2019 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் மோசமான சுழற்பந்து வீச்சை கண்டு கொதித்தெழுந்த டிவிட்டர் வாசிகள்

Johnny Barstow
Johnny Barstow

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள்ம மோதும் போட்டி பீர்மிகாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று(ஜீன் 30) நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேஸன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்த தொடங்கி மைதானத்தில் அனைத்து பக்கங்களில் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களாக பறக்க விட்டனர். இரு வலதுகை பேட்ஸ்மேன்களும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சாதுவாகவும், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியாகவும் விளையாட தொடங்கினார்கள்.

தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சில போட்டிகளில் விலகியிருந்த ஜேஸன் ராய் இங்கிலாந்து அணி கடந்த சில ஆட்டங்களில் சொதப்பிய இடத்தை நிரப்பினார். ஆட்டத்தின் ஆரம்பத்தில் ஹர்திக் பாண்டியா வீசிய பந்து ஜேஸன் ராயின் கையுறையில் உரசி சென்றது. இதனை கள நடுவர் சரியாக கவணிக்காத காரணத்தால் நாட் அவுட் வழங்கினார். இந்த முடிவிற்கு விராட் கோலி மற்றும் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி மூன்றாவது நடுவரிடம் மேல் முறையீடு எதுவும் செய்யவில்லை.

இந்திய அணி வீரர்களின் இந்த தவறான கணிப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார் ஜேஸன் ராய். ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜேஸன் ராய் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், யுஜ்வேந்திர சகால் மற்றும் மிதவேக பந்துவீச்சாளர் ஹர்திக் பாண்டியா ஆகியோரது பந்துவீச்சை சரியாக பயன்படுத்தி பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களாக மாற்றினர்.

இரு வலதுகை பேட்ஸ்மேன்களும் ஆடுகளதன்மை மற்றும் இலாபகரமான பந்துவீச்சை சரியாக பயன்படுத்தி சிறப்பான அடித்தளத்தை முதல் 25 ஓவர்களில் அமைத்தனர். இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் 22 ஓவர்களுக்கு‌ 160 ரன்களை குவித்து அனைவரையும் பிரம்மிப்படையச் செய்தனர்.

இங்கிலாந்தின் இந்த வலிமையான பார்டனர் ஷீப்பை முறிக்க இந்திய அணி, 12வது வீரர் ரவீந்திர ஜடேஜாவை மாற்று வீரராக களமிறக்கியது. குல்தீப் யாதவ் வீசிய பந்தை ஜேஸன் ராய் மைதானத்தின் தரையோடு சேர்த்து பேட் கொண்டு விளாசினார், அப்போது சற்று தொலைவில் நின்றிருந்த ஜடேஜா அதிவேகமாக ஓடி அந்த கேட்சை அற்புதமாக பிடித்து அசத்தினார்.

ஜானி பேர்ஸ்டோ தொடர்ந்து விளையாடி தனது முதல் உலகக்கோப்பை சதத்தினை விளாசினார். இங்கிலாந்து அணியின் முழு பேட்டிங் பொறுப்பையும் தன் வசம் ஏற்று விளையாடினார். இவரது விக்கெட்டிற்கு பின் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 38 பந்துகளில் தன் அரைசதத்தினை நிறைவு செய்தார். ஜோ ரூட் பொறுப்பான ஆட்டத்தை கையாண்டு 54 பந்துகளில் 44 ரன்களை எடுத்தார்.

முகமது ஷமி முழு பௌலிங் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜாஸ்பிரிட் பூம்ரா டெத் ஓவர்களில் அதிரடி பந்துவீச்சை மேற்கொண்டு இங்கிலாந்தின் ரன் குவிப்பை கட்டுபடுத்தினார். குல்தீப் யாதவ் மற்றும் பூம்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்திய சிறப்பான ஃபீல்டிங்கை வெளிபடுத்தியிருந்தாலும் சில சில பவுண்டரிகளை நழுவவிட்டுக் கொண்டுதான் இருந்தனர்.

நாம் இங்கு இங்கிலாந்தின் அதிவேக இன்னிங்ஸை கண்டு தெறிக்கவிடப்பட்ட சில டிவிட்டர் பதிவுகளை காண்போம்:

Quick Links

App download animated image Get the free App now