2019 உலகக்கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் நிகழ உள்ள ஒரு மாற்றம்

Indian Cricket team
Indian Cricket team

உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளுள் இந்தியா முதன்மையாக திகழ்கிறது, இதற்கு காரணம் இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்திறனே ஆகும். வியாழன் அன்று நடைபெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் நோக்கில் உள்ளது.

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் என இரு அணிகளிலுமே சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்தும் திறனை கொண்ட வீரர்கள் உள்ளனர். வானிலை நிலவரம் சரியாக இருப்பதால் மான்செஸ்டரில் இப்போட்டி முழுவதும் நடைபெறும். இந்திய அணி ஆப்கானிஸ்தானிற்கு எதிராக கடும் தடுமாற்றத்தை வெளிபடுத்தியது, எனவே மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக தனது தவற்றை சரி செய்து கொள்ள முயற்சிக்கும்.

மேற்கிந்திய தீவுகள் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் இப்போட்டியிலிருந்து, இனிவரும் அனைத்திலும் வென்றால் மட்டுமே மட்டுமே டாப் 4 இடங்களுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் உலகக்கோப்பையில் விளையாடிய கடந்த 5 போட்டிகளில் 1 புள்ளி மட்டுமே பெற்றுள்ளது. இருப்பினும் தனது அதிரடி ஆட்டத்தை அனைத்து போட்டிகளிலும் மேற்கிந்தியத் தீவுகள் வெளிபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மேற்கிந்தியத் தீவுகள் தனது முழு ஆட்டத்திறனையும் வெளிகொணர்ந்தால் கண்டிப்பாக இந்திய அணிக்கு பெரும் பாதிப்பாக இருக்கும்.

இந்திய அணி இப்போட்டியில் ஆடும் XIஐ மிகவும் கவனமாக தேர்வு செய்ய வேண்டும். ஏனேனில் ஒரு வீரர் சொதப்பினால் கூட போட்டி எதிரணிக்கு சாதகமாக அமைய அதிக வாய்ப்புள்ளது. அணி நிர்வாகம் ஒரு கடினமான முடிவை எடுக்க அதிக வாய்ப்புள்ளது. அதாவது விஜய் சங்கர்-க்கு பதிலாக ரிஷப் பண்ட்-ஐ களமிறக்க முயற்சி செய்யும்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் விரலில் ஏற்பட்ட முறிவின் காரணமாக விலகிய ஷீகார் தவானிற்கு மாற்று வீரராக ரிஷப் பண்ட் இந்திய அணியில் இடம்பிடித்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான விஜய் சங்கர் பாகிஸ்தானிற்கு எதிரான போட்டியில் கடைநிலை ஓவரில் அதிரடி ஹிட் ஷாட்களை விளாச தவறினார். ஆனால் பௌலிங்கில் சிறந்த பங்களிப்பை அளித்து இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் ஒரு பெரிய ரன் குவிப்பில் ஈடுபட விஜய் சங்கர் தவறினார். அத்துடன் கடினமான நெருக்கடி போட்டியில் அவருக்கு பௌலிங் வாய்ப்பும் வழங்கப்படவில்லை. எனவே அவரது பௌலிங்கை விராட் கோலி தற்போது வரை நம்ப வில்லை என்பது இதன்மூலம் நமக்கு தெரிகிறது.

ரிஷப் பண்டை அணியில் சேர்பதன் மூலம் ஒரு புதுவிதமான பேட்டிங் வரிசையை இந்திய அணியில் காண முடியும். தற்போது இந்திய உலகக்கோப்பை அணயில் முழுவதும் வலதுகை பேட்ஸ்மேன்கள் மட்டுமே இருப்பாதால், இடதுகை பேட்ஸ்மேனாக ரிஷப் பண்டை இனைப்பதன் மூலம் சற்று மாறுதலான பேட்டிங் வரிசையை காண முடியும். டெத் ஓவரில் ரிஷப் பண்ட் அதிரடி பேட்டிங்கை வெளிபடுத்தி இந்திய அணிக்கு பக்கபலமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

இந்த இளம் வீரர் ஷீகார் தவானிற்கு மாற்றாக இந்திய அணியில் இடம்பெற்றார். வியாழன் அன்று நடைபெறவுள்ள போட்டியில் ரிஷப் பண்டிற்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Quick Links

App download animated image Get the free App now