1. டேனியல் கிறிஸ்டியன்
இவர் ஷார்ட் மற்றும் ரிச்சர்ட்சனை போன்று அல்லாமல் நீண்ட நாட்களாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். இவர் முதன் முதலில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக 2011ஆம் ஆண்டு விளையாட ஆரம்பித்தார். அந்த சீசனில் 14 போட்டியில் பங்கேற்ற இவர் 190 ரன்கள் மற்றும் 11 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதற்கு அடுத்த சீசனில் 7 போட்டிகளில் மட்டுமே பங்கேற்ற இவர் 145 ரன்கள் குவித்தார். இதுமட்டுமின்றி 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
2013ம் ஆண்டு பெங்களூரு அணிக்கு தேர்வு செய்யப்பட்டார், ஆனால் அந்த ஆண்டில் 2 போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்தது. இதன் பின்பு சில தொடரில் விளையாடாத இவர் 2017 ஆம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.
இருப்பினும், 9 போட்டிகளில் மட்டுமே பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது இவற்றில் 79 ரன்களை மட்டுமே குவித்தார். 13 போட்டிகளில் பந்துவீசிய இவர் 11 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் டெல்லி கேப்பிடல் அணி இவரை தேர்வு செய்தது, இம்முறையும் 4 போட்டிகளே விளையாட வாய்ப்பு கிடைத்தது.
ஐபிஎல் போட்டிகளில் சொதப்பி வந்தாலும் பிபிஎல் தொடரில் மெல்போர்ன் ரெனிகேடஸ் அணிக்காக அசத்தி வருகிறார். இந்த சீசனில் 14 இன்னிங்ஸ் பேட் செய்த இவர் 254 ரன்கள் குவித்துள்ளார், பந்துவீச்சில் 16 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி என இரண்டிலும் கிறிஸ்டியன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ஐபிஎல் ஏலத்தில் தனது குறைந்தபட்ச விலை ஒரு கோடி என நிர்ணயித்த கிறிஸ்டியனை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை.