ஆதிக்கங்கள் எப்போதும் நிரந்தரம் அல்ல! கடந்த இரு ஆண்டுகளாக ஒருநாள் கிரிக்கெட்டில் கொடிகட்டிப் பறந்த அணி இங்கிலாந்து. எனவே இவ்வருட உலகக்கோப்பை இங்கிலாந்திடம் வந்து சேரும் என ரசிகர்கள் நம்பினர். கிரிக்கெட்டின் மிகப்பெரிய தொடரான உலகக்கோப்பையில் இங்கிலாந்திற்கு எவ்வித பாதிப்பும் இருக்காது என நினைத்தனர்.
ஒரு சிறந்த அணி கட்டமைப்புடன் இங்கிலாந்து உலகக்கோப்பையில் களம் கண்டது. மண்ணின் மைந்தர்கள் மற்றும் உலகின் நம்பர் 1 ஒருநாள் அணியான இங்கிலாந்தில் அதிரடி மற்றும் நிலையான பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதல் இறுதி வரை உள்ளனர். அத்துடன் மின்னல் வேக பந்துவீச்சு, சரியான சுழற்பந்துவீச்சு மற்றும் நடுநிலை கேப்டன் இயான் மோர்கன் ஆகியவற்றை கொண்டு தலைசிறந்த அணியாக வலம் வந்தது.
முழு உத்வேகத்துடனும், பாகிஸ்தானிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-0 என உலகக்கோப்பைக்கு முன்னதாக நடந்த தொடரை கைப்பற்றிய உற்சாகத்திலும் இங்கிலாந்து களம் கண்டது.
அதிரடியான தொடக்கம்
இங்கிலாந்து உலகக்கோப்பையை மிகவும் சிறப்பானதாக தொடங்கியது. தனது பழைய எதிரியான தென்னாப்பிரிக்காவை முதல் போட்டியில் வீழ்த்தி தன் ஆதிக்கத்தை தொடங்கியது. இங்கிலாந்து வீரர்களின் சிறந்த பங்களிப்பால் 300+ ரன்கள் குவிக்கப்பட்டது, பந்துவீச்சாளர்கள் மின்னல் வேகத்தில் வீசி எதிரணி பேட்டிங்கை நிலைகுலையச் செய்தனர்.
அந்தச் சமயத்தில் பார்க்கும் போது இங்கிலாந்து அணி இவ்வுலகக் கோப்பையில் சாதனை மேல் சாதனை படைக்க உள்ளனர் என்பது தெரிந்தது.
ஏற்றங்கள் - இறக்கங்கள்
பின்னர் இங்கிலாந்து வானிலை படிப்படியாக மாறத் தொடங்கின. உலகக்கோப்பையின் ஆரம்ப போட்டிகளில் கடும் மழை பாதிப்பு இருந்து வந்தது. அத்துடன் ஆச்சரியமளிக்கும் விதத்தில் ஒரு முக்கிய போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.
ஆசியாவைச் சேர்ந்த பாகிஸ்தான் அணி தொடர் தோல்விகளினால் துவண்டு போயிருந்தது. இருப்பினும் இங்கிலாந்திற்கு எதிராக தனது முழு ஆட்டத்தையும் வெளிபடுத்தி 348 என்ற கடினமான இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான். இங்கிலாந்து அந்த இலக்கை சேஸ் செய்ய தவறியது. ஜோ ரூட் மற்றும் ஜாஸ் பட்லர் இருவரும் இப்போட்டியில் சதமடித்தனர். மற்ற வீரர்கள் ஜொலிக்கவில்லை.
ஜேஸன் ராயின் அற்புதமான ஆட்டத்தால் வங்கதேசத்திற்கு எதிராக மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியது இங்கிலாந்து, மற்றும் ஜோஃப்ரா ஆர்சர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான எகானமிக்கல் பௌலிங்கை வெளிபடுத்தியதன் மூலம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இங்கிலாந்து வென்றது.
மேலும் ஆப்கானிஸ்தானிற்கு எதிராக இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் 17 சிகஸர்களை விளாசி 397 ரன்களை இலக்காக நிர்ணயிக்க உதவினார். அனைத்து நிகழ்வுகளும் இங்கிலாந்திற்கு சாதகமாத்தான் சென்று கொண்டிருந்தது.
தவறுக்கு மேல் தவறு
இதன் பின் இங்கிலாந்து ஆட்டத்திறன் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. சற்று ரன் குவிக்க கடினமான ஆடுகளத்தில் இலங்கையின் பௌலர் லாசித் மலிங்கா தனது ஆதிக்கத்தை செலுத்தினார். பரபரப்பாக சென்ற இப்போட்டியில் இங்கிலாந்து 232 என்ற இலக்கை அடைய முடியாமல் தோல்வியை தழுவி தனது தீமை காலத்தை தானகவே தொடங்கி கொண்டது.
இங்கிலாந்தின் மோசமான பேட்டிங் மீண்டுமொருமுறை லார்ட்ஸ் மைதானத்தில் தனது பரம எதிரியான ஆஸ்திரேலிய அணியிடம் வெளிபடுத்தியது. 285 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து ஆல்-அவுட் ஆகி வெளியேறியது. மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜேஸன் பெஹரன்ஹாப் ஆகியோர் தங்களது இடதுகை ஸ்விங் பந்துவீச்சு மூலம் இங்கிலாந்து பேட்டிங்கை சிதைத்தனர், அத்துடன் டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் ஃபின்ச் இந்த சவாலான மைதானத்தில் தங்களது சிறப்பான பேட்டிங் பங்களிப்பை அளித்தனர்.
இதன் மூலம் ஒரு அணியின் கட்டமைப்பு முழுவதும் நொறுக்கப்பட்டது.