இந்தியாவில் 2008 முதல் தொடங்கி தற்போது வரை சிறப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 தொடர் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கு தங்களது திறமையை நிருபிக்கும் ஒரு வழித்தடமாக உள்ளது. தொடக்கத்தில் டாப் வெளிநாட்டு வீரர்கள் மட்டும் விளையாடி வந்த ஐபிஎல் தொடரில் தற்போது அசோசியேட் உறுப்பு நாட்டு அணிகளில் உள்ள வீரர்களையும் ஐபிஎல் அணிகள் தேர்வு செய்து வருகின்றன.
இதன் மூலம் அசோசியேட் அணிகளின் வீரர்கள் தங்களது ஆட்டத்திறனை வெளிபடுத்த பெரிதும் உதவிகரமாக உள்ளது. அத்துடன் ஐபிஎல் டி20 தொடரின் புகழ் உலகெங்கும் பரப்பவும் இது ஒரு தூண்டுகோலாக அமைகிறது. ஐபிஎல் தொடரில் உலகின் டாப் வீரர்கள் விளையாடி வருவதால் அவர்களிடமிருந்து அசோசியேட் வீரர்கள் சில கிரிக்கெட் நுணுக்கங்களை தெரிந்து கொள்ளவும் இந்ந ஐபிஎல் தொடர் உதவுகிறது.
ஒவ்வொரு ஐபிஎல் போட்டிகளிலும் ஆடுகளத்தில் ரசிகர்கள் நிரம்பி வலிவர். இந்த ரசிகர் பட்டாளத்திற்கு முன் அசோசியேட் வீரர்கள் களமிறங்கும் போது அவர்களுக்கு மேலும் பல உத்வேகங்கள் கிடைத்தது போல் இருக்கும். அத்துடன் அசோசியேட் வீரர்களுக்கு இக்கட்டான நெருக்கடி சமயங்களில் எவ்வாறு போட்டியை கையாண்டு எடுத்து செல்வது என்ற சில நுணுக்கங்களை அந்த வீரர்கள் அறிந்து கொள்வார்கள்.
தற்போதைய நூற்றாண்டில் அசோசியேட் அணிகளில் உள்ள சில வீரர்கள் தங்களது தேசிய அணிகளுக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நெதர்லாந்தை சேர்ந்த ரைன் டென் டோஸ்சேட் (கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ்), ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷீத் கான், முகமது நபி மற்றும் முஜீப் யுர் ரகுமான் (சன் ரைசர்ஸ் ஹைதராபாத்), நேபாளை சேர்ந்த சந்தீப் லாமிச்சனே (டெல்லி கேபிடல்ஸ்) ஆகிய அசோசியேட் அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ரஷீத் கான், முகமது நபி, முஜீப் யுர் ரகுமான், சந்தீப் லாமிச்சனே ஆகியோர் தற்போது ஐபிஎல் தொடரில் அசத்தி வருகின்றனர். ரைன் டென் டோஸ்சேட் 2011 முதல் 2015 வரை கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். இவர்களுடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் வீரர் சீராக் சூரி குஜராத் லயன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் ஆடும் XI-ல் விளையாடும் வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை.
அசோசியேட் அணிகளில் சிறந்த ஆட்டத்திறனுடன் சில வீரர்கள் தற்போது உள்ளனர். ஆனால் அவர்களுக்கு ஆட்டத்திறமை இருந்தும் ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு ஐபிஎல் அணிகள் வாய்ப்புகள் கிடைத்தால் பெரிய அளவிற்கு ஆட்டத்திறனை வெளிப்படுத்துவார்கள் என தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக அவர்களது ஆட்டத்திறனை உலகிற்கு தெரிவிக்கவும், சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சிறப்பான இடத்தை அடையவும் உதவும்.
நாம் இங்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்க தகுதியுள்ள 3 அசோசிஷியேட் அணி வீரர்களை பற்றி காண்போம்.
#1 கலும் மெக்லியோட்
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மெக்லியோட் சமீபத்தில் நடந்த இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் 94 பந்துகளில் 140 ரன்களை விளாசி ஸ்காட்லாந்த் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். ஒருநாள் போட்டி மட்டுமன்றி டி20 போட்டிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.
36 இன்னிங்ஸ் விளையாடியுள்ள இவர் 108.12 என்ற அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 719 ரன்களை விளாசியுள்ளார். அத்துடன் உள்ளுர் டி20 தொடர்களில் 99 இன்னிங்ஸில் பங்கேற்றுள்ள இவர் 251 பவுண்டரிகள் மற்றும் 58 சிக்ஸர்களுடன் 2513 ரன்களை குவித்து சாதனை செய்துள்ளார்.
