#1 லாசித் மலிங்கா
கடைசி ஓவரில் எதிரணி வெற்றி பெற 3 ரன்கள் தேவைப்படும் போது தொடர்ந்து சரியான யார்க்கரை வீசி தன்னுடைய அணிக்கு வெற்றி வாய்ப்பை தேடித் தரக்கூடிய பௌலராக லாசித் மலிங்கா திகழ்வார். தற்போதைய தலைமுறையின் சிறந்த டெத் ஓவர் பௌலராக லாசித் மலிங்கா திகழ்கிறார். இவரது அன்ஆர்தோடாக்ஸ் பௌலிங்கின் மூலம் தனிதிறமை கொண்டு கிரிக்கெட் உலகில் வலம் வந்தார். 2004ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி, முதல் போட்டியிலேயே 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இலங்கை டெஸ்ட் அணியில் தனது இடத்தை உறுதிபடுத்திக் கொண்டார். இதற்கு காரணம் அவரது வேகம் மற்றும் ஆடுகளத்தில் அவர் உருவாக்கும் கூடுதல் பவுண்ஸ். லாசித் மலிங்காவிற்கு 2006ல் நடந்த நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் சிறப்பாக அமைந்து பெரும்பாலான இளம் வீரர்களுக்கு முன் மாதிரியாக மாறினார்.
இதன்மூலம் இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக லாசித் மலிங்கா வலம் வந்தார். அதே சமயத்தில் இலங்கை அணியின் டி20 மற்றும் ஓடிஐ கிரிக்கெட் அணியின் முன்னணி பௌலராகவும் லாசித் மலிங்கா இருந்தார். குறிப்பிட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் வகைகளில் சிறந்து விளங்கிய லாசித் மலிங்கா, தனது உடல் தகுதியை சரியாக கடைபிடிக்கவும், ஓடிஐ மற்றும் டி20 கிரிக்கெட்டில் முழு கவனத்தையும் செலுத்தும் நோக்கில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அச்சமயத்தில் மலிங்காவின் வயது 28 ஆகும். 30 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற இவர் 101 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.