அஸ்வின், ரோஹித் காயம் , குல்தீப் யாதவிற்கு பெர்த் டெஸ்டிலும் இடமில்லை!

Indian Team
Indian Team

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 4 டெஸ்ட் , 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. டி20 தொடரில் 1-1 என மழையால் டிரா ஆனது . பின்னர் அடிலெய்டில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் புஜாராவின் அற்புதமான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதையடுத்து டிசம்பர் 14ல் நடைபெறவிருக்கும் ஆஸ்திரேலியாவிற்கெதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணியிலிருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் , ரோஹித் ஷர்மா , குல்தீப் யாதவ் , பிரித்வி ஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர் .

இந்திய கிரிக்கெட் வாரியம் 2வது டெஸ்ட்டில் விளையாடும் 13 பேர் கொண்ட இந்திய அணியை இன்று காலை அறிவித்துள்ளது. ரோஹித் ஷர்மா , ரவிச்சந்திரன் அஸ்வின் , பிரித்வி ஷா ஆகியோர் காயம் காரணமாக 13 பேர் கொண்ட குழுவில் இடம்பெறவில்லை.

இடதுகை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவையும் 13 பேர் கொண்ட அணியில் எடுக்கவில்லை. பெர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சீற்கு சாதகமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் அணியில் நன்றாக சுழற்பந்து வீசக் கூடியவர் ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டுமே. உமேஷ் யாதவ் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் அடிலெய்டு டெஸ்ட்டில் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. தற்போது பெர்த் டெஸ்டில் 13 பேர் கொண்ட குழுவில் இருவரும் இடம்பெற்றுள்ளனர்.

அடிலெய்டு டெஸ்ட்டில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு "இடது பக்க வயிற்றில் திரிபு " ஏற்பட்டதால் பெர்த் டெஸ்டில் இடம்பெறவில்லை. ரோஹித் சர்மாவிற்கு அடிலெய்டு டெஸ்ட்டில் ஃபில்டிங் செய்யும்போது முதுகில் ஏற்பட்ட காயத்தினால் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே அவரும் பெர்த் டெஸ்டில் இடம்பெறவில்லை. ஆஸ்வினிற்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா வும் , ரோஹித் சர்மாவிற்கு பதிலாக ஹனுமா விஹாரியும் 13 பேர் கொண்ட அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Khawaja
Khawaja

ஹனுமா விஹாரி டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடக்கூடியவர். பயிற்சி ஆட்டத்தில் அரை சதத்தை விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ரவீந்திர ஜடேஜா நல்ல ஆட்டத்திறனுடன் உள்ளார். இவர் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்வி ஷா- விற்கு பயிற்சி ஆட்டத்தில் கணுக்காலில் ஏற்பட்ட காயத்தினால் அடிலெய்டு டெஸ்ட்டில் இடம்பெறவில்லை. சிகிச்சை பெற்றுகொண்டிருந்த அவர் இரண்டாது டெஸ்ட்டில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிகிச்சை தொடர்வதால் பெர்த் டெஸ்டிலும் அவர் இடம்பெறவில்லை.

ஆஸ்திரேலியா அணி அடிலெய்டு டெஸ்ட்டில் விளையாடிய அதே அணியினருடனே பெர்த் டெஸ்டிலும் களமிறங்குகிறது.

சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது .

இந்திய அணி விவரம்:

விராட் கோலி ( கேப்டன் ) , முரளி விஜய் , கே லோகேஷ் ராகுல் , புஜாரா , அஜின்க்யா ரகானே , ஹனுமா விஹாரி , ரிஷப் ஃபன்ட் ( விக்கெட் கீப்பர் ) , ரவீந்திரன் ஜடேஜா , இஷாந்த் ஷர்மா , ஜாஸ்பிரிட் பூம்ரா , முகமது ஷமி , புவனேஸ்வர் குமார் , உமேஷ் யாதவ் .

ஆஸ்திரேலியா அணி விவரம்:

மார்கஸ் ஹாரிஸ் , ஆரோன் ஃபின்ச் , டிம் பெய்ன் , கவாஜா, ஷான் மார்ஸ் , பீட்டர் ஹான்ட்ஸ் கோம் , டிராவிஸ் ஹெட் , பேட் கமின்ஸ் , ஸ்ட்ராக் , ஹசில்வுட், நாதன் லயான்.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now