ரஷீத்கான் மற்றும் முகமது நபி போன்ற நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு திகழும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக உலகக் கோப்பை தகுதி சுற்றில் 157 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் இங்கிலாந்து டி20 பிளாஸ்ட் தொடரில் டெர்ஃபைசர் அணியில் விளையாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
அத்துடன் ஆப்கானிஸ்தான் பிரிமியர் லீக்கில் பக்தியா பந்தர்ஸ் அணியில் விளையாடும் வாய்ப்பும் மெக்லியோட்-டிற்கு கிடைத்தது. இவரது சிறந்த ஆட்டத்திறனிற்காக சர்வதேச கிரிக்கெட்டில் கவுன்சில் 2018 ஆண்டிற்கான "சிறந்த அசோசியேட் கிரிக்கெட் வீரர்" என்ற விருதை அளித்து கௌரவித்தது. இவருக்கு ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்துவார் என்பதில் சந்தேகமில்லை.
#2 பாபர் ஹையாட்
ஹாங்காங் பேட்ஸ்மேன் பாபர் ஹையாட் ஓமனிற்கு எதிராக சேஸிங்கில் 122 ரன்களை விளாசினார். கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது இன்னிங்ஸில் ஒருவரின் அதிகபட்ச ரன்களாகும். அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இது இரண்டாவது அதிகபட்ச ரன்கள் மற்றும் டி20யில் அசோசியேட் வீரர் ஒருவரின் அதிகபட்ச ரன்களாகும்.
இவர் இதுவரை 24 டி20 இன்னிங்ஸில் பங்கேற்று 124.94 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 541 ரன்களை குவித்துள்ளார். கடினமான சமயங்களில் எவ்வாறு பேட்டிங் செய்வது போன்ற நுணுக்கங்களை நன்கு அறிந்தவர் பாபர் ஹையாட். 2016 டி20 உலகக் கோப்பை தகுதி சுற்றில் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான இறுதி போட்டியில் கடைசி ஓவரில் ஹாங்காங் வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பாபர் ஹையாட் சிறப்பாக விளையாடி ஹாங்காங் அணியை 2016 உலகக் கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பை உறுவாக்கினார்.
பாபர் ஹையாட் டி20/ஓடிஐ கிரிக்கெட்டில் தமக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை இதுவரை சரியாக பயன்படுத்தி உள்ளார். நேபாள் டி20 பிரிமியர் லீக்கில் பீரட்நகர் வாரியர்ஸ் அணிக்காக பங்கேற்று அந்த தொடரின் அதிக ரன்களை விளாசியோர் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். அத்துடன் ஹாங்காங் டி20 பிலிட்ஜில் அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பாபர் ஹையாட் தன்னை சரியாக மேம்படுத்தி கொள்ளவும், ஹாங்காங் கிரிக்கெட்டை மேம்படுத்தவும் கண்டிப்பாக உதவும்.
#3 மார்க் வாட்
2016ல் ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் ஒரு டி20 போட்டியில் மோதின. முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்த் அணி 20 ஓவர் முடிவில் 146 ரன்களை மட்டுமே அடித்தது. குறைந்த இலக்கு என்பதால் இந்த போட்டி நெதர்லாந்திற்கு சாதகமாக இருக்கும் என அனைவரும் நினைத்திருந்தனர்.
ஆனால் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மார்க் வாட் நெதர்லாந்து பேட்டிங்கை தனது மாயாஜால சுழலால் வீழ்த்தி 36 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இவர் இந்த போட்டியில் 4 ஓவர்களை வீசி 27 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதினை வென்றார். மார்க் வாட் தனது அணிக்காக சிறப்பான ஆட்டத்தை பௌலிங்கில் நிறைய போட்டிகளில் வெளிபடுத்தியுள்ளார்.
இவர் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த எகனாமிக்கல் பௌலராகவும் திகழ்கிறார். இவ்வருடத்தின் பிப்ரவரி மாதத்தில் நடந்த "ஓமன் குவான்ட்குலர்" தொடரின் இறுதி போட்டியில் 4 ஓவர்களை வீசி 20 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஸ்காட்லாந்தை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இவர் இந்த போட்டியில் தனது பௌலிங்கில் ஒரு ஓவருக்கு 5 ரன்களை மட்டுமே அளித்திருந்தார்.
இதுவரை 24 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 18.47 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அந்நிய மண்ணில் இவரது எகானமி ரேட் 7.43 ஆக உள்ளது.
2018ல் இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் 10 ஓவர்களை வீசி 55 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் 2019 சீசனில் டெர்பிஸைர் அணியில் விளையாடும் வாய்ப்பையும் இவர் பெற்றார்.
டி20 தொடர்களில் மார்க் வாட் மிகவும் விரும்பி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். வருங்காலத்தில் ஐபிஎல் தொடரில் கண்டிப்பாக இவரது வருகையை நாம் கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.