2019 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில் அடுத்த ஐசிசி தொடரான டி20 உலகக்கோப்பையானது ஆஸ்திரேலியாவில் 2020ல் நடைபெறவுள்ளது. அனைத்து அணிகளும் இந்த மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவிற்காக தங்களது அணிகளை தயார் செய்து வருகின்றனர்.
உலகெங்கும் நடைபெறும் டி20 லீக் சுற்றில் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்திய இளம் வீரர்கள் பெரும்பாலும் இவ்வுலகக்கோப்பை தொடரில் இடம்பெற வாய்ப்புள்ளது. மேலும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த இதுவே அவர்களுக்கு ஒரு களமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இந்திய அணி ஏற்கனவே இப்பணியில் களமிறங்கி விட்டது. எதிர்வரும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இளம் வீரர்களை தேர்வு செய்து களமிறக்க உள்ளது. 3 வீரர்கள் முதல் முறையாக டி20 அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 5 வீரர்கள் மீண்டும் இந்திய டி20 அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ரசிகர்களின் விருப்ப வீரர்களாக திகழும் சில கிரிக்கெட் வீரர்களை தேர்வுக்குழு இந்திய அணியிலிருந்து கழட்டி விடவும் வாய்ப்புள்ளது. நாம் இங்கு இந்திய 2020 டி20 உலகக்கோப்பை திட்டத்தில் இடம்பெற வாய்ப்பில்லாத 3 உயர்நிலை வீரர்களைப் பற்றி காண்போம்.
#1 தினேஷ் கார்த்திக்
2019 உலகக்கோப்பை தொடரில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டை விட அனுபவ விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்-ற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டது. தினேஷ் கார்த்திக்கின் அதிக அனுபவம் மற்றும் சிறந்த விக்கெட் கீப்பங் திறனை இம்முடிவிற்கு காரணமாக இந்திய தேர்வுக்குழு தெரிவித்திருந்தது.
இருப்பினும் தமிழ்நாடு விக்கெட் கீப்பரான இவர் தமக்கு அளிக்கப்பட்ட குறுகிய வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் சொதப்பியதால் எதிர்வரும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலிருந்து கழட்டிவிடப்பட்டுள்ளார்.
கடந்த வருடத்தில் நிதாஷா டிராபியில் கடைநிலையில் தினேஷ் கார்த்திக் விளாசிய 29 ரன்களின் மூலம் இந்திய அணி தோல்வி விளிம்பிலிருந்து காப்பற்றப்பட்டது. அச்சமயத்தில் அனைவரும் தினேஷ் கார்த்திக்கை தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக கண்டனர். அத்துடன் டெஸ்ட் போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டத்திறன் சீராக இல்லாத காரணத்தால் இந்திய தேர்வுக்குழு அவருக்கு அளித்த வாய்ப்பை பயன்படுத்தி அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள தவறிவிட்டார்.
இவரது கிரிக்கெட் வாழ்வில் கிட்டத்தட்ட 15 வருடங்கள் கிரிக்கெட்டிற்காக செலவிட்டார். அனால் அவரது சீரான ஆட்டத்திறன் சீராக இல்லாத காரணத்தால் பல முறை அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே 2020 டி20 உலகக்கோப்பை திட்டத்தில் இவரை இந்திய தேர்வுக்குழு கண்டு கொள்ளமாட்டார்கள் என தெரிகிறது.
#2 சுரேஷ் ரெய்னா
இந்திய அணியின் சிறந்த டி20 வீரராக அதிக வருடங்கள் திகழ்ந்தவர் சுரேஷ் ரெய்னா. அடுத்து வரும் வருடங்களின் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பங்கேற்று பல சாதனைகளை படைத்தார்.இருப்பினும் கடந்த இரு ஆண்டுகளாக இவரது டி20 ஆட்டத்திறன் மங்கியுள்ளது. ரெய்னாவின் ரன் குவிப்பும் குறைந்துள்ளது, அத்துடன் இவரது உடற்தகுதியும் படிப்படியாக தாழ்ந்துள்ளது.
இவ்வருட ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா 23.50 சராசரி மற்றும் 121.97 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 383 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.
கடந்த வருடம் இங்கிலாந்தில் நடந்த டி20 தொடர்தான் இந்திய அணிக்காக ரெய்னா விளையாடிய கடைசி டி20 தொடராகும். பவுண்ஸரில் தொடர்ந்து தடுமாறி வந்த காரணத்தால் சுரேஷ் ரெய்னா அணியிலிருந்து நீக்கப்பட்டார். இதுவே அவரது கிரிக்கெட் வாழ்க்கையையும் முடிவுக்கு கொண்டு வரும் போல் தெரிகிறது.
இந்திய அணியில் முதன்முதலாக சர்வதேச டி20யில் சதம் விளாசிய பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா. இதற்கான முன்னுரிமை வாய்ப்பை தற்போது அவர் கடந்துவிட்டார். எனவே 2020 டி20 உலகக்கோப்பை தொடரின் திட்டத்தில் இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா இடம்பெற வாய்ப்பு மிக மிக குறைவே ஆகும்.
#1 மகேந்திர சிங் தோனி
அடுத்த வருட டி20 உலகக்கோப்பை தொடரில் மகேந்திர சிங் தோனியை காண்பது சற்று கடினமான நிகழ்வாகும். லெஜன்ட்ரி இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தலைமையில் 2007 டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது.
இளம் அதிரடி வீரர்கள் மற்றும் விக்கெட் கீப்பர்களான ரிஷப் பண்ட், இஷான் கிஸான், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் இருப்பதன் காரணத்தால் இந்திய டி20 அணியில் இவர்களுக்கு மட்டுமே முதன்மை விக்கெட் கீப்பங் வாய்ப்பு இனிவரும் காலங்களில் அளிக்கப்படும் எனத் தெரிகிறது. தோனியின் முதன்மை விக்கெட் கீப்பிங் வாய்ப்பு 2019 உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது போல் தெரிகிறது.
இதற்கு அறிகுறியாக எதிர்வரும் மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடர் மற்றும் கடந்த வருட ஆஸ்திரேலிய டி20 தொடரிலும் தோனி தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு தொடரிலும் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக இருந்தார். அத்துடன் மற்றொரு விக்கெட் கீப்பராக அணியிலிருந்த தினேஷ் கார்த்திக்கும் அணியிலிருந்து தற்போது கழட்டிவிடப்பட்டுள்ளார்.
தோனி அடுத்த இரு மாதங்களுக்கு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு கேட்டுள்ளார். இந்த இடைவெளியில் ரிஷப் பண்ட் தன்னை விக்கெட் கீப்பிங் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் நிறுபிக்க வேண்டும். ரிஷப் பண்ட் இதனை சரியாக பயன்படுத்தி கொண்டு தன்னை நிறுபித்தால் தேர்வுக்குழு தோனியை விட ரிஷப் பண்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள்.