#3 மார்க் வாட்
2016ல் ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் ஒரு டி20 போட்டியில் மோதின. முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்த் அணி 20 ஓவர் முடிவில் 146 ரன்களை மட்டுமே அடித்தது. குறைந்த இலக்கு என்பதால் இந்த போட்டி நெதர்லாந்திற்கு சாதகமாக இருக்கும் என அனைவரும் நினைத்திருந்தனர்.
ஆனால் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மார்க் வாட் நெதர்லாந்து பேட்டிங்கை தனது மாயாஜால சுழலால் வீழ்த்தி 36 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இவர் இந்த போட்டியில் 4 ஓவர்களை வீசி 27 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதினை வென்றார். மார்க் வாட் தனது அணிக்காக சிறப்பான ஆட்டத்தை பௌலிங்கில் நிறைய போட்டிகளில் வெளிபடுத்தியுள்ளார்.
இவர் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த எகனாமிக்கல் பௌலராகவும் திகழ்கிறார். இவ்வருடத்தின் பிப்ரவரி மாதத்தில் நடந்த "ஓமன் குவான்ட்குலர்" தொடரின் இறுதி போட்டியில் 4 ஓவர்களை வீசி 20 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஸ்காட்லாந்தை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இவர் இந்த போட்டியில் தனது பௌலிங்கில் ஒரு ஓவருக்கு 5 ரன்களை மட்டுமே அளித்திருந்தார்.
இதுவரை 24 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 18.47 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அந்நிய மண்ணில் இவரது எகானமி ரேட் 7.43 ஆக உள்ளது.
2018ல் இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் 10 ஓவர்களை வீசி 55 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் 2019 சீசனில் டெர்பிஸைர் அணியில் விளையாடும் வாய்ப்பையும் இவர் பெற்றார்.
டி20 தொடர்களில் மார்க் வாட் மிகவும் விரும்பி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். வருங்காலத்தில் ஐபிஎல் தொடரில் கண்டிப்பாக இவரது வருகையை நாம் கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.