2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இலங்கை மோதிய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனை புள்ளிவிவரங்கள்

Indian cricket team
Indian cricket team

2019 உலகக்கோப்பை தொடரில் ஜீன் 7ல் நடந்த ஆட்டம் 44ல் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திமுத் கருடாரத்னே பேட்டிங்கை தேர்வு செய்தார். இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களை குவித்தது. இந்த இலக்கை இந்திய அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சேஸ் செய்து அசத்தியது. 39 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே இலக்கை எட்டிய இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விரிவான ரன்கள்:

இலங்கை - 264/7 (50), (ஆன்ஜீலோ மேதீவ்ஸ் 113, லஹீரு திரமன்னே 53; ஜாஸ்பிரிட் பூம்ரா 3/37)

இந்தியா - 265/3 (43.3), (ரோகித் சர்மா 103, லோகேஷ் ராகுல் 111; கசுன் ரன்ஜீதா 1/47)

முடிவு: இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாம் இங்கு இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் நிகழ்த்தப்பட்ட சில சாதனை புள்ளி விவரங்களைப் பற்றி காண்போம்.

வீரர்களின் புள்ளி விவரங்கள்

இந்திய பௌலிங்

Jasprit Bumrah
Jasprit Bumrah

1) ஜாஸ்பிரிட் பூம்ராவின் 57வது ஒருநாள் போட்டி இதுவாகும். இப்போட்டியில் தனது 100 ஒருநாள் விக்கெட்டுகளை நிறைவு செய்தார். இதன்மூலம் அதிவேக 100 ஓடிஐ விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும், ஒட்டுமொத்தமாக 9வது இடத்தையும் பிடித்துள்ளார். அதிவேக 100 ஓடிஐ விக்கெட்டுகளை 56 போட்டிகளில் முகமது ஷமி வீழ்த்தி முதல் இந்திய பௌலராக உள்ளார்.

ஃபீல்டிங்

1)இந்திய விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி மற்றும் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்தர ஜடேஜா ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த விக்கெட் கீப்பர் - பௌலர் ஜோடியாக சாதனை படைத்துள்ளனர். இந்த இன்னிங்ஸ் முடிவில் இருவரும் இனைந்து 29 ஓடிஐ விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். நயன் மோங்கியா (விக்கெட் கீப்பர்) மற்றும் வெங்கடேஷ் பிரசாத் (பௌலர்) ஆகியோர் இனைந்து இதற்கு முன் 28 ஓடிஐ விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

2) உலகக்கோப்பை வரலாற்றில் மகேந்திர சிங் தோனி விக்கெட் கீப்பராக 33 கேட்சுகளை பிடித்துள்ளார். உலகக்கோப்பையில் முன்னாள் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் 45 கேட்சுகளும், முன்னாள் இலங்கை விக்கெட் கீப்பர் குமார் சங்கக்காரா 41 கேட்சுகளும் பிடித்துள்ளனர். இந்த வரிசையில் மூன்றாவது விக்கெட் கீப்பராக மகேந்திர சிங் தோனி இடம்பெற்றுள்ளார்.

3) மகேந்திர சிங் தோனி உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 8 ஸ்டம்பிங்குகளை செய்துள்ளார். குமார் சங்கக்காரா 13 ஸ்டம்பிங்குகளை உலகக்கோப்பை கிரிக்கெட்டில் செய்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது வீரராக தோனி இடம்பெற்றுள்ளார்.

பேட்டிங்

Rohit Sharma & KL Rahul
Rohit Sharma & KL Rahul

1) ரோகித் சர்மா 2019 உலகக்கோப்பை தொடரில் 647 ரன்களை குவித்துள்ளார். தகுதிச் சுற்றில் ஒரு பேட்ஸ்மேனின் அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.

2) ஒரு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தனிநபர் ஒருவரது அதிகபட்ச ரன்கள் பட்டியலில் 647 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார் ரோகித் சர்மா. இப்பட்டியலில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 2003 உலகக்கோப்பை தொடரில் 673 ரன்கள் குவித்து முதல் இடத்திலும், முன்னாள் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் மேதீவ் ஹாய்டன் 2007 உலகக்கோப்பை தொடரில் 659 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்தில் உள்ளனர். ரோகித் 647 ரன்களுடன் 3வது இடத்தில் உள்ளார்.

