ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி அதிக ரன்களை குவித்த வீரர்கள்

Suresh Raina, MSD, Michael Hussey
Suresh Raina, MSD, Michael Hussey

உலகில் நடைபெறும் டி20 லீக்கில் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் மிகவும் பிரபலமான தொடராகும். ஐபிஎல் தொடரில் மிகவும் சிறந்த அணியாக திகழ்வது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதுவரை நடந்த 11 சீசனில் 9 சீசனில் விளையாடி 3 முறை சேம்பியனாகவும், 4 முறை இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. அத்துடன் ஐபிஎல் தொடரில் 9 முறையும் அரையிறுதியில் விளையாடியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

சில புகாரினால் இரண்டு வருடங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. மீண்டும் 2018ல் களமிறங்கி இறுதி ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி சேம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

நாம் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன்களை குவித்த 3 வீரர்களை பற்றி காண்போம்.

#1 சுரேஷ் ரெய்னா

Raina
Raina

சுரேஷ் ரெய்னா இந்திய அணியின் சிறப்பான சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர். ஐபிஎல் தொடரில் இவரது சீரான ஆட்டத்தால் Mr.ஐபிஎல் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். ஓவ்வொரு ஐபிஎல் தொடரிலும் குறைந்தது 300 ரன்களையாவது குவித்து சிறப்பான சாதனைகளை முறியடித்து வருகிறார். சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதுகெலும்பாக திகழ்ந்து நிறைய ஆட்டங்களில் அணியின் வெற்றிக்கு தனிமனிதராக செய்லபட்டு வென்று சாதனை படைத்துள்ளார்.

2010ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா 47.39 சராசரியுடன் 575 ரன்களை குவித்தார். அத்துடன் மும்பை இந்தியன்ஸ் அணியுடனான இறுதிப்போட்டியில் 56 ரன்களை குவித்து சென்னை அணி கோப்பையை வெல்ல உதவினார். சென்னை அணிக்காக 147 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 34.35 சராசரியுடனும் 137.19 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 4144 ரன்களை குவித்துள்ளார்.

#2 மகேந்திர சிங் தோனி

Dhoni
Dhoni

இந்த பட்டியலில் இரண்டாவது வீரராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி உள்ளார். ஐபிஎல் தொடரில் இவர் சிறந்த கேப்டன் என்பதில் சந்தேகமில்லை. ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்ட இவர் 2010, 2011, 2018 ஆகிய வருடங்களில் நடைபெற்ற ஐபிஎல் தொடர்களை வென்றுள்ளார்.

தோனி ஐபிஎல் தொடரின் ஆரம்ப சீசனான 2008ஆம் ஆண்டில் 1.5 மில்லியனுக்கு ஏலத்தில் சென்னை அணியால் வாங்கப்பட்டார். அந்த சீசனின் ஏலத்தில் அதிக தொகை கொடுத்த வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையையும் பெற்றார். ஆனால் அதையெல்லாம் அவர் வெளிகாட்டிக் கொள்ளவில்லை. தனது அற்புதமான பங்களிப்பை சென்னை அணிக்கு அளித்து வருகிறார்.

இவர் சென்னை அணிக்காக 9 ஐபிஎல் சீசனில் விளையாடி 36.81 சராசரியுடன் 3442 ரன்களை குவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் வரிசையில் முக்கிய வீரராக திகழந்து கடினமான சூழ்நிலையில் அணியை வழிநடத்தி, சில சமயங்களில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை தேடி தந்துள்ளார் மகேந்திர சிங் தோனி.

#3 மைக்கேல் ஹசி

Michael hussey
Michael hussey

சென்னை அணியின் ரன் மெஷினாக சில காலம் திகழந்தவர் மைக்கேல் ஹசி, முதல் ஐபிஎல் சீசனில் மெக்கல்லத்திற்குப் பிறகு சதம் குவித்தவர் மைக்கேல் ஹசி. இவர் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் அந்த அணியின் பௌலர்களின் பந்துவீச்சை சிதைத்து 54 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 116 ரன்களை குவித்தார்.

ஹசி சென்னை சூப்பர் அணிக்காக 2008 முதல் 2013ஆம் ஆண்டு வரையிலும் பின்பு 2015ஆம் ஆண்டிலும் விளையாடினார். 2014 ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 50 போட்டிகளில் பங்கேற்றுள்ள இடதுகை பேட்ஸ்மேன் மைக்கேல் ஹசி 30.98 சராசரியுடன் 1768 ரன்களை குவித்துள்ளார். இதில் 13 அரைசதங்கள் மற்றும் 1 சதம் அடங்கும். தொடக்க ஆட்டக்காரராக சென்னை அணியில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி அணியின் வெற்றிக்கு உதவுவார் மைக்கேல் ஹசி.