விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு இவ்வருட உலகக்கோப்பை தொடர் பெரும் ஏமாற்றத்தை அளித்ததது. எனவே தற்போது அனைவரது பார்வையும் ஆஸ்திரேலியாவில் அடுத்த வருடம் அக்டோபரில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரின் மேல் கவனம் திரும்பியுள்ளது. உலகக்கோப்பை டி20யின் முதல் தொடரை இந்திய அணி ஒரு வலிமையான அணியை வடிவமைத்து வென்றது. அதன்பின் நடந்த தொடர்களில் தக்கவைத்துக் கொள்ள தவறியது. இதுவரை நடந்த 5 உலகக்கோப்பை டி20 சீசனில் கடைசியாக நடந்த 2016ல் நடந்த தொடரில் மட்டுமே இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.
இந்திய அணி டி20யில் எப்போழுதுமே வலிமை மிக்கதாகவே இருக்கும். இதற்கு முழு காரணம் வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் மற்றும் மற்ற மாநிலங்களில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடர் ஒரு காரணமாகும். எதிர்வரும் டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளதால் இந்திய அணி நிர்வாகம் அடுத்த சில மாதங்களுக்கு நிறைய வாய்ப்புகளை ஐபிஎல் நட்சத்திர வீரர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து ரசிகர்களின் விருப்படியும், ஒரு சிறந்த XIஐ உருவாக்கும் முயற்சியில் பிசிசிஐ இறங்கப்போகிறது.
தற்போது இந்திய ஓடிஐ அணியில் உள்ள வீரர்கள் பெரும்பாலும் டி20 உலகக்கோப்பையில் இடம்பெறுவர். இருப்பினும் ஒரு சில இடங்கள் தற்போது காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் அடுத்த சர்வதேச தொடரான மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில், ஐபிஎல் தொடரில் அசத்திய வீரர்களுக்கும் உள்ளூர் டி20 தொடரில் அசத்திய வீரர்களுக்கும் வாய்ப்புகளை அணி நிர்வாகம் வழங்க உள்ளது.
நாம் இங்கு 2020 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணி தயார் செய்ய உள்ள 5 வீரர்களை பற்றி காண்போம்.
#5 நவ்தீப் சைனி

கடந்த சில ஆண்டுகளாக நவ்தீப் சைனியின் ஆட்டத்திறன் மிகவும் சிறப்பானதாக இருந்து வருகிறது. 26வயதான இவர் 2019 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக அறிமுகமாக அசத்தினார். தனது அற்புதமான பௌலிங் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்து அனைவரது மனதையும் கவர்ந்தார்.
டெல்லியைச் சேர்ந்த இவர் மணிக்கு 145 கிலோமீட்டர் வேகத்தில் சீராக பந்துவீசும் திறமை உடையவர். அத்துடன் 150 கிலோமீட்டர் வேகத்தில் சில சமயங்களில் வீசுவார். தற்போது இந்திய அணியில் அதிக வேகத்தில் பந்து வீசும் வீரராக இவர் உள்ளார். ஒரு சரியான காரணத்திற்காக அனைவராலும் இவர் போற்றப்படுகிறார். தற்போது நடந்து வரும் மேற்கிந்தியத் தீவுகள்-ஏ அணிக்கு எதிரான லிஸ்ட்-ஏ தொடரில் 3 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
#4 ஸ்ரேயஸ் கோபால்

தற்போது ஸ்ரேயஸ் கோபால் இந்தியாவிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷமாக பார்க்கப்படுகிறார். கடந்த சில வருட உள்ளூர் தொடர்களில் லெக் ஸ்பின்னர் ஸ்ரேயஸ் கோபால் அற்புதமான ஆட்டத்தை வெளிபடுத்தியுள்ளார். பெங்களூரைச் சேர்ந்த இவர் 2018/19ஆம் ஆண்டிற்கான சையத் முஷ்டாக் அலி கோப்பையில் 8 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
2019 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு முன்னணி வீரராக ஸ்ரேயஸ் கோபால் வலம் வந்தார். 25 வயதான இவர் 14 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த தொடரின் 4வது அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமை பெற்றார். தனது ஆட்டத்திறனை அதிகமாக மேம்படுத்தியுள்ளார் ஸ்ரேயஸ் கோபால். தற்போது இந்திய தேர்வுக்குழுவின் கவணம் இவர் மீது திரும்பியுள்ளது.
இவர் சரியான லென்த் மற்றும் லைனில் வீசும் திறன் கொண்டவர். தனது அற்புதமான "கூக்ளி" மூலம் பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்பவர். கடைநிலையில் சில பெரிய ஷாட்களை விளாசும் திறன் கொண்டவர், அத்துடன் ஃபீல்டிங்கிலும் அற்புதமாக கலக்கக்கூடியவர். எனவே இவர் இந்திய டி20 அணியில் இடம்பெற முழு தகுதி உடையவர் ஆவார். கூடிய விரைவில் இவரை இந்திய அணியில் காணலாம்.
#3 ஸ்ரேயஸ் ஐயர்

