அஸ்திரேலியாவில் பிபிஎல் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. மிகவும் பிரபலமான இந்த தொடரின் 8வது சீசன் சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் டாஸ் நடைபெறும் பொழுது புதியதாக பேட்டை கொண்டு டாஸை புதிய முறையில் முயற்சி செய்தது, இவை வெற்றிகரமாக முடிந்தது.
இந்த ஆண்டு நடைபெற்ற பிபிஎல் தொடரில் பங்கேற்ற சில வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் விலை போகவில்லை. இவற்றில் 2019 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்களில் 2018 - 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பிபிஎல் தொடரில் சிறந்து விளங்கிய 3 வீரர்களை பற்றி பார்க்கலாம்.
3. கேன் ரிச்சார்ட்சன்
ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி வரும் கேன் ரிச்சார்ட்சன் கடைசியாக 2018ஆம் ஆண்டில் ஜூன் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் பங்கேற்றார். ஆறு வருடங்களுக்கு முன் ஆஸ்திரேலியா அணிக்கு விளையாடத் தொடங்கிய இவர் இன்னும் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடிக்கவில்லை.
ஆஸ்திரேலிய அணியில் நிரந்தர இடம் இல்லை எனினும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த வருடம் கோப்பையை வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக விளையாடிய இவர் 14 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் எக்கானமி 7.75 ஆகும். பிபிஎல் தொடரில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி தனது முதல் கோப்பையை வெல்ல கேன் ரிச்சார்ட்சன் பெரிதும் உதவினார். இதன் காரணமாக இந்தியா அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
பிபிஎல் போட்டிகளில் அசத்தி வந்தாலும் இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இவர் விலை போகவில்லை. இதுவரை புனே வாரியர்ஸ் (2013), ராஜஸ்தான் ராயல்ஸ் (2014) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2016) அணிக்காக விளையாடி உள்ளார். அதிகமாக 14 போட்டிகளில் பங்கேற்றுள்ளார், தனக்கு குறைந்தபட்ச விலை ஒரு கோடி என நிர்ணயித்த இவரை எந்த அணியும் வாங்கவில்லை.
2. டார்ஷி ஷார்ட்
7 வது பிபிஎல் சீசனில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் பிரபலமானவர் டார்ஷி ஷார்ட். ஹோபார்ட் ஹரிகேனஸ் அணிக்கு கவிதைகள் விளையாடிய இவர் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியா அணி தேர்வாளர்களையும் சில ஐபிஎல் அணிகளையும் கவர்ந்தார். அந்த சீசனில் 11 போட்டிகளில் பங்கேற்ற இவர் 579 ரன்கள் குவித்தார், இவர் அந்த சீசனின் தொடர் நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.
பிபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இவரை ஆஸ்திரேலிய அணி தேர்வு செய்தது, இதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.
சென்ற ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பங்கேற்ற இவர் 7 போட்டிகளில் 115 ரன்களை குவித்து ஏமாற்றம் அளித்தார். இதன் காரணமாக இந்து சீசனுக்கான ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை அணியில் இருந்து விடுவித்தது.
இருப்பினும், நடைபெற்ற பிபிஎல் சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். 15 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 637 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடம் இவருக்கே. போராட்டத்தை இந்த சீசனின் தொடர் நாயகன் விருது பெற்றார் டார்ஷி ஷார்ட்.
இந்த வருடத்திற்கான ஏலத்தில் விலை போகவில்லை எனினும் இந்தியாவில் நடைபெற உள்ள டி20 தொடருக்கான ஆஸ்திரேலியா அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
1. டேனியல் கிறிஸ்டியன்
இவர் ஷார்ட் மற்றும் ரிச்சர்ட்சனை போன்று அல்லாமல் நீண்ட நாட்களாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். இவர் முதன் முதலில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக 2011ஆம் ஆண்டு விளையாட ஆரம்பித்தார். அந்த சீசனில் 14 போட்டியில் பங்கேற்ற இவர் 190 ரன்கள் மற்றும் 11 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதற்கு அடுத்த சீசனில் 7 போட்டிகளில் மட்டுமே பங்கேற்ற இவர் 145 ரன்கள் குவித்தார். இதுமட்டுமின்றி 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
2013ம் ஆண்டு பெங்களூரு அணிக்கு தேர்வு செய்யப்பட்டார், ஆனால் அந்த ஆண்டில் 2 போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்தது. இதன் பின்பு சில தொடரில் விளையாடாத இவர் 2017 ஆம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.
இருப்பினும், 9 போட்டிகளில் மட்டுமே பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது இவற்றில் 79 ரன்களை மட்டுமே குவித்தார். 13 போட்டிகளில் பந்துவீசிய இவர் 11 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் டெல்லி கேப்பிடல் அணி இவரை தேர்வு செய்தது, இம்முறையும் 4 போட்டிகளே விளையாட வாய்ப்பு கிடைத்தது.
ஐபிஎல் போட்டிகளில் சொதப்பி வந்தாலும் பிபிஎல் தொடரில் மெல்போர்ன் ரெனிகேடஸ் அணிக்காக அசத்தி வருகிறார். இந்த சீசனில் 14 இன்னிங்ஸ் பேட் செய்த இவர் 254 ரன்கள் குவித்துள்ளார், பந்துவீச்சில் 16 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி என இரண்டிலும் கிறிஸ்டியன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ஐபிஎல் ஏலத்தில் தனது குறைந்தபட்ச விலை ஒரு கோடி என நிர்ணயித்த கிறிஸ்டியனை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை.