#2 பாபர் ஹையாட்
ஹாங்காங் பேட்ஸ்மேன் பாபர் ஹையாட் ஓமனிற்கு எதிராக சேஸிங்கில் 122 ரன்களை விளாசினார். கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது இன்னிங்ஸில் ஒருவரின் அதிகபட்ச ரன்களாகும். அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இது இரண்டாவது அதிகபட்ச ரன்கள் மற்றும் டி20யில் அசோசியேட் வீரர் ஒருவரின் அதிகபட்ச ரன்களாகும்.
இவர் இதுவரை 24 டி20 இன்னிங்ஸில் பங்கேற்று 124.94 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 541 ரன்களை குவித்துள்ளார். கடினமான சமயங்களில் எவ்வாறு பேட்டிங் செய்வது போன்ற நுணுக்கங்களை நன்கு அறிந்தவர் பாபர் ஹையாட். 2016 டி20 உலகக் கோப்பை தகுதி சுற்றில் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான இறுதி போட்டியில் கடைசி ஓவரில் ஹாங்காங் வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பாபர் ஹையாட் சிறப்பாக விளையாடி ஹாங்காங் அணியை 2016 உலகக் கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பை உறுவாக்கினார்.
பாபர் ஹையாட் டி20/ஓடிஐ கிரிக்கெட்டில் தமக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை இதுவரை சரியாக பயன்படுத்தி உள்ளார். நேபாள் டி20 பிரிமியர் லீக்கில் பீரட்நகர் வாரியர்ஸ் அணிக்காக பங்கேற்று அந்த தொடரின் அதிக ரன்களை விளாசியோர் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். அத்துடன் ஹாங்காங் டி20 பிலிட்ஜில் அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பாபர் ஹையாட் தன்னை சரியாக மேம்படுத்தி கொள்ளவும், ஹாங்காங் கிரிக்கெட்டை மேம்படுத்தவும் கண்டிப்பாக உதவும்.