கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களை விட பந்துவீச்சாளர்கள் அதிக முறை ஆட்டத்தை வென்று கொடுத்துள்ளனர். இது பெரும்பாலும் முந்தைய கால ஐபிஎல் தொடருக்கு பொருந்தும். ஐபிஎல் தொடர்களில் அதிகமாக சிறந்த மதிநுட்பமான பந்துவீச்சாளர்களே இடம்பெற்றிருப்பர். முக்கியமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஐபிஎல் தொடக்க சில சீசனில் அப்போதைய சிறந்த பந்துவீச்சாளர்களான முத்தையா முரளிதரன், பென் ஹுல்ஃபென்ஹாஸ், டாங் பொலிஞ்சர், மகாயா நிதினி, டிம் சௌதி ஆகியோர் இடம்பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.
இவர்கள் பங்குவகித்த காலத்தில் எம்.எஸ்.தோனி சரியாக அணியை வழிநடத்தி சிறப்பாக சர்வதேச அனுபவ பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி எதிரணி பேட்ஸ்மேன்களை கலங்கடித்தார். பந்துவீச்சாளர்களும் தங்களது முழு ஆட்டத்திறனை வெளிபடுத்தினர்.
நாம் இங்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த 3 சிறந்த வெளிநாட்டு பந்துவீச்சாளர்களை பற்றி காண்போம்
#3 முத்தையா முரளிதரன்
போட்டிகள் - 40, விக்கெட்டுகள் - 41, எகானமி - 6.30
இலங்கை கிரிக்கெட் லெஜென்ட் முத்தையா முரளிதரன் ஐபிஎல் தொடர் ஆர்மித்த முதல் போட்டியில் சென்னை சூப்பர் அணிக்காக விளையாடினார். ஐபிஎல் தொடரில் தனது முதல் விக்கெட்டை தன் நாட்டை சேர்ந்த குமார் சங்கக்காரா-வின் விக்கெட்டை வீழ்த்தினார். ஐபிஎல் வரலாற்றில் முரளிதரனின் புள்ளி விவரங்கள் சிறந்ததாக இருக்கிறது. முதல் 8 ஐபிஎல் போட்டிகளில் முழுவதுமாக 4 ஓவர்களை ஒவ்வொரு போட்டியிலும் வீசியுள்ளார். அத்துடன் அந்த 8 போட்டிகளில் 33 ரன்களுக்கு மேல் தனது பௌலிங்கில் அறிந்ததில்லை.
ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் மொத்தமாக 15 போட்டிகளில் முரளிதரன் பங்கேற்றார். அந்த 15 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் 4 ஓவர்களை வீசியுள்ளார். முதல் ஐபிஎல் சீசனில் 6.78 எகானமி ரேட்-டுடன் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார் முத்தையா முரளிதரன்.
2009 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் தனது பௌலிங்கில் 11 ரன்களை மட்டுமே அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் முரளிதரன். அந்த போட்டியில் சென்னை அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவர் அந்த ஐபிஎல் சீசனில் 5.22 என்ற சிறப்பான எகானமி ரேட்-டுடன் மொத்தமாக 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
2010 ஐபிஎல் தொடரில் முரளிதரனின் தேசிய அணியில் தனது சகவீரர்களான குமார் சங்கக்காரா, தில்கரத்னே தில்சான், மஹலா ஜெயவர்த்தனே, ஆன்ஜிலோ மேதிவ்ஸ் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார். அரையிறுதியில் டெக்கான் சார்ஜஸ் அணியுடனான போட்டியில் 142 ரன்கள் மட்டுமே எடுத்தது சென்னை அணி. இருப்பினும் பந்துவீச்சாளர்களின் மாயஜாலத்தால் 102 ரன்களிலேயே மடக்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
அப்போட்டியில் முத்தையா முரளிதரன் 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே தன் பௌலிங்கில் அளித்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். அத்துடன் டாங் பொலிஞ்சர் 4 ஓவர்களை வீசி 13 ரன்களை மட்டுமே அளித்து 1 மெய்டனுடன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அத்துடன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் முரளிதரன் 4 ஓவர்களை வீசி 17 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஐபிஎல் தொடர் ஆரமித்ததிலிருந்து சென்னை அணிக்காக விளையாடியுள்ளார் முரளிதரன். அனைத்து போட்டிகளிலும் 4 ஓவர்களை முரளிதரனுக்கு கேப்டன்கள் அளித்து விடுவர். அவரும். அதிக ரன்களை தனது பௌலிங்கில் அளிக்காமல் சிறப்பாக பந்துவீசுவார். ஐபிஎல் தொடரிலும் இவரது பௌலிங்கை எந்த பேட்ஸ்மேன்களாலும் அசைக்க முடியவில்லை.
முத்தையா முரளிதரன் சென்னை அணியின் சிறந்த வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர் ஆவார்.