3) ஒரு உலகக்கோப்பை தொடரில் 5 சதங்களை அடித்த ஒரே பேட்ஸ்மேன் ரோகித் சர்மா. இதற்கு அடுத்தபடியாக 2015 உலகக்கோப்பை தொடரில் 4 சதங்களை விளாசிய குமார் சங்கக்காரா இரண்டாவது இடத்தில் உள்ளார்.

4) உலகக்கோப்பை வரலாற்றில் சேஸிங்கில் 3 முறை சதங்களை விளாசிய ஒரே பேட்ஸ்மேன் ரோகித் சர்மா.

5) உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார். இலங்கை அணிக்கு எதிராக ரோகித் சர்மா குவித்த சதத்தின் மூலம் உலகக்கோப்பையில் இவரது 6வது சதம் வந்தது. சச்சின் டெண்டுல்கர் தன் உலகக்கோப்பை வரலாற்றில் 6 சதங்களை முதன்முதலாக விளாசியுள்ளார்.

6) உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தொடர்ந்து மூன்று சதங்களை விளாசிய இரண்டாவது கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா. 2015 உலகக்கோப்பை தொடரில் குமார் சங்கக்காரா தொடர்ந்து 3 சதங்களை உலகக்கோப்பையில் முதன்முதலாக விளாசியுள்ளார்.

7) ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு (அக்டோபர் 2018) பிறகு ரோகித் சர்மா இரண்டாவது இந்திய பேட்ஸ்மேனாக தொடர்ந்து 3 சதங்களை குவித்துள்ளார்.

8) உலகக்கோப்பை கிரிக்கெட்டில் விராட் கோலி மொத்தமாக 1029 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் உலகக்கோப்பையில் 1000+ ரன்களை குவித்த 3வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார். சச்சின் டெண்டுல்கர்(2273 ரன்கள்), சவ்ரவ் கங்குலி(1006 ரன்கள்) ஆகியோர் உலகக்கோப்பை வரலாற்றில் 1000+ ரன்களை விளாசிய முதல் இரு இந்திய பேட்ஸ்மேன்கள் என்ற பெருமையை பெற்றனர்.

9) உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் ஒரு இன்னிங்ஸில் லோகேஷ் ராகுல்(111 ரன்கள்) மற்றும் ரோகித் சர்மா (103 ரன்கள்) சதம் விளாசி அசத்தியுள்ளனர். 2011 உலகக்கோப்பையில் இலங்கை தொடக்க ஆட்டக்காரர்கள் உப்புழ் தரங்கா மற்றும் திலகரத்னே தில்ஷான் ஆகியோர் இரு முறை இச்சாதனையை படைத்துள்ளனர்.

பார்டனர்ஷீப்

1) தொடக்க விக்கெட்டிற்கு ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் 189 ரன்களை இப்போட்டியில் குவித்தனர். உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணியின் அதிகபட்ச பார்ட்னர்ஷீப் ரன்கள் இதுவாகும். இதே சாதனையை இதற்கு முன் வங்கதேசத்திற்கு எதிராக இவர்கள் இருவருமே படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை பேட்டிங்

Angelo Mathews
Angelo Mathews

1)இப்போட்டியில் ஆன்ஜீலோ மேதீவ்ஸ் முதல் இன்னிங்சில் 113 ரன்களை குவித்தார். உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவிற்கு எதிராக இலங்கை பேட்ஸ்மேனின் இரண்டாவது சதம் இதுவாகும். 2011 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக மஹேல்லா ஜெயவர்த்தனே முதல் முறையாக சதம் விளாசினார்.

பௌலிங்

Lasith Malinga
Lasith Malinga

1) லாசித் மலிங்கா தனது கிரிக்கெட் உலகக்கோப்பை வாழ்வில் 56 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இப்போட்டியில் இவர் வீழ்த்திய ஒரு விக்கெட் மூலம் பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளரின் 55 விக்கெட்டுகள் சாதனை தளர்த்தி மலிங்கா முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலிய வலதுகை பந்துவீச்சாளர் க்ளின் மெக்ராத் 71 விக்கெட்டுகளையும், இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் 68 விக்கெட்டுகளையும் உலகக்கோப்பை வீழ்த்தியுள்ளனர். இந்த வரிசையில் மூன்றாவது வீரராக மலிங்கா இனைந்துள்ளார்.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now