#1 டுவைன் பிரவோ
போட்டிகள் - 77, விக்கெட்டுகள் - 93, எகானமி - 8.43
டுவைன் பிரவோ எந்த அணியில் விளையாடினாலும் அந்த அணியின் டெத் பௌலராக திகழ்கிறாரர். இவரது பௌலிங் வெவ்வேறு கோணங்களில் திரும்பும். எப்பொழுது யார்க்கர் வீசுவார் எப்போது பந்தை மெதுவாக வீசுவார் என்பதை பேட்ஸ்மேன்கள் கணிப்பது மிகவும் கடினம். குறிப்பாக டெத் ஓவரில் இவரது யார்க்கர் மற்றும் பவுன்ஸரை எதிர்கொள்வது பேட்ஸ்மேன்களுக்கு சற்று கடினமாக இருக்கும்.
2010 ஆம் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் வெற்றிக்கு இவரது பங்களிப்பு இல்லை. ஏனெனில் 2011ல்தான் சென்னை அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். தனது முதல் ஐபிஎல் சீசனில் 6 போட்டிகளில் மட்டுமே பங்கேற்ற அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இவரது சிறந்த பந்துவீச்சு 2013 ஐபிஎல் தொடரில் தான் வெளிபட்டது. அந்த சீசனில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி ஊதா நிற தொப்பியை கைப்பற்றினார். 2013 ஐபிஎல் சீசனில் 4 போட்டிகளில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் பெரும்பாலும் ரோகித் சர்மா (இரு முறை), ஷேன் வாட்சன் (இரு முறை), தினேஷ் கார்த்திக், கல்லீஸ், அம்பாத்தி ராயுடு, இயான் மோர்கன், ஷான் மார்ஷ் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்துவதிவ் வல்லவர்.
2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணியுடனான இறுதிப் போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார் பிராவோ. ஆனால் சென்னை அணியின் பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் அந்த சீசனில் தோல்வியடைந்தது.
2014 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் பிராவோ காயம் ஆனதால் அந்த தொடர் முழுவதும் பங்கேற்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். மீண்டும் 2015 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணக்காக களமிறங்கி 26 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
2015 ஐபிஎல் தொடரின் முதல் அரையிறுதியில் பார்திவ் படேல், ரோகித் சர்மா, பொல்லார்ட் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணியின் பலத்தை குறைத்தார் டுவைன் பிரவோ.
2018 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான முதல் அரையிறுதிப் போட்டி மற்றும் இறுதி போட்டியில் ஷகிப் அல் ஹாசனின் விக்கெட்டை வீழ்த்தினார் பிராவோ. இதே ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான லீக் போட்டியில் டுவைன் பிரவோ கடைசி ஓவரில் ரஷித் கானிற்கு பந்தை வீசி 4 ரன்கள் வித்தியாசத்தில் நூழிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றி பெற செய்தார்.
பௌலிங் மட்டுமல்லாமல், நிறைய முறை இக்கட்டான சூழ்நிலையில் கடைசி ஓவரில் பிராவோ தனது அதிரடி பேட்டிங்கை வெளிபடுத்தியுள்ளார்.
டுவைன் பிரவோ எப்பொழுதுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த டெத் ஓவர் பௌலர்.