அமைதி, ஆளுமைத் திறன், சரியான திறமை போன்ற வாரத்தைகளால் புகழக்கூடிய வகையில் சிறந்த பேட்டிங் திறன் கொண்ட வீரர் ஸ்ரேயஸ் ஐயர். மிடில் ஓவரில் சுழற்பந்து வீச்சாளருக்கு எதிராக அதிரடி ரன் குவிப்பில் ஈடுபடும் திறன் உடையவர். அத்துடன் இந்திய டி20 அணியின் நம்பர் 4 பேட்டிங்கிற்கு மிகவும் சிறப்பாக தன்னை தயார் செய்து வருகிறார் ஸ்ரேயஸ் ஐயர்.
கடந்த இரு ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக பெரும் பங்களிப்பை அளித்துள்ளார். 2018ல் 133 என்ற அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் 411 ரன்களை குவித்துள்ளார். 2019ல் 16 போட்டிகளில் 32 சராசரியுடன் 463 ரன்களை விளாசியுள்ளார். அத்துடன் 2018/19 விஜய் ஹசாரே கோப்பையில் மும்பை அணிக்காக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் 6 போட்டிகளில் 93.25 சராசரியுடன் 373 ரன்களை குவித்துள்ளார். இதில் 2 சதங்கள் அடங்கும்.
ஸ்ரேயஸ் ஐயர் 2017ல் ஓடிஐ மற்றும் டி20யில் அறிமுகமானார். ஆனால் அந்த இடத்தை இவர் தக்கவைக்க தவறிவிட்டார். தற்போது இந்திய அணி நிர்வாகம் மிடில் ஆர்டரில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வீரரை தேடி வருகின்றனர். ஸ்ரேயஸ் ஐயர் இந்த இடத்தில் சீரான ரன் குவிக்கும் திறன் கொண்டவர். எனவே டி20 உலகக்கோப்பை தொடரில் இவரை நாம் இந்திய அணியில் காணலாம்.
#2 கலீல் அகமது

ராஜஸ்தானைச் சேர்ந்த 21 வயதான கலீல் அகமது வங்கதேசத்தில் நடந்த 2016 U19 உலகக்கோப்பையில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கலீல் அகமது 2017/18ல் முதல் தர போட்டிகளில் அறிமுகமானார். இருப்பினும் இவரது அதிரடி ஆட்டத்திறன் சையத் முஷ்டாக் அலி கோப்பையில் வந்தது. இத்தொடரில் 10 போட்டிகளில் பங்கேற்ற இவர் 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரது எகானமி ஒரு ஒவருக்கு 7 ரன்களுக்கு குறைவாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் சில இந்தியா-ஏ அணிக்காக விளையாடி சில போட்டிகளில் தொடர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இவர் சரியான வேகத்திலும், நன்றாக ஸ்விங் பந்துவீச்சையும் மேற்கொள்பவர். கலீல் அகமது 2018ல் சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் அணியில் அறிமுகமாகி சில அற்புதமான பந்துவீச்சை வெளிபடுத்தியுள்ளார்.
2019 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 9 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2019 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பை இழந்த கலீல் அகமது எதிர்வரும் காலங்களில் இந்திய அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
#1 ராகுல் சகார்

ராஜஸ்தான் லெக் ஸ்பின்னர் ராகுல் சகார் கடந்த 12 மாதங்களாக அற்புதமான பந்துவீச்சை வெளிபடுத்தி அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் மனதை வென்றுள்ளார். ராகுல் சகார் 2017 ஐபிஎல் தொடரில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணியில் இடம்பெற்றிருந்தார், பின்னர் 2018ல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றார். 2019 ஐபிஎல் தொடரில் மயன்க் மார்கன்டேவிற்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் ஆடும் XIல் விளையாடும் வாய்ப்பு பெற்றார் ராகுல் சகார்.
2018/19 விஜய் ஹசாரே கோப்பையில் தனது முழு அட்டத்தையும் வெளிபடுத்தி ராஜஸ்தான் அணியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றார். 2019 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்களிப்பினை அளித்தவர் ராகுல் சகார். ஒரு நெருக்கடியான ஆட்டத்தில் மிகவும் அற்புதமான எகானமி ரேட்டுடன் பந்துவீசியுள்ளார் ராகுல் சகார். 2019 ஐபிஎல் தொடரில் 6.55 எகானமி ரேட்டுடன் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
19 வயதான இவர் மிகப்பெரிய அளவில் விளையாடும் திறன் கொண்டவர். சமீபத்தில் முடிந்த இலங்கை-ஏ அணிக்கு எதிரான தொடரில் இரு முதல் தர போட்டிகளில் பங்கேற்ற இவர் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தன் இளம் வயதில் தனக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாய்ப்பையும் மிகவும் சரியாக பயன்படுத்தி கொள்கிறார். எனவே சர்வதேச போட்டிகளிலும் இவருக்கு அதிகபடியான வாய்ப்புகள் அளித்து 2020 டி20 உலகக்கோப்பை தொடருக்கு ராகுல் சகாரை இந்திய அணி நிர்வாகம் தயார் செய்ய வேண்டும்.