது. தங்களது சிறந்த ஆட்டத்தை மீண்டும் வெளிக்கொணர்ந்து மீண்டும் ஆதிக்கத்தை செலுத்தி ரசிகர்களின் விருப்பங்களை தென் ஆப்ரிக்கா அணி நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.