2019 உலகக்கோப்பையில் இறுதி தருணத்தில் இங்கிலாந்து தடுமாறுவதற்கான காரணங்கள்

England v Australia - ICC Cricket World Cup 2019
England v Australia - ICC Cricket World Cup 2019

எந்த இடத்தில் தவறு நடந்தது?

தொடரின் ஆரம்பத்தில் சிறந்த பேட்டிங் வரிசையை கொண்டுள்ளதாக திகழ்ந்தது இங்கிலாந்து அணி, அத்துடன் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள முண்ணணி அணிகளுள் முதல் அணியாகவும் திகழ்ந்தது. ஆனால் இங்கிலாந்து வெல்ல வேண்டும் என்ற போட்டியில் வெல்லாமல் அந்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக இரு தொடர் தோல்விகளை சந்தித்து கடும் நெருக்கடியை சந்தித்துள்ள இங்கிலாந்தை பற்றிய வருத்தங்கள் ரசிகர்களுக்கு ஓய்ந்த பாடில்லை.

இலங்கை அணிக்கு எதிராக நிலைத்து விளையாட வேண்டிய இடத்தில் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தியது இங்கிலாந்து. இயான் மோர்கன் மற்றும் ஜோ ரூட் போன்ற பொறுப்பான பேட்ஸ்மேன்களும் கூட ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த தவறினர். இப்போட்டியில் செய்த அதே தவறை ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும் செய்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சில் சொதப்பினார்கள்.

இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தங்களது ஆட்டத்திறனை சரியாகத்தான் வெளிபடுத்தி வருகிறார்கள், கடந்த காலங்களில் வெளிபடுத்திய அதே சிறப்பான ஆட்டங்களைத்தான் தற்போதும் வெளிபடுத்துகின்றனர். ஆனால் போட்டியில் நெருக்கடியை சமாளிக்கத் தவறுகின்றனர். பென் ஸ்டோக்ஸ் மட்டுமே ஆட்டத்தின் பொறுப்புணர்ந்து விளையாடுகிறார்.

ஜோஃப்ரா ஆர்சரின் பௌலிங் மிகவும் அற்புதமாக அனைத்து போட்டிகளிலும் உள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆடுகளம் நன்றாகவே அவருக்கு உதவியது. இப்போட்டியில் தொடக்க பௌலர்கள் ஷார்ட் பந்தை வீசியது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்தது. ஸ்விங் பந்துவீச்சை வெளிகொணர தவறினர்.

சிறப்பான ஃபீல்டிங்கை கொண்ட இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடந்த போட்டியில் கடுமையாக சொதப்பியது. இதனையெல்லாம் காணும் போது ஒரே நிகழ்வு தான் நியாபகம் வருகிறது. உலகக்கோப்பையின் லீக் சுற்றுகள் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனைகளை படைத்த இங்கிலாந்து அணி சொதப்புவது பெரும் வருத்தத்தையும் சந்தேகத்தையும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

ஜேஸன் ராயின் காயம் அந்த அணிக்கு எவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது இதன்மூலம் நமக்கு தெரிகிறது. இருப்பினும் ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தும் திறமையுள்ள 11 வீரர்களைத்தான இங்கிலாந்து தேர்வு செய்து களமிறக்கியது. பல வருட கடும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இங்கிலாந்து இவ்வாறு சொதப்பியது அந்த அணிக்கு நம்பிக்கையை குலைக்கும் வகையில் அமைந்திருக்கும்.

இந்த தோல்விகளின் மூலம் கேப்டன் இயான் மோர்கன் கடும் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

"தற்போதுள்ள சூழ்நிலையிலிருந்து மீண்டு வெளிவருவோம்" என ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டி முடிவில் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.

"இங்கிலாந்து தற்போது கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. 2019 உலகக்கோப்பை தொடரில் மிகவும் வலிமை வாய்ந்த அணிகளாக நிகழும் இந்தியா மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வென்றாக வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இரு தொடர் தோல்வி இங்கிலாந்து மனநிலையை வெகுவாக பாதித்திருக்குமா ? இங்கிலாந்தின் ஆட்டத்திறன் திரும்புமா ? காலம் மட்டுமே இதற்கு பதில் சொல்லும்.

PREV 2 / 2

Quick Links

Edited by Fambeat Tamil