நடந்தது என்ன?
கடந்த சனிக்கிழமையன்று நடந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கில் கடும் தடுமாற்றத்தை வெளிபடுத்தி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டாப் 4 இடத்தில் உள்ளது. மேற்கிந்திய தீவுகள் நியூசிலாந்துடனான கடந்த போட்டியில் போராடி நூலிலையில் தோல்வியை தழுவி இனிவரும் போட்டிகளில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதவுள்ள விருவிருப்பான இந்த போட்டியின் வானிலை நிலவரப்படி, மழை எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் முழு போட்டியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு தெரியுமா?
2019 உலகக்கோப்பை தொடரில் மழையானது அதிக முறை குறுக்கிட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மழையினால் ஒரு போட்டியை இழந்துள்ளன. மான்செஸ்டரில் இவ்விரு அணிகளும் மோதவுள்ள போட்டியில் வானிலை நிலவரம் எவ்வாறு அமையும் என்பதனை கிரிக்கெட் ரசிகர்கள் அலசி ஆராய்ந்திருப்பார்கள்.
கதைக்கரு
தரவரிசையில் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இரு அணிகளுமே ஒரு சிறந்த நிலையில் உள்ளது. எனவே ரசிகர்கள் இரு சிறந்த அணிகளுள் எந்த அணி சிறந்த ஆதிக்கத்தை செலுத்தும் என்பதை காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர். இந்திய அணி தனது வெற்றி பாதையை தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் நோக்கில் உள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் இப்போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. ஏனெனில் இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வெற்றி வாய்ப்பை பொறுத்து மட்டுமே அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு உள்ளது. மற்ற அணிகள் இப்போட்டி மழையினால் பாதிக்கப்பட்டு இரு அணிகளும் தங்களது ஒவ்வொரு புள்ளிகளையும் இழக்க வேண்டும் என வேண்டுதல் விடுத்து வருகின்றனர். மழைக்கடவுள் இந்த வேண்டுதளை கவனிப்பாரா என்றால் சற்று சந்தேகம் தான்!
போட்டி நடைபெறும் நாளன்று மழை பொழிய மிகக்குறைந்த வாய்ப்புகளாக இருந்து உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் செவிகளுக்கு இதமான செய்தி வெளியாகியுள்ளது. போட்டி நாளன்று காலையில் மேகமூட்டமாக இருக்கும். மழை பெய்ய 10 சதவீத மழையே வாய்ப்புள்ளது. அந்த நாளன்று நேரம் செல்ல செல்ல மேகங்கள் சிறிது சிறிதாக மறையும், எனவே மழை பொழிய சிறிது கூட வாய்ப்பில்லை. வானிலை அறிவிப்பு சரியாக அமைந்தால், கண்டிப்பாக ஒரு சிறப்பான ஆட்டத்தை கண்டு ஆடுகள ஊழியர்கள் மற்றும் ரசிகர்கள் மிகவும் மட்டற்ற மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
அடுத்தது என்ன?
கடந்த போட்டியில் இந்திய அணி தனது தவற்றை திருத்திக் கொண்டு விளையாடும். மேற்கிந்திய தீவுகள் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால் கண்டிப்பாக இப்போட்டியில் பஞ்சமிருக்காது. இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதும் போட்டி கண்டிப்பாக ஒரு பெரும் விறுவிறுப்பாக இருக்கும். மழை மட்டும் குறுக்கிடாமல் இருந்தால் ஒரு சிறந்த பேட்டிங் மற்றும் பௌலிங்கை இந்தப் போட்டியில் கண்ட திருப்தி ரசிகர்களுக்கு இருக்கும்.