#3 ஸ்ரேயஸ் ஐயர்

அமைதி, ஆளுமைத் திறன், சரியான திறமை போன்ற வாரத்தைகளால் புகழக்கூடிய வகையில் சிறந்த பேட்டிங் திறன் கொண்ட வீரர் ஸ்ரேயஸ் ஐயர். மிடில் ஓவரில் சுழற்பந்து வீச்சாளருக்கு எதிராக அதிரடி ரன் குவிப்பில் ஈடுபடும் திறன் உடையவர். அத்துடன் இந்திய டி20 அணியின் நம்பர் 4 பேட்டிங்கிற்கு மிகவும் சிறப்பாக தன்னை தயார் செய்து வருகிறார் ஸ்ரேயஸ் ஐயர்.
கடந்த இரு ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக பெரும் பங்களிப்பை அளித்துள்ளார். 2018ல் 133 என்ற அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் 411 ரன்களை குவித்துள்ளார். 2019ல் 16 போட்டிகளில் 32 சராசரியுடன் 463 ரன்களை விளாசியுள்ளார். அத்துடன் 2018/19 விஜய் ஹசாரே கோப்பையில் மும்பை அணிக்காக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் 6 போட்டிகளில் 93.25 சராசரியுடன் 373 ரன்களை குவித்துள்ளார். இதில் 2 சதங்கள் அடங்கும்.
ஸ்ரேயஸ் ஐயர் 2017ல் ஓடிஐ மற்றும் டி20யில் அறிமுகமானார். ஆனால் அந்த இடத்தை இவர் தக்கவைக்க தவறிவிட்டார். தற்போது இந்திய அணி நிர்வாகம் மிடில் ஆர்டரில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வீரரை தேடி வருகின்றனர். ஸ்ரேயஸ் ஐயர் இந்த இடத்தில் சீரான ரன் குவிக்கும் திறன் கொண்டவர். எனவே டி20 உலகக்கோப்பை தொடரில் இவரை நாம் இந்திய அணியில் காணலாம்.
#2 கலீல் அகமது

ராஜஸ்தானைச் சேர்ந்த 21 வயதான கலீல் அகமது வங்கதேசத்தில் நடந்த 2016 U19 உலகக்கோப்பையில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கலீல் அகமது 2017/18ல் முதல் தர போட்டிகளில் அறிமுகமானார். இருப்பினும் இவரது அதிரடி ஆட்டத்திறன் சையத் முஷ்டாக் அலி கோப்பையில் வந்தது. இத்தொடரில் 10 போட்டிகளில் பங்கேற்ற இவர் 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரது எகானமி ஒரு ஒவருக்கு 7 ரன்களுக்கு குறைவாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் சில இந்தியா-ஏ அணிக்காக விளையாடி சில போட்டிகளில் தொடர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இவர் சரியான வேகத்திலும், நன்றாக ஸ்விங் பந்துவீச்சையும் மேற்கொள்பவர். கலீல் அகமது 2018ல் சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் அணியில் அறிமுகமாகி சில அற்புதமான பந்துவீச்சை வெளிபடுத்தியுள்ளார்.
2019 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 9 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2019 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பை இழந்த கலீல் அகமது எதிர்வரும் காலங்களில் இந்திய அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது