#2 அல்பி மோர்கல்
போட்டிகள் - 78, விக்கெட்டுகள் - 76, எகானமி - 8.10
அல்பி மோர்கல் 2008 முதல் 2013 வரையிலான 5 ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடினார். இந்த காலகட்டத்தில் தனது சிறப்பான ஆல்-ரவுண்டர் ஆட்டத்திறனை சென்னை அணிக்காக வெளிப்படுத்தியுள்ளார். சென்னை அணிக்காக பௌலிங்கில் 68 விக்கெட்டுகளும், பேட்டிங்கில் 781 ரன்களையும் குவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அல்பி மோர்கலின் முதல் 3 விக்கெட்டுகள் ஏ.பி.டிவில்லியர்ஸ், விராட் கோலி, ஆடம் கில்கிறிஸ்ட் போன்ற தலைசிறந்த பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகள் தான். இவர் ஆட்டத்தின் முதல் மற்றும் இறுதி ஓவர்களை வீசுவதில் வல்லவராக திகழ்வார். இதனால் அல்பி மோர்கல் பவர்பிளே மற்றும் டெத் ஓவரை அதிகமாக வீசுவார். அந்த ஓவர்களில் சிறந்த எகனாமிக்கல் ரன்-ரேட்டை கடைபிடப்பார்.
அல்பி மோர்கல் சென்னை அணிக்கு விளையாடிய காலத்தில் அந்த அணியின் டெத் ஓவரை இவரும் டுவைன் பிரவோவும் வீசுவர். இவருக்கு முதல் இரு ஐபிஎல் தொடரிலும் 29 விக்கெட்டுகளை வீழ்த்தி மிகவும் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
2010 ஐபிஎல் தொடரின் அரையிறுதியில் டெக்கான் சார்ஜஸின் முக்கிய விக்கெட்டான ரோகித் சர்மா-வின் விக்கெட்டை அல்பி மோர்கல் வீழ்த்தினார்.
மும்பை இந்தியன்ஸ் அணியுடனான இறுதிப் போட்டியில் சென்னை அணியின் சிறந்த பௌலர் டாங் பொலிஞ்சர் 18வது ஓவரில் கீரன் பொல்லார்டிடம் 22 ரன்களை வாரி வழங்கினார்.
19ஓவரை அல்பி மோர்கல் வீச வரும்போது மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற 12 பந்துகளுக்கு 33 ரன்கள் தேவைப்பட்டது. இவர் 19வது ஓவரை சிறப்பாக வீசி 6 ரன்கள் மட்டுமே தனது பௌலிங்கில் அளித்து பொல்லார்டின் விக்கெட்டை வீழ்த்தினார்.
மோர்கல் சென்னை அணிக்கு இக்கட்டான சூழ்நிலையில் தனது பேட்டிங் மற்றும் பௌலிங் திறமையை சிறப்பாக வெளிபடுத்தி வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார். நன்றாக நிலைத்து ஆடிக் கொண்டிருக்கும் வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் வல்லவராக திகழ்வார் அல்பி மோர்கல்.
2011 ஐபிஎல் தொடரில் இவர் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைக்க பெரிதும் உதவினார். எப்பொழுதுமே மோர்னே மோர்கல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த தொடக்க பௌலர் ஆவார்.