டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போழுதும் பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டுமே அனல் பறக்கும் விதமாக இருக்கும். மற்ற இருவகை கிரிக்கெட் போட்டிகளான ஓடிஐ/டி20-யானது பேட்டிங் அல்லது பௌலிங் என இரண்டில் ஏதேனும் ஒன்றிற்கு மட்டுமே சாதகமாக இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரும்பாலும் பேட்ஸ்மேன்கள் பௌலர்களிடம் மிகவும் பணிந்து நடப்பர். இந்த வகை கிரிக்கெட்டில் பெரும்பாலான ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களை விட பௌலர்களுக்கு அதிகம் ஒத்துழைக்கும். ஆகஸ்ட் 1 அன்று தொடங்க உள்ள டெஸ்ட் சேம்பியன் ஷீப்பிற்காக கிரிக்கெட் வீரர்கள் தங்களை ஓடிஐ கிரிக்கெட்டிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டிற்காக மாற்றி வருகின்றனர்.
டெஸ்ட் சேம்பியன் ஷீப்பில் உலகில் உள்ள தலைசிறந்த பௌலர்கள் தங்கள் அணிக்காக வெற்றி வாய்ப்பை தேடும் முயற்சியில் களமிறங்குவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர். சமீபத்தில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக அசத்தி வருகிறது. இதற்கு காரணம் அந்த அணியின் வலிமையான பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிபடுத்துவதே காரணமாகும். இதேபோல் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தி வருகின்றனர். இதற்கு காரணமாகவும் அந்தந்த அணிகளின் பௌலிங் வலிமையே காரணமாகும். ஆனால் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் சீரன ஆட்டத்தை வெளிபடுத்த தவறுகின்றனர். இதற்கு காரணம் அந்த அணிகளில் டெஸ்ட் வீரர்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் தங்களது இளம் வயதிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதும் ஒரு காரணமாகும். இந்த இளம் வயது ஓய்வினால் அவர்கள் அளவிற்கு திறமை கொண்ட வீரர்களை மீண்டும் அணிக்கு கொண்டு வர அந்த அணி நிர்வாகம் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறது. நாம் இங்கு தங்களது இளம் வயதிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற 3 பௌலர்களைப் பற்றி காண்போம்.
#3 ஜாஃபேர் அன்சாரி
ஜாஃபேர் அன்சாரி முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர். இவர் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மற்றும் கடைநிலையில் பேட்டிங் செய்யும் திறன் கொண்டவர். இவர் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் தொடரகல் சர்ரே அணிக்காக 2010 முதல் 2017 வரை 71 முதல் தர போட்டிகளில் பங்கேற்று 128 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அத்துடன் கடைநிலையில் சிறப்பான பேட்டிங்கை வெளிபடுத்தி அசத்தியுள்ளார். இவர் மழையின் காரணமாக கைவிடப்பட்ட அயர்லாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். எதிர்பாராத விதமாக இதுவே அவரது கடைசி சர்வதேச ஓடிஐ-ஆகவும் அமைந்தது.
இங்கிலாந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்து பாகிஸ்தானிற்கு எதிராக விளையாடிய போது ஜாஃபேர் அன்சாரி அந்த அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால் அச்சமயத்தில் இவருக்கு ஏற்பட்ட காயத்தினால் அத்தொடரில் விளையாட இயலவில்லை. இறுதியாக வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த போட்டியில் இரு விக்கெட்கள் மற்றும் 13 ரன்களை அடித்தார். அதன்பின் இந்தியாவிற்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஜாஃபேர் அன்சாரி இடம்பெற்றிருந்தார். இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் அஜீன்க்யா ரகானேவை முதல் இன்னிங்சிலும், ரவிச்சந்திரன் அஸ்வினை இரண்டாவது இன்னிங்ஸிலும் ஜாஃபேர் அன்சாரியால் வீழ்த்தப்பட்டனர். முதுகுவலியினால் அதன்பின் இத்தொடரிலிருந்து விலகினார். அதன்பின் ஒரு சர்வதேச போட்டிகளில் கூட இவர் பங்கேற்கவில்லை. ஏப்ரல் 2017 அன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அப்பொழுது ஜாஃபேர் அன்சாரியின் வயது